ராங்கால் எச்சரித்த ஸ்டாலின்! உருக வைத்த கனிமொழி! எடப்பாடியின் 41 ஆயிரம் கோடி ரகசியம்!

ra

"ஹலோ தலைவரே, இரண்டாம் முறையாக முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை, கட்சியின் உடன்பிறப்புகள் உற்சாகமாகக் கொண்டாடறாங்க.''”

"ஆமாம்பா, தி.மு.க. தலைமைக் கழகத் தேர்தல் பற்றி நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட அத்தனையும் அப்படியே, 9-ஆம் தேதி கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் அரங்கேறியிருக்கு.''””

ra

”உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளில், மறுபடியும் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்னு நாம் பேசிக்கிட்டோம். அதேபோல் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் அதே நால்வரும் மீண்டும் தேர்வாவதோடு, ராஜினாமா செய்த சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்திற்கு புதிய துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி கருணாநிதி எம்.பி. தேர்ந்தெடுக்கப்

படும் சூழல் இருக்குன்னும் அழுத்தம் திருத்தமாக நாம் உரையாடலில் தெரிவித் தாம். கூடவே, ஸ்டாலினின் பொதுக் குழு உரை, அமைச்சர்களை எச்சரிக்கும்விதமா இருக் கப்போகுதுன்னும் சொன்னோம். அதுவும் அப்படியே நடந்தி ருக்கு.''”

"ஆமாப்பா.. நிகழ்ச்சிகளை நானும் பார்த்தேன். அமைச்சர்களை மட்டுமில்ல, கட்சிப் பதவியில் நீடிக்கிற -புதிதாக பொறுப்பு கிடைச் சிருக்கிற நிர்வாகிகளுக்கும் ஸ்டாலினின் பேச்சில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கு. கட்சியையும் ஆட்சியையும் பேலன்ஸா கொண்டு போகணும்ங் கிறதுதான் அவர் பேச்சோட சாராம்சம். புதிய துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசுறப்ப, "அண்ணா'ன்னு ஸ்டாலினை அழைத்து, அப்பாவின் இடத்தில் உங்களைப் பார்க்கிறேன்னு தங்கைக்குரிய பாசத்தோடு சொன்னது எல்லாரையும் உருக வச்சிடிச்சி. இந்த நிலையில், ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லாத பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கனிமொழிக்கு வாழ்த்து சொல்லியிருப்பதால், அரசியல் புகைச்சல் ஏற்படும்னு எதிர்பார்க்கப் படுது.''”

"பா.ஜ.க. எந்த வேலையையும் செய்யும்னும், ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதனை ஆதரிக்க மாட்டாங்கன்னும் பொதுக் குழுவிலேயே மு.க.ஸ்டாலின் பேசியிருக்காரே.. அதுசரி, அ.தி.மு.க. தொண்டர்களைக் கவர அடுத்தடுத்து எடப்பாடி காய் நகர்த்தறாரே?''”

"ஆமாங்க தலைவரே.. தொடர்ந்து போராட்டம்,

"ஆமாங்க தலைவரே.. தொடர்ந்து போராட்டம், பொதுக்கூட்டம்னு தமிழகம் முழுக்க நடத்தி, தன் தலைமை யிலான அணி பலமாக இருக்குன்னு காட்ட முயலும் எடப்பாடி, அடுத்து, தன் ஆதரவாளர்களைக் கவர, அ.தி.மு.க.வின் பொன்விழா நிறைவைத் தடபுடலாக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கார். இதுக்காக கட்சித் தொண்டர்கள் 1,16,000 பேருக்கு, அவர் கைப்பட எழுதிய 3 பக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கு. அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பெருமைகளைப் பாராட்டி விட்டு, அவர்கள் வழியில் தானும், கட்சி மற்றும் ஆட்சியைச் சிறப்பாக நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதோட கட்சிக்கு ஓ.பி.எஸ். துரோகம் இழைத்திருப்பதாகவும் சொல்லி, தொண்டர்களை உருகவைக்க முயன்றிருக் கிறார்.''”

"இதுக்கு அவர் தரப்பு தொண்டர்களின் ரீயாக்ஷன் எப்படி?''”

"எடப்பாடியின் கடிதத்தைப் பார்த்த பெரும்பாலான தொண்டர்கள், இவர் எழுதியிருக்கும் பழைய கதையெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? இவரைவிட எம்.ஜி.ஆரையும் ஜெ.வையும் எங்களுக்கு நல்லாவே தெரியும். அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடும் இந்த சமயத்திலாவது, எம்.ஜி.ஆரைப் போல எடப்பாடி வள்ளலாக மாற வேண்டாமா? ஆட்சி அதிகாரம் இருந்த போது ஏகத்துக்கும் சம்பாதிச்சவர், அதில் கொஞ்சத்தைக் கட்சிக்காரனுக்கு கிள்ளிக் கொடுத்தால் என்ன? எம்.ஜி.ஆர். காலத்துத் தொண்டர்கள் எவ்வளவோ பேர், இப்ப நலிவடைந்து போயிருக்காங்க. அவர்களுக்கு பண உதவியும் நலத்திட்ட உதவியும் செய்வதற்கு எடப்பாடி முன்வந்தால் பாராட்டலாம். வெறும் கடிதம் நாக்குவழிக்கக் கூட உதவாதுன்னு பகிரங்கமாகவே புலம்பறாங்க.''”

"அ.தி.மு.க. எக்ஸ் எம்.பி. மைத்ரேயன் மறுபடியும் ஓ.பி.எஸ். பக்கம் தாவிட்டாரே?''”

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. எக்ஸ் எம்.பி., டாக்டர் மைத்ரேயன், ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது, அவரது அணியில் சேர்ந்தார். அங்கு பெருசா முக்கியத்துவம் கிடைக்காததால் மறுபடியும் எடப்பாடி அணிக்குத் தாவினார். அந்த நேரத்தில் மட்டும் பரபரப்பாகப் பேசப் பட்ட அவர், பிறகு கிடப்பில் போடப்பட்டார். இதனால் வருத்தத்தில் இருந்த மைத்ரேயன், தற்போது டெல்லியின் ஆதரவால் ஓ.பி.எஸ்.ஸின் கை ஓங்கலாம்னு கணக்குப் போட்டு, மறுபடியும் ஓ.பி.எஸ். அணிக்குத் தாவிவிட்டார். இதற் கிடையே பா.ஜ.க.வில் இணைய முயற்சித்து அவர் தோற்றுப்போன நிலையில், ஆர்.எஸ்.எஸ். தரப்பு கொடுத்த ஆலோசனையால்தான் மைத்ரேயன் ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்தாராம்.'' ”

"மாற்றம் என்பதே மாறாத தத்துவம்னு மார்க்ஸ் சும்மாவா சொன்னார்? ஓ.பி.எஸ். அனுமதித்தால் எடப்பாடியின் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன்னு எம்.ஜி.ஆர். மன்ற பிரமுகர் ஜே.சி.டி.பிரபாகரன் பரபரப்பைப் பற்றவைத்தாரே?''”

"ஆமாங்க தலைவரே, ஜே.சி.டி.பிரபாகரன் சொன்னதைக் கேட்டு, எடப்பாடியைச் சுற்றியிருக்கும் கட்சியின் சீனியர்கள்கூட அதென்ன 41,000 கோடி? எடப்பாடி செய்த ஊழலா? என்றெல்லாம் விவாதிக்கத் தொடங்கி னார்கள். ஒருசிலர் இதுகுறித்து, அந்த பிரபாகரனிடமே கேட்டும், அவர் அதுகுறித்து மூச்சு விடவில்லை. ஆனாலும் அது சூறாவளியைக் கிளப்பியது. அதனால் எடப்பாடியிடமே இதுகுறித்துப் பேசிய சீனியர்கள் சிலர், ’"இதற்கு நீங்களே ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். இல்லை யெனில் உங்கள் இமேஜ் டேமேஜாகும்'’என்றார் களாம். ஆனால் எடப்பாடியோ, "அந்த ஜே.சி.டி., அ.தி.மு.க.காரரே அல்ல. அவர் ஒரு வேடந்தாங்கல் பறவை'ன்னு சொல்லி, விசயத்தை முழுசா மழுப்பிட்டார்.''”

"சரிப்பா, அது என்ன 41,000 கோடி ரகசியம்?''”

t

"இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமான சிலரிடம் நாம் விசாரித்தபோது முக்கியமான தகவல் கிடைச்சிது. அதாவது.. ஜெயலலிதா, அப்பல்லோவில் அட்மிட் ஆவதற்கு முன், ஒரு பெரிய தொகையை சசிகலா, எடப்பாடியிடம் கொடுத்து வைத்திருந்தாராம். அதேபோல எடப்பாடி ஆட்சியின்போது அமைச்சர்கள் பலரும் கட்சி நிதியளிக்க, அது இரண்டும் சேர்ந்து 41 ஆயிரம் கோடியாக உயர்ந்ததாம். இதை எல்லாம் கட்சி நிதியில் சேர்க்காமல், சசிகலாவுக்கும் டிமிக்கி கொடுத்துட்டாரு எடப்பாடின்னும், இதுதான் அந்த ரகசியம்னும் சொல்றாங்க. இந்த விவகாரத்தில் எடப்பாடியை சிக்க வைக்க நினைத்த சசிகலா தரப்பு, இது குறித்து, வருமான வரித்துறைக்கும், அமலாக்கத்துறைக் கும் புகாரைத் தட்டிவிட்டிருக்கிறதாம். இதனால் எடப்பாடி ஆடிப்போயிருக்கி றாராம்.''”

"சட்டமன்றம் கூடும்போது எடப்பாடித் தரப்புக்கும் ஓ.பி.எஸ். தரப்புக்கும் இடையே ஒரு பூகம்பம் வெடிக்கக் காத்திருக்குதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, 17-ந் தேதி முதல் 21-ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடத்தப்படலாம்னு தெரியுது. இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத் தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிடும். எதிர்க்கட்சி துணைத்தலை வராக இருக்கும் ஓ.பி.எஸ்.ஸை, அந்தப் பதவியில் இருந்து நீக்கி, அவருக்குப் பதிலாக உதயகுமாரை நியமிக்கணும்னு சபாநாயகர் அப்பாவுலிவுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி. இதை ஏற்கக்கூடாதுன்னு ஓ.பி.எஸ். தரப்பும் பதிலுக்கு சபாநாயகருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறது. அ.தி.மு.க. தலைமை, யார்வசம் இருக்கிறது என்பது உறுதியாகாத நிலையில், இந்த விவகாரத்தில் சபாநாயகர் என்ன மாதிரியான முடிவை எடுப்பார்னு, எல்லோரின் பார்வையும் அவர் பக்கமே திரும்பியிருக்கு.''”

"உண்மைதான்ப்பா''”

"சட்டமன்றம் கூடும் நாளில் ஓ.பி.எஸ். ஸுக்கு எங்கே இருக்கை போடப்படுகிறது என்பதில் இருந்தே, அரசியல் சதுரங்கத்தின் காய்கள் யாருக்கு சாதகமாக நகர்கின்றன என்பது புரிந்து விடும். முடிவு செய்வது சபாநாயகராக இருந்தாலும், அ.தி.மு.க.வின் இரு அணிகளில் முதல்வரின் கவனம் எந்தப் பக்கம் இருக்குன்னும் தெரிஞ்சிடும். பதட்டத்தோடு இருக்கும் எடப்பாடி, சட்டமன்ற நிகழ்வைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளாராம். அதேசமயம், தனது கடிதத்தின்படி, துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டால், அதன்பின் சபை நிகழ்சியில் கலந்துகொள்வது பற்றி முடிவெடுக்கலாம்னு அவர் வியூகம் வகுத்திருக்கிறா ராம்.''”

"டி.டி.வி.தினகரன் பக்கம் புது உற்சாகம் தெரியுதே?''”

rang

"ஆமாங்க தலைவரே, அண்மையில் பா.ஜ.க. தலைமை அ.ம.மு.க. தினகரனை அழைத்துப் பேசியிருக்கிறது. அப்போது, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அவர் கட்சிக்கு 2 சீட் தருவதாகச் சொல்லப் பட்டதாம். அதனால்தான் அவர் தரப்பு உற்சாகத்தில் மிதக் கிறது, இதன் மூலம் எதிர்காலத்தில் அ.தி.மு.க.வின் லகானைப் பிடித்துவிடலாம் என்றும் சொல்லத் தொடங்கிவிட்டாராம். இப்போது தீவிர பா.ஜ.க. ஆதரவாளராக மாறிவிட்ட தினகரன், இந்த உடன்பாட்டால், தேர்தல் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், தன் தலைக்கு மேல் தொங்கிய கத்தியிடம் இருந்து தப்பிவிட்டதாக நம்புகிறாராம். இந்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸை சேர்த்துக்கொள்ளச் சொல்லி, டெல்லி எடப்பாடியிடம் நிர்பந்தம் செய்ய, என்னை நீங்கள் சிறைக்கே அனுப்பினாலும் பரவாயில்லை. ஓ.பி.எஸ்.ஸை மட்டும் சேர்த்துக்கொள்ள மாட்டேன்னு சொல்லிவிட்டாராம் எடப்பாடி. இதற்கிடையே சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள் என்ற கோரிக்கையோடு, தன் மகனுடன் டெல்லிக்குப் போயிருக்கிறாராம் சசிகலாவின் சகோதரரான திவாகரன்.''”

"என்னென்ன கூத்தோ நடக்குது... நடக்கட்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல், எந்தத் திசையில் போய்க் கிட்டிருக்குது?''”

"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் 17-ஆம் தேதி நடக்கிறது. இதில் சோனியா -ராகுலின் ஆசிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெறலாம் என்கிற நிலையே நிலவுகிறது. இருந்தாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் சசிதரூர், அனைத்து மாநிலங் களிலும் உள்ள கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டுவருகிறார். அந்த வகையில் அவர் சென்னைக்கு வந்தபோது, சத்தியமூர்த்தி பவன் பக்கம் யாரும் தலைகாட்டலையாம். ப.சி.யின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அவரை வரவேற்றிருக் கிறார்கள். இதையறிந்த ப.சி., "கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசூதனன் மிஸ்திர், பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரைத் தொடர்புகொண்டு, ’எதிர் வேட்பாளர் ஓட்டு சேகரிக்க வரும்போது, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை மாநில தலைவர் அழகிரி ஒருங்கிணைக்க வேண்டாமா? அவர் ஒருதலைப் பட்சமாக நடக்கலாமா?' என்றெல்லாம் பொங்கித் தீர்த்து விட்டாராம்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தீயணைப்புத்துறையின் இணை இயக்குனராக இருக்கும் பிரியா ரவிச்சந்திரன், தமிழகத்தின் முதல் தீயணைப்புத் துறை பெண் வீரர் என்ற பெயரைப் பெற்றவர். இவரைப் பற்றி அண்மைக்காலமாக புதிய செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. கோட்டை உயரதிகாரிகள் வட்டாரத்தில் இவருக்கு செல்வாக்கு பெருகி வருவதாகவும், ஐ.எஃப்.எஸ். அதிகாரியான அவரை ஐ.ஏ.எஸ். ஆக்குவதற் கான ஃபைல்கள் உள்துறையில் தயாராகிற தாம். அதனால் விரைவில் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, கோட்டையில் முக்கிய இடத்தைப் பெறலாம்னு சொல்றாங்க.''’

nkn121022
இதையும் படியுங்கள்
Subscribe