பா.ஜ.க.வை வீழ்த்த அணி திரட்டும் ஸ்டாலின்!

ss

திராவிட நாயகரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளில், பா.ஜ.க.வை வீழ்த்த வலிமையான கூட்டணியை தேசிய அளவில் உருவாக்குங்கள் என வடமாநிலத் தலைவர்களும், பா.ஜ.க.வை வீழ்த்துவதே நமது குறிக்கோள் என ஸ்டாலினும் பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்ச் 1-ல் 70-வது பிறந்தநாளை குடும்பத்தின ருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞரின் நினைவிடங்களுக்கு உடன்பிறப்பு களின் படை சூழ சென்று மலர்தூவி வணங்கி மரியாதை செலுத்தினார். பெரியார் திடலுக்கு வந்த அவருக்கு புத்தகங்களைக் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார் தி.க. தலைவர் கி.வீரமணி. பிறகு கோபாலபுரம் சென்று தயாளு அம்மாளிடமும், சி.ஐ.டி. காலனி சென்று ராஜாத்தியம்மாளிடமும் ஆசி பெற்றார்.

dd

மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, டி.ராஜா, கூட்டணிக் கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட் டோர் நேரில் வந்து வாழ்த்தினர். பிரதமர் மோடி, ஜனாதி பதி திரௌபதி முர்மு, சோனியா, ராகுல்காந்தி தொடங்கி தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் பலரும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்தினர். தவிர, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு ஒட்டகம் ஒன்றை தொண்டர் ஒருவர் பரிசளித்து வாழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலினை வாழ்த்தவந்த அனைவருக்கும் தென்சென்னை தி.மு.க. சார்பில், மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் எனும் கலைஞரின் வரிகள் பொறிக்கப்பட்ட மரக்கன்று மஞ்சப்பைகள் பரிசளிக்கப்பட்டன.

ஸ்டாலின் பிறந்தநாளை பிரபலப்படுத்த தி.மு.க .ஐ.டி. விங் சார்பில் ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டன. 24 மணிநேரத்தில் உலக அளவில் ட்விட்டரில் 5-ஆம் இடத்தைப் பிடித்து ட்ரெண்

திராவிட நாயகரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளில், பா.ஜ.க.வை வீழ்த்த வலிமையான கூட்டணியை தேசிய அளவில் உருவாக்குங்கள் என வடமாநிலத் தலைவர்களும், பா.ஜ.க.வை வீழ்த்துவதே நமது குறிக்கோள் என ஸ்டாலினும் பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்ச் 1-ல் 70-வது பிறந்தநாளை குடும்பத்தின ருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞரின் நினைவிடங்களுக்கு உடன்பிறப்பு களின் படை சூழ சென்று மலர்தூவி வணங்கி மரியாதை செலுத்தினார். பெரியார் திடலுக்கு வந்த அவருக்கு புத்தகங்களைக் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார் தி.க. தலைவர் கி.வீரமணி. பிறகு கோபாலபுரம் சென்று தயாளு அம்மாளிடமும், சி.ஐ.டி. காலனி சென்று ராஜாத்தியம்மாளிடமும் ஆசி பெற்றார்.

dd

மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, டி.ராஜா, கூட்டணிக் கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட் டோர் நேரில் வந்து வாழ்த்தினர். பிரதமர் மோடி, ஜனாதி பதி திரௌபதி முர்மு, சோனியா, ராகுல்காந்தி தொடங்கி தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் பலரும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்தினர். தவிர, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு ஒட்டகம் ஒன்றை தொண்டர் ஒருவர் பரிசளித்து வாழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலினை வாழ்த்தவந்த அனைவருக்கும் தென்சென்னை தி.மு.க. சார்பில், மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் எனும் கலைஞரின் வரிகள் பொறிக்கப்பட்ட மரக்கன்று மஞ்சப்பைகள் பரிசளிக்கப்பட்டன.

ஸ்டாலின் பிறந்தநாளை பிரபலப்படுத்த தி.மு.க .ஐ.டி. விங் சார்பில் ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டன. 24 மணிநேரத்தில் உலக அளவில் ட்விட்டரில் 5-ஆம் இடத்தைப் பிடித்து ட்ரெண்டிங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஹேஷ்டேக்! . அதேபோல, செல்ஃபி வித் சி.எம். எனும் புதிய முயற்சியையும் அறிமுகப்படுத்தியது ஐ.டி.விங்! முதல்வரின் பல்வேறு புகைப்படங்களுடன் பொதுமக்கள் தாங்கள் விரும்பியபடி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுத்து முதல்வருக்கு வாழ்த்துக்கள் சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நவீன முயற்சி டிஜிட்டல் உலகில் வியக்க வைத்தது.

மார்ச் 1-ந் தேதி மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தியது தென்சென்னை தி.மு.க. அமைச்சரும் மா.செ.வுமான மா.சுப்பிரமணியன் பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் முழுவதையும் ஏற்றுக்கொண்டார். பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் தேசிய அளவிலான மதச்சார்பற்ற தலைவர்களை அழைத்து பொதுக்கூட்டத்தை பிரமாண்டப்படுத்த திட்டமிட்டார் மா.சுப்பிரமணியன். அவர்களை அழைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

dd

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன்கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ்யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில துணைமுதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அழைக்கப்பட்டனர். அவர்களும் ஸ்டாலினை வாழ்த்த ஒப்புக்கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய டி.ஆர்.பாலு, ஸ்டாலினின் ஆளுமைகளை விவரித்து மகிழ்ந்தார். துரைமுருகன் பேசும்போது, "கலைஞர் எப்படி இயக்கத்தை நடத்தினாரோ அப்படியே இந்த இயக்கத்தை நடத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார் ஸ்டாலின். ஆட்சியிலும், கட்சியிலும் ஸ்டாலின் ஆற்றுகிற பணிகள் அனைவரையும் வியக்கவைக்கிறது. ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவே ஸ்டாலினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தை அன்றைக்கு கலைஞர் காப்பாற்றினார். இன்றைக்கு நீங் கள்தான் காப்பாற்ற வேண்டும். அந்த வல்லமை உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் பல திசைகளிலுமிருந்து தலை வர்கள் இங்கு வந்துள்ளனர். இந்த நாடு ஒருநாள் கோபால புரத்தில் நுழைந்து நீங்கள்தான் நாட்டுக்கு தலைமை (பிரதமர்) தாங்கவேண்டும் என்று கேட்கும் காலம் வரும்''’என்று சொல்ல, கூட்டமே ஆர்ப்பரித்தது.

மல்லிக்கார்ஜுன் கார்கே பேசும்போது, "சமூகநீதிக் காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் காங்கிரசும் தி.மு.க.வும் கைகோர்த்து பயணிக்கின்றன. பகுத்தறிவு சிந்தனைகளும் அறிவியல் எண்ணங்களும் நேருவிடம் இருந்தது. அதே எண்ணங்கள் பெரியார், அண்ணா, கலைஞரிம் இருந்தன. தற்போது அதனை உங்களிடமும் பார்க்கிறோம். சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் மூன்றும் தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிதான் 2004, 2009 நாடாளுமன்ற மற்றும் 2006, 2021ல் நடந்த -சட்டமன்றத் தேர்தல்களில் இமாலய வெற்றியை கொண்டுவந்தது. இந்த கூட்டணி 2024-லும் தொடர வேண்டும் என்பதற்கான அடித்தளம்தான் இந்த பொதுக்கூட்டம். பிரிவினை சக்திக்கு எதிரான மதச்சார்பற்ற ஒரே எண்ணம் கொண்ட அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும்''’என்று வலியுறுத்தினார் கார்கே.

ஃபரூக் அப்துல்லா பேசும்போது,’"தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் முன்னேற வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அதன்மூலம் அவரது தந்தைக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கும் வகையில், தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் வரவேண்டும். நீங்கள் வாருங்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக உருவாக்கியது போல இந்தியாவையும் உருவாக்குங்கள். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை இப்போதைக்கு நாம் மறந்துவிடலாம். தேர்தல் வெற்றிக்குப்பிறகு அதனை முடிவு செய்யலாம். இப்போதைக்கு இந்தியா காப்பாற்றப்பட வேண்டும்''’என்றார் உறுதியாக.

dd

பீகாரிலிருந்து வருவதற்கு காலதாமதமான நிலையில், கூட்டம் நிறைவுபெறும் நேரத்தில் வந்துசேர்ந்தார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி. ஸ்டாலினிடமும் மற்ற தலைவர்களிடமும் தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு மைக் பிடித்த தேஜஸ்வி,’"மு.க.ஸ்டாலினுக்கு 70 வயது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எப்போதும் இளமையாகவே இருந்து வருகிறார். அவரது அரசியல் போராட்டங்களை எனது இளமைக்காலத்திலிருந்தே கவனித்து வருகிறேன். அவரது உழைப்பின் வலி எனக்குத் தெரியும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரிடமிருந்த தலைமைப் பண்பை உங்களிடம் பார்க்கிறேன். சமூகநீதியின் உறுதித்தன்மை இருந்தால் தான் வலிமையான தலைமை உருவாகும். அந்த வகையில் சமூகநீதி யின் தளமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்திலுள்ள கொள்கைகளை தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் பின்பற்ற வேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தப்பட்டு அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை இந்தியாவில் உருவாகியிருக்கும் சூழலில், ஒரு வலிமையான மாற்று அரசியலைக் கட்டமைக்க ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்க்கிறது. அதனால் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டும். அதற்கான முயற்சிகளை இப்போதே ஸ்டாலின் தொடங்க வேண்டும்''’என்றார் மிக அழுத்தமாக.

பொதுக்கூட்டத்தில் ஏற்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், "அண்ணாவைப் போல எனக்கு பேசத்தெரியாது. கலைஞரைப் போல எழுதத் தெரியாது. ஆனால் அவர்களைப் போல உழைக்கத்தெரியும். திராவிட இயக்கத்தின் அரசியல் நடைமுறைகளின்படி கல்வி மற்றும் சமூக பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்காகத்தான் ஆட்சிப்பொறுப்பில் தி.மு.க. நிரந்தரமாக இருக்க வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளில் 85 சதவீதம் நிறைவேற்றி யிருக்கிறோம். ஜூனியர்களும் சீனியர்களும் என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள். இந்த விழாவை எனது பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையாக அல்லாமல், இந்தியாவின் புதிய அரசியலுக்கான தொடக்கவிழா மேடையாகவே பார்க்கிறேன். இன்றைய காலத்தின் மிகப்பெரிய தேவை 2024-ல் இந்தியாவில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதுதான். ஒன்றுபட்ட இந்தியாவை பாசிசத்தால் பிளவுபடுத்தி ஒற்றைத்தன்மை சர்வாதிகார நாடாக மாற்ற நினைக்கும் பா.ஜ.க.வை அரசியல்ரீதியாக வீழ்த்தியாக வேண்டும். அதற்காக பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இதனையே ஒற்றை இலக்காகத் திட்டமிட்டு ஒன்றுசேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே நாம் வெற்றிபெற்றுவிடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான். அதனால், அரசியல் கட்சிகள் தங்களிடமிருக்கும் வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுத்து பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி என்பது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதும் நடைமுறைக்கு சரியாகாது. மூன்றாம் முன்னணி என்ற பேச்சு அர்த்தமற்றது. பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் இந்த எளிய கணிதத்தைப் புரிந்துகொண்டு ஒற்றுமையாக நிற்கவேண்டும்''’என்று அழுத்தமாக விவரித்து தனது பிறந்தநாள் செய்தியாக இதனையே தேசியக் கட்சிகளுக்கு தெரியப்படுத்தினார் மு.க.ஸ்டாலின்.

மேலும் அவர் பேசும்போது, பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசு, தமிழ்நாட்டினை வஞ்சிக்கும் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசை ஒரு பிடிபிடித்தார் ஸ்டாலின். 2024-நாடாளுமன்ற தேர்தலின்போது நடக்கும் சிந்தாந்தப் போரில், வெற்றிபெறும் ஒரு வாய்ப்பு இருப்பதையும், அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் தி.மு.க.வின ருக்கு தனது பிறந்தநாள் செய்தியாக ஸ்டாலின் சொன்னதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் உடன் பிறப்புக்கள்!

nkn040323
இதையும் படியுங்கள்
Subscribe