தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் அளித்த ஒரு பேட்டியில், ""கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.-தி.மு.க. கூட்டணி அமைந்திருந்தால் நானும் மு.க. ஸ்டாலினும் அமைச்சர்களாகி இருப்போம். இதைத் தி.மு.க.வே கெடுத்தது.

Advertisment

கலைஞரும் நானும் சந்திக்க முடியாமல் செய்தவர் மு.க.ஸ்டாலின் தான். அவரால் இனி எக்காலத்திலும் முதல மைச்சர் ஆக முடியாது'' என்று அதிரடி கிளப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும் நடிகருமான வாகை சந்திரசேகர், ""இந்த விஜயகாந்த்தால் எழுதியிருக்க இயலாது. அவர் இயலா மையை பயன்படுத்தி அவர் குடும்பத் திலுள்ள மற்றவர்கள் எழுதி அவர் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்'' என்று பதில ளித்திருந்தார்.

Advertisment

stalin-vijaykanth

எது உண்மை? கடந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக் கொறடாவாகவும், தே.மு.தி. மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்தவர் வி.சி.சந்திரகுமார். இப்போது தி.மு.க. கொள்கைப் பரப்புத் துணைச்செயலாளராக இருக்கிறார். 2016 கூட்டணிப் பேச்சு குறித்து வி.சி.சந்திரகுமாரிடம் கேட்டோம்.

நக்கீரன்: மு.க.ஸ்டாலின் மீதான கடும் விமர்சனத்துடன் விஜயகாந்த் பேட்டி அளித்திருப்பது பற்றி?

Advertisment

சந்திரகுமார்: விஜயகாந்த் சுயமாக எக்காலத்திலும் இயங்கியது கிடையாது. மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சுதீசும்தான் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பேட்டியும் அப்படித்தான்.

நக்கீரன்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாமல் போனதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணமா?

சந்திரகுமார்: 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன்தான் கூட்டணி வேண்டும் என்பது தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அத்தனைபேருடைய ஆசையுமாக இருந்தது. பிரேமலதா மட்டுமே எதிராக இருந்தார். 2016 ஜனவரி 16 விஜயகாந்த்-பிரேமலதா மணநாள். தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள் அவர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.

"நாம் பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி அமைக்கிறோம். தி.மு.க.வுடன் கூட்டணி என்று யாரும் பேச வேண்டாம்' என்று பிரேமலதா எரிந்து விழுந்தார். கட்சிப் பொதுக்குழுவிலும் "தி.மு.க. வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி இல்லை' என்றுதான் கணவனும் மனைவியும் அறி வித்தார்கள்.

நக்கீரன்: தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையே நடக்க வில்லையா? பழம் நழுவிப் பாலில் விழும் என்று கலைஞர் சொன்னாரே?

சந்திரகுமார்: உண்மைதான். ஒரு பத்திரிகையாளர் ஏற்பாட்டில் மாறன் சகோ தரர்களை விஜயகாந்த் சந்தித்தார். "ஒரு நல்ல முடிவை எடுங்கள்' என்று பொதுவாக -இயல்பாகச் சொன்னார்கள் மாறன் சகோதரர்கள்.

chandrakumar

விஜயகாந்த்தான் "நல்ல முடிவெடுப் போம்; அய்யாவிடம் (கலைஞரிடம்) சொல்லுங்கள்' என்று சொன்னார். அந்த அடிப்படையில்தான் "பழம் நழுவி பாலில் விழும்' எனக் கலைஞர் சொன்னார்.

நக்கீரன்: அப்போது யார், யாருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்?

சந்திரகுமார்: பா.ஜ.க. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் தமிழகப் பொறுப் பாளர் முரளிதர் ராவும் இரண்டு முறை விஜயகாந்த் வீட்டிற்கு வந்தார்கள். பேசி னார்கள். தமிழிசை தினமும் வந்து கொண்டிருந்தார். மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இரண்டொரு முறை வந்து பேசினார்கள்.

நக்கீரன்: அப்படியென்றால் தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படாமல் போனதற்கு விஜயகாந்த் குடும்பம் தான் காரணமா?

சந்திரகுமார்: அ.தி.மு.க. அரசின் உளவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று விஜயகாந்த் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தது. அந்தக் குழுவின் நோக்கமே தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான். அதுதான் நடந்தது.

நக்கீரன்: இப்போது தி.மு.க. மீது பழி சுமத்தி விஜயகாந்த் பேட்டி அளிக்க காரணமென்ன?

சந்திரகுமார்: தங்களைப் பற்றி பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தி களும் விவாதங்களும் நடைபெற வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.வை நோக்கி குற்றச்சாட்டு வைத்து விளம்பரம் தேடுகிறார்கள்.