’"ஹலோ தலைவரே, தேர்தலுக்கான காலம் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கு எலக்ஷன் பீவர் வந்திருக்கிறது. அதனால் அந்தக் கட்சிகள் கூட்டணிக்கு அல்லாடும் போக்கைப் பார்க்க முடிகிறது.''”

Advertisment

"ஆமாம்பா. எதிரும் புதிருமாகக் கூட கூட்டணி வைக்க சிலர் பரபரப்பது குறித்து அறிய முடிகிறதே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, ஓ.பி.எஸ்.ஸும் டி.டி.வி.தினகரனும் பல்வேறு கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் ஓ.பி.எஸ்., த.வெ.க.வுடன் பேசிவருவதோடு, தி.மு.க. தரப்பிலும் பேசி வருகிறார் என்று திகைக்க வைக்கிறார்கள். தி.மு.க.விலேயே இணைய அவர் டீலிங் நடத்திவருவதாகவும் தகவல்கள் வருகின்றன.  இடையில் டெல்லி சென்ற ஓ.பி.எஸ்., அங்கிருந்து திரும்பும்போது பெரும் பணத்துடன் தமிழகம் திரும்பியிருக்கிறார் என்றும் பரபர செய்திகள் கிளம்புகின்றன. காங்கிரஸி லேயே சிலர் த.வெ.க.வுடனான கூட்டணிக்கு ஆசைப்படும் நேரத்தில், த.வெ.க. தலைவ ரான நடிகர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுலைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்படி தேர்தல் கூட்டணிக்காக தமிழக அரசியல் கட்சிகள் அல்லாடி வருகின்றன.''”

"இதற்கிடையே அரசியல் கட்சிகள் நடிகர் விஜய்யின் கரூர் உயிர்ப்பலிகள் பற்றி விமர்சிக்கத் தயங்கினாலும், ஒரு பாதிரியார் பகிரங்கமாக அவரைப் போட்டுத் தாக்கி இருக்கிறாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, வளமான கிறிஸ்தவ அமைப்புகள் பலவற்றின் பொருளாதார ஆதரவால் தான் நடிகர் விஜய், த.வெ.க.வைத்  தொடங்கி நடத்திவருகிறார் என  கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே பேச்சு அடிபடுகிற நிலையில், கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு பாதிரியார், நடிகர் விஜய்யின் முகத்திரையை தைரியமாகக்  கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள தேவாலயத்தில் டிசம்பர் 22ஆம் தேதி சிறப்புத் திருப்பலி  நிகழ்ச்சி நடந்தது. அங்கு ஆலய பங்குத்தந்தை அலாய் சியஸ் முன்னிலையில்,  நெல்லை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல் வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார்.''

rang1

"ம்...''”

"அப்போது அவர், "நம்  பிள்ளைகள்கிட்ட நீ என்னவா வரப் போகிறாய் என்று கேட்டுப்பாருங்கள். விஜய் ரசிகராக வரப்போகிறேன்னு அவர்கள் சொல்லுவார்கள். 41 பேரை கொன்று குவித்தவனை, கையில் விலங்கு போட்டது போல் கைகளை உயர்த்திக் காட்டுகிறவனை, நாம் ஏற்கலாமா? நான் விஜய்க்கு எதிரி அல்ல, ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் இப்படிப்பட்ட சினிமா நடிகன்  பின்னால் ஏன் போய்க்கொண்டிருக்கிறார் கள்?'’என்றெல்லாம் பகிரங்கமாக விமர்சித்தார். பாதிரியார் காட்வினின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் உள்ள த.வெ.க., தொண்டர்கள், சர்ச் பங்கு தந்தை அலாய்சியஸிடம் முறையிட்டதால், அவர் அவர்களை சமாதானப்படுத்தி வருத்தம் தெரிவித்தா ராம். விஜய்க்கு கிறிஸ்தவர்கள் தரப்பிலிருந்தே எழுந்துவரும் எதிர்ப்பு அவர் தரப்பை அதிர வைத்திருக்கிறது என்கிறார்கள்.''”

"காங்கிரஸை கடுமையாக ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார் என்கிறார்களே?''”

"கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் நெருக்கடி ஏற்படுத்தும்விதமாக, காங்கிரஸின் சீனியர்களில் ஒருவரான கிரீஸ் சோடங்கரே, தேசிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "தேர்தல் நேரத்தில் நாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஆட்சி அதிகாரம் எங்களுக்குத் தேவை. அதனால்தான் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கோருகிறோம்' என்று தெரிவித்திருந்தார். ராகுலின் நெருங்கிய நண்பரான இவர், அவரது  ஒப்புதல் இல்லாமல் இப்படி பேசியிருக்கமாட்டார் என்று கருதும் தி.மு.க., இவரது பேட்டியை ரசிக்கவில்லை. இந்த நிலையில் ஸ்டாலினை காங்கிரஸின் மற்றொரு சீனியரான ப.சி. சந்தித்தார். அப்போது அவரிடமே ஸ்டாலின் "நமது கட்சிகளுக்கு இடையே உறவு முறியக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அந்த நேர்மை காங்கிரஸுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எங்களால் தனித்து நின்றும் ஜெயிக்க முடியும்'’ என்று கறார்க்குரலில் தெரிவித்தாராம்.''”

"தி.மு.க.வில் வைப் வித் எம்.கே.எஸ். எனும் டிஜிட்டல் பிளாட்பார்ம் புதிதாக வெளியிடப்பட்டி ருக்கிறதே?''”

"தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எங்கு சென்றாலும் இளைஞர்களுடன் கலந்துரையாடுவதை வழக்க மாக வைத்திருப்பவர்.  அந்த வகையில், தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி புதுப்புது ஐடியாக்களுடன் அவரது உரையாடல்கள் வளர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, "வைப் வித் எம்.கே.எஸ்.' எனும் புதிய டிஜிட்டல் ப்ளாட்ஃபார்மை வெளியிட்டுள்ளது தி.மு.க. இனி வரும் நாட்களில், வைப் வித் எம்.கே.எஸ். என்பதன் வழியாக பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்களிடம் உரையாட இருக்கிறாராம் ஸ்டாலின். முதல் கட்டமாக தமிழக இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் ஸ்டாலின் உரையாடி, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் பல் வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்களோடும் அவர் உரையாட இருக்கிறாராம். இந்த, "வைப் வித் எம்.கே.எஸ்.' இளைஞர்களின் நிகழ்கால மற்றும் எதிர்காலக் கனவுகளின் திறவுகோலாக இருக்கும் என்கிறார்கள் தி.மு.க.வினர்.''” 

"கனிமவளத்துறை குவாரிகளிடம்  ஒரு கும்பல், தேர்தல் நிதி கேட்டு வருகிறதாமே?''”

"கோவை மாவட்டத்திலுள்ள 400 குவாரி களை குறி வைத்து, ’தேர்தல் நிதியாக ஒவ்வொரு குவாரியும் தலா ரூ.3 லட்சம் தரவேண்டும். இது புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணை இயக்குநரின் ஆணை’என ஆளுங்கட்சியின் பெய ரைக் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது ஒரு டீம். மேலும், கொடுக்கின்ற பணம்  ரொக்கமாக வேண்டும் எனவும், முகவரியில்லாத ராயப்பன் என்பவரிடமே இந்த பணத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் நிர்பந்திக்கிறார்களாம். இதனால் டென்ஷனான குவாரி தரப்பு, இதுகுறித்து கனிமவளத் துறைக்கே புகார்களை அனுப்ப, வசூல் குறித்து அமைதிகாத் துள்ளதாம் இயக்குநர் தரப்பு.''”

"லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஏகத்துக்கும் புகார்கள் கிளம்புதே?''”

"லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில அலுவலகங் களில் அவர்களே பணத்தை வைத்து விட்டு, ரகசிய சோதனை எனும் பெயரில் சோதனை மேற்கொண்டு, பணத்தை எடுத்து வழக்குகளைப் பதிவு செய்து வருகிறார்களாம். உதாரணத்திற்கு, நெல்லை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் அவர்கள் இப்படி கோல்மாலில் இறங்க, அது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம். அதேபோல்,   கோவை சிங்காநல்லூரிலுள்ள வெள்ளலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில்  அங்குள்ள புரோக்கர் ஒருவரைப் பிடித்து, செட்டப் பணத்தை கொடுத்து வேலையைக் காட்டியது லஞ்ச ஒழிப்புத்துறை. ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீஸார்தான் தன்னிடம் பணத்தைக் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னார்கள் என அந்த புரோக்கர் பெருமை பேசி அம்பலப்படுத்தி விட்டாராம்.''”

"காஞ்சி சங்கர மடத்துல பக்தர்களிடமிருந்து முணுமுணுப்புகள் கிளம்புதே,…என்ன விவரம்?''”

"காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மறைவுக்குப் பின் சங்கர விஜயேந்திர சரஸ்வதி பொறுப்புக்கு வந்தார். அதேசமயம் மடத்தின் மேலாளராக ஆந்திராவைச் சேர்ந்த அரவிந்த் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். இவர் பக்தர்களிடையே பேதம் பார்ப்பதாக புகார்கள் வர ஆரம்பித்திருக்கிறது. அதிகாலை மூன்று மணிக்கு நடைபெறும் மார்கழி மாத சந்திர மௌலீஸ்வர பூஜைக்கு, சங்கர மடத்தின் மகா பெரியவரின் பிருந்தாவனத்துக்கு வரும் தெலுங்கு பேசும் பிராமணர்களை எந்தக் கெடுபிடியும் இல்லா       மல் உள்ளே அனுப்புவதாகவும், அதுவே மற்றவர்கள் எனில் மேல்சட்டை எதுவும் அணியாமல்தான் செல்லவேண்டும் என நிர்பந்தப்படுத்துவதாகவும் முணுமுணுப்புகள் எழுந்திருக்கின்றன.''”

"திருப்பூர் ஆக்ஸிடென்ட் விவகாரம் சென்னை வரைக்கும் ரீச்சாகுதே என்ன விவகாரம்?''”

"ஓ... அங்க வரைக்கும் தகவல் வந்துடுச்சா? கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி அதிகாலை திருப்பூர் அவிநாசி சாலையில் எஸ்.பி.ஏ. தியேட்டரருகே அதிவேகமாக வந்த சொகுசுக் கார், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதியதில் அவர்கள் பலத்த காய மடைந்தனர். திருப்பூர் வேலம் பாளையத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்த திருவண்ணா மலையைச் சேர்ந்த அஜய், அவரது மனைவி, அவர் களது மூன்று வயது குழந்தை ஆகியோர் இந்த விபத்தில் பலத்த காயமடைந் தனர். விசா ரணையில், மதுபோதையில் காரை ஓட்டி வந் தது தமிழகத்தின் பிரபல ஜவுளிக் கடை அதிபர் ஒருவரின் மருமகன் என்று கண்டுபிடித்திருக்கிறது போலீஸ். இந்த விவகாரம் திருப்பூர் மாநகர கமிஷனர் ராஜேந்திரன்வரை போனதால், அவரை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் தொழிலதிபரின் மருமகனுக்காக அங்குவந்த சில அரசியல் பிரமுகர்கள், வழக் கறிஞர்கள் அவரை விடுவிக்கும்படி மன்றாடினார் கள். ஆனால் நேர்மையான கமிஷனரின் நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட நபர் மீது இரு பிரிவின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டது. அந்த நபர் நீதிபதியிடம் கொண்டு செல்லும்போது நெஞ்சுவலியால் துடிக்க, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார. இந்நிலையில் ஜனவரி நான்காம் தேதி வரை திருப்பூர் நீதிமன்றம் விடுமுறையில் உள்ளது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் இருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு முன்ஜாமீன் கிடைக்காது என்பதால், கட்டாயப்படுத்தி அவர்களை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அத்தோடு தொழிலதிபரின் மருமகனுக்கு, உடல்நிலையைக் காரணம் காட்டி உயர் நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் வாங்கவும்  முயற்சிசெய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்       பட்ட தொழிலதிபர் சார்பாக ஆளுங்கட்சியின் மண்டலப் பொறுப்பிலிருக்கும் அந்த கட்சிப் பிரமுகர் பெரிய அளவில் உதவி செய்வதாகவும், மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய, மருத்துவமனை நிர்வாகிகளுக்கு தாராளமாக "விட்டமின் ப' வழங்கப்பட்டதாகவும் தகவல் கசிகிறது.”

rang2

"நானும், எனக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன்.“அ.தி.மு.க. நடத்திய பொதுக்குழுவில் மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பை எடப்பாடி வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். அதை எதிர்பார்த்த தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏமாற்றத்தையே அடைந்தனர். தி.மு.க.வை எதிர்த்துப் பயணிக்க ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தேவை என்பதை பலமுறை எடப்பாடியிடம் மூத்த நிர்வாகிகள் எடுத்துச் சொல்லியும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய மூத்த நிர்வாகிகள் 26-ஆம் தேதியன்று சசிகலாவை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு இறுதியாக எடப்பாடியே சசிகலாவை சந்தித்துப் பேசுவார் என்கிறார்கள்.