""ஹலோ தலைவரே, 2019-ல் ஆட்சியைத் தக்க வச்சிக்கணும்னு நினைக்கிறார் மோடி. ஆனால், பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எதுவும் அவருக்கு சாதகமா இல்லையே, ஒவ்வொருத்தர் அக்கவுண்ட்டிலும் 15 லட்ச ரூபாய்ங்கிற வாக்குறுதியில் ஆரம்பிச்சு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.ன்னு மோடியின் பா.ஜ.க. அரசு மக்களைத் திண்டாட வச்சிக்கிட்டிருக்கு''’

Advertisment

svsekar""அதுமட்டுமில்லப்பா.. மோடியோட பரிவாரங்கள் பண்ற அலப்பறை இருக்கே, அது கத்திரி வெயிலைவிட காட்டமா இருக்கு. தமிழ்நாட்ல ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் வாயாலயே வடை சுட்டு, சொந்தக் கட்சிக்கே ஆப்பு சீவுகிற மாதிரி, திரிபுராவில் பா.ஜ.க. முதல்வரா உட்கார்ந்திருக்கும் பிப்லப் தேவ், இளைஞர்கள் அரசு வேலையைத் தேடுறதுக்கு பதிலா பீடா கடை வைக்கலாம். மாடு மேய்க்கிற வாய்ப்பைத் தேடலாம், பன்னி கூட வளர்க்கலாம்ன்னு சொல்லி அதிர வச்சிருக்காரு. அதோடு, அரசு நிர்வாகத்தை நடத்தும் சிவில் சர்வீஸுக்கு சிவில் என்ஜினியர்களைத்தான் நியமிக்கணும்னும் சொல்லி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலரையும் அதிர வச்சிருக்காரு. அதனால பிப்லப் தேவுக்கு மோடி சம்மன் அனுப்பியிருக்காரு''’

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, ஊடகங்களுக்குத் தீனி போடுறமாதிரி பேசாதீங்கன்னு போன வாரம்தான் மோடி, அவரோட கட்சிக்காரங்களைக் கண்டிச்சார். ஆனாலும், அவர் பேச்சையே கேட்காம தீனி போட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியப் பிரதேசத்தை ஆளும் சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு, போலீஸுக்கு ஆள் எடுத்தது. அதில் கலந்துக்கிட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் மார்பில், அவர்களின் சாதியை, ஸ்கெட்ச் பேனாவால் எழுதி, அவர்களைத் தனியா பிரிச்சிக் காட்டி, மனித உரிமையையே நசுக்கியிருக்காங்க. இந்த வன்கொடுமைக்கு இப்ப நாடே கண்டனம் தெரிவிக்க ஆரம்பிச்சிருக்கு. இத்தனைக்கும் விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலம் அது''’

""சரிப்பா, பா.ஜ.க. நடத்திவரும் இப்படிப்பட்ட, மக்களுக்கு எதிரான கேலிக் கூத்தையெல்லாம் காங்கிரஸ் எப்படி முறியடிச்சி, தனது ஆட்சிக் கனவை நிறைவேத்திக்கப் போவுது?''’

Advertisment

""ராகுல், காங்கிரஸ் கட்சியின் பலத்தை பா.ஜ.க. அரசு மீதான மக்களின் கோபத்தை ஒட்டி வெளிப்படுத்தும் விதத்தில் ஏப்ரல் 29-ந் தேதி டெல்லியில் பிரமாண்டமான பேரணியை நடத்திக் காட்டினார். ரெண்டரை லட்சம் பேர் அமரும் ராம்லீலா மைதானம் நிரம்பியதோட, கொளுத்துகிற வெயிலில் இருமடங்கு கூட்டம் வெளியே நின்னுச்சு. மேடையில், முதல்வரிசையில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், ப.சி. போன்ற தலைவர்கள் அமர்ந்திருந்தார்கள். பேசிய அத்தனை பேரின் பேச்சிலும் அனல்தெறித்தது.''’

""பா.ஜ.க.வுக்கு எதிரா, நாடாளுமன்றத்திலேயே பிரதான எதிர்க்கட்சிங்கிற அந்தஸ்த்தைப் பெறமுடியாத காங்கிரஸ், தன் சொந்த பலத்தை மட்டுமே வச்சிக்கிட்டு பா.ஜ.க.வை வீழ்த்த நினைப்பது கஷ்டமான காரியம். பா.ஜ.க.வை எதிர்க்கும் மற்ற கட்சிகளை ஒருங்கிணைச்சாதான், அது ஆட்சியைப் பத்தி நினைச்சிப் பார்க்கமுடியும். அதற்கு ஏதாவது வியூகத்தை வச்சிருக்குதா?''

raghul

""ராகுல்காந்தியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸுக்கு இளம் தலைவர்களை நியமிப்பதில்தான் இப்ப கவனமா இருக்கார். தேர்தல் கூட்டணி பத்தியெல்லாம் அவர் இன்னும் இறுதி முடிவுக்கு வரலை. அதேசமயம், பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநிலக் கட்சிகள், வலிமையான கூட்டணியை அமைப்பதில் தீவிரமா இருக்கு. ஏற்கனவே இதுபத்தி மேற்குவங்க முதல்வர் மம்தாவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் சந்திச்சிப் பேசியிருக்காங்க. இப்ப சந்திரசேகர் ராவ், சென்னை வந்துட்டுப் போயிருக்கார். கோபாலபுரத்தில் கலைஞரைப் பார்த்து, அவரது உடல்நலத்தை விசாரிச்சதோடு, மதிய உணவை, மு.க.ஸ்டாலினோடு சாப்பிட்டபடியே, அவரிடம் அரசியல் ஆலோசனையை நடத்தியிருக்கார். மறுநாள் சந்திரசேகர்ராவ்வை கனிமொழியும் சந்திச்சு பேசியிருக்காரு.''’

""தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது பற்றிப் பேசிக்கிட்டாங்களா? காங்கிரஸ் இல்லாத அணியாக இருந்தால், அது பா.ஜ.க.வின் பி டீமாக மாறி, மறுபடியும் மோடி பிரதமராகத்தான் துணை நிற்கும்னும், 2016-ல் தமிழ்நாட்டில் ம.ந.கூ. எப்படி ஜெ. மீண்டும் முதல்வராக மறைமுகமா உதவியதோ அதுபோன்ற நிலைதான் ஏற்படும்னு அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?''’

""பா.ஜ.க ஆட்சி மறுபடியும் அமையக்கூடாதுன்னு எதிர்க்கட்சிகள் நினைச்சா, ஓட்டுகள் சிதறும் வகையிலான கூட்டணியை உருவாக்கக்கூடாது. காங்கிரசும் இணைந்த கூட்டணிதான் சரியா இருக்கும். இல்லைன்னா அது பா.ஜ.க.வின் பி டீம் ஆகும் ஆபத்தும் இருக்குது. ஸ்டாலினுடனான சந்திப்பு முடிஞ்சி பத்திரிகையாளர்களை சந்திச்ச சந்திரசேகர்ராவே, "நாங்க இப்ப மூன்றாவது நான்காவது அணி அமைப்பது பத்தியெல்லாம் விவாதிக்கலை'ன்னு சொல்லியிருக்காரு. நாம் போனமுறை பேசிய மாதிரி, பா.ஜ.க.வுக்கு எதிரான, வலுவான கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் அமையணுங்கிற கருத்துதான், அகில இந்திய அளவில், அனைத்து அரசியல் கட்சிகளின் எண்ணமா இருக்கு. அதனால் அந்தந்த மாநிலத்திலும் பலமா இருக்கும் கட்சி, அதிக இடங்களில் நிற்பதுங்கிற எண்ணமும் உருவாகியிருக்கு.

stalin-chandrasekar

தமிழ்நாட்டில் எம்.பி. தேர்தல் கூட்டணி பற்றி ஸ்டாலினோட கணக்கு என்ன?

ஸ்டாலினைப் பொறுத்தவரை தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயிக்கணும்னு நினைக்கிறாரு. அதனால, தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு சீட்டுக்களை அள்ளிக்கொடுக்காமல் அளவா கொடுக்கணும்ங்கிற வகையில் கூட்டணி ரூட் போடுறாரு. மக்கள் பிரச்சினைகளில் தங்களோடு இணைந்து போராடும் கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர நினைப்பதால், அவங்களுக்கான சீட்டுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுது. எந்த வகையிலும் வெற்றி வாய்ப்புகள் பறிபோயிடக்கூடாதுங்கிற வகையில், காங்கிரசுக்கு கடிவாளம் போடும்படி ஒரு வியூகத்தை தி.மு.க. வகுத்திருக்கு.''’

""எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிரா இப்படி பல்வேறு வியூகங்களை வகுத்துக்கிட்டிருக்கும் நிலையில், 2-ந் தேதி டெல்லிக்குப் போகும் எடப்பாடி, தன்னை சந்திக்க மோடி அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கலைன்னு சொல்லியிருக்காரே?''

""உண்மைதாங்க தலைவரே, மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட பிரதமர் மோடி தலைமையில், அனைத்து மாநில முதல்வர்களையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கு. இதன் கூட்டம் வரும் 2-ந் தேதி டெல்லியில் நடக்குது. இந்த சமயத்தில் பிரதமர் மோடியை தனியே சந்திச்சிப் பேச அப்பாயின்ட்மெண்ட் கேட்டார் எடப்பாடி. ஆனால் மோடியோ, "கர்நாடக தேர்தல் வேலைகளில் நான் இப்ப பிஸி. அந்தத் தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்'ன்னு, அப்பாயின்ட்மெண்ட் கொடுக்க மறுத்துட்டார். அதனால் ரொம்பவே மனம் நொந்துபோயிருக்கார் எடப்பாடி''’

""ஓ.பி.எஸ். தரப்பில் இருந்தும் எடப்பாடிக்கு நோஸ் கட்டாமே?''’

""முதல்வரா இருக்கும் எடப்பாடி, அந்தந்தத் துறை அமைச்சர்களின் முன்னிலையில் ரெவ்யூ மீட்டிங்கை நடத்தினார். இதேபோல் ஓ.பி.எஸ்.சிடமும் உங்க துறைகள்லயும் ரெவ்யூ மீட்டிங்கை நடத்திடலாம்ன்னு கேட்டிருக்கார். ஆனால் ஓ.பி.எஸ்.சோ, அதுக்கு என்ன இப்ப அவசரம்ன்னு அலட்சியமா சொல்லிட்டார். சக அமைச்சர்களிடம் இதுபற்றிப் பேசிய ஓ.பி.எஸ்., எடப்பாடி, தனக்குக்கீழ் இருக்கும் துறைகளின் ரெவ்யூ மீட்டிங்கைத் தானே நடத்திக்கிட்டாரே, அதேபோல் நானும் என் துறைகளின் கூட்டத்தை நடத்திக்கிறேன்னு சொல்ல, இதைக் கேள்விப்பட்ட எடப்பாடி, ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம்.''’’

""கோட்டையிலும் ஒரு பஞ்சாயத்து நடந்துச்சாமே?''’

""அதுவும் உங்க கவனத்துக்கு வந்துடுச்சா, விவரமாவே சொல்றேங்க தலைவரே.''

""சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியரான சேதுலதா என்பவர், ஏற்கனவே பலான புகாரில் அடிபட்டுக்கொண்டிருக்கும் ராஜ்பவனுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், "எனக்கு என் கல்லூரியின் சக பேராசிரியரான கௌரிசங்கர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். நான் இது தொடர்பாக உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவாலிடம் புகார் செய்தேன். அவர் ஒருவரிடம் பேசச்சொன்னார். அந்த நபரோ, என்னை அங்கங்கே வரச்சொல்லி மோசமாகப் பேசினார். இதை சுனில் பாலிவாலிடம் சொன்னபோது, அவரிடமிருந்தும் டார்ச்சர் வந்தது. எனக்கு நீதி வேண்டும்'னு அதிரவச்சிருந்தார். இது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கவனத்துக்குப் போக திகைச்சுப்போன அவர், சுனில் பாலிவாலையும் பெண் பேராசிரியர் சேது லதாவையும் 27-ந் தேதி அழைத்து சமாதானம் செய்துவைத்தார். "நான் யாரிடமும் சுனில் பற்றி புகார் சொல்லவில்லை' என்றும் சேது லதாவிடம் அப்ப எழுதி வாங்கப்பட்டிருக்கு. பெண் பேராசிரியர் போலி சர்டிபிகேட்டுகளைக் காட்டி பணியில் சேர்ந்தவர் என்றும் உயர்கல்வி வட்டாரத்தில் சொல்லப்படுது.''’

""அந்தப் பஞ்சாயத்து இருக்கட்டும். ஊடகத்தில் பணியாற்றும் பெண்களை கொச்சையாகப் பேசியதால் வழக்கை சந்திக்கும் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் தர மறுத்த உயர்நீதிமன்றம், அவரைக் கைது செய்யவும் தடையில்லைன்னு உத்தரவிட்டிருக்கு. ஆனாலும், எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவதில் தாமதமாவதில் அவருடைய உறவினரான தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போடும் பிரேக்தான் காரணம்னும், இல்லைன்னா ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழக போலீஸ் சேகரை கைது செய்திருக்கும்னும் விமர்சிக்கப்படுதே?''

""ஆமாங்க தலைவரே, தன்னைச் சுற்றும் குற்றச்சாட்டுகளாலும், அதிகாரப் புள்ளிகளின் அத்துமீறல்களைச் சகிக்கமுடியாமலும் ஏற்கனவே மெடிக்கல் லீவில் வீட்டுக்குப் போனவர்தானே அவர். இப்பவும் அவரது அந்த மனநிலை மாறலை. அதனால், அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் நாற்காலியில் அமர விரும்பறாராம். ஆனால், கவர்னரின் செயலாளரான ராஜகோபால், அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்கன்னு ஆலோசனை சொல்றாராம். ஒருவேளை இவர் விலகிப்போனால், அவர் நாற்காலியில் ஏற்கனவே தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகனையே மீண்டும் உட்காரவைக்க, தொழிலதிபர்கள் டீம் ஒன்று களமிறங்கியிருக்கு''’

kamal

“மக்கள் நீதிக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் வேகமா களமிறங்க நினைக்கிறாரே.. மாவட்ட வாரியான சுற்றுப்பயண விவரத்தை வெளியிட்டிருக்கும் அவர், மக்கள் பிரச்சினைகளை, ஆட்சியின் குறைகளை எடுத்துரைக்கும் "விசில்' என்கிற செயலியை 30-ந்தேதி வெளியிட்டிருக்காரு. ரொம்ப லேட்டா இது வந்திருந்தாலும், தன் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் இதை ஆட்சிக்கு எதிரான அபாயச் சங்காக பயன்படுத்தலாம்னு சொல்லியிருக்காரு. உள்ளாட்சித்தேர்தல் களத்தில் கவனம் செலுத்தும் கமல் மீது ஆளுங்கட்சியின் பார்வை உக்கிரமா இருக்கு.’’

sagayam

""நானும் ஒரு புது அரசியல் அமைப்பின் தீவிரத்தைப் பற்றி சொல்றேன்.… ஊழல் பேர்வழிகளை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், தன் ’மக்கள் பாதை’ இயக்கத்தை அரசியல் களத்தில் இறக்கும் முடிவில் இருக்காராம். தமிழகம் முழுக்க இருக்கும் தன்னார்வ அமைப்பினரை ஒருங்கிணைப்பதோடு, யார் யார் தேர்தல்ல நிற்க விரும்பறாங்கன்னும் தன் ஆட்கள் மூலம் விசாரிச்சிக்கிட்டிருக்காராம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளா இருந்தவர்களால் 2 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது. அதனால் இன்னும் 2 ஆண்டுகள் சர்வீஸ் இருக்கும் நிலையில், அவர் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு நேரடி அரசியலுக்கு வரலாம் அல்லது தங்கள் அமைப்பினரை களமிறக்கி வழிநடத்தலாம். எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு ரெடியாயிட்டாரு.

----------------------------

இறுதிச்சுற்று!

பதவியும் விசாரணையும்!

ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யர், உள்ளாட்சி அமைப்புகளின் மேல்முறையீட்டு அதிகாரியாக மறுபடியும் பதவி பெறுகிறார். இந்த பதவி மூன்று வருடங்களுக்கானது. இந்த பதவி நீட்டிப்பை கவர்னர் ஏற்க மாட்டார் என்றுதான் எதிர்பார்ப்பு நிலவியது. அதை மீறி எடப்பாடியின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்றதும், அவரது பதவி ஏற்பை கவர்னர் மாளிகையில் நடத்துவதும், நிர்மலாதேவி விஷயத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை நீர்த்துப் போக செய்வதற்காகத்தான் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

-தாமோதரன் பிரகாஷ்

;