புதிய உத்தியுடன் களம் காணும் உங்களுடன் ஸ்டாலின்!

புதுப்பிக்கப்பட்டது
cm

 

டந்த இதழில் தமிழகத்தின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட அதிகாரி களுக்குள் ஏற்படும் முட்டல்மோதல் களால் நிர்வாகச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்றபோது நிர்வாகத்தில் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத காலகட்டத்தில் கொடுத் துள்ளது. 

ஆட்சியின் தொடக்கத்தில் மிகவும் மந்தமாகப் பணியாற்றக்கூடிய அதிகாரிகளிடம் ஒட்டுமொத்த சுமையையும் ஏற்றியதால், நிர்வாகச் சீர்கேடு ஏற்பட்டதோடு, கஜானாவில் பணம் இல்லையென்பதை மட்டும் திரும்பத் திரு

 

டந்த இதழில் தமிழகத்தின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட அதிகாரி களுக்குள் ஏற்படும் முட்டல்மோதல் களால் நிர்வாகச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்றபோது நிர்வாகத்தில் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத காலகட்டத்தில் கொடுத் துள்ளது. 

ஆட்சியின் தொடக்கத்தில் மிகவும் மந்தமாகப் பணியாற்றக்கூடிய அதிகாரிகளிடம் ஒட்டுமொத்த சுமையையும் ஏற்றியதால், நிர்வாகச் சீர்கேடு ஏற்பட்டதோடு, கஜானாவில் பணம் இல்லையென்பதை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிவந்தனர்.    அதற்கு காரணம், பெண்கள், மாணவ மாணவிகள், குழந்தைகளுக்கு கூடுதல் கவனத்தோடு புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது ரூ.4 லட்சம் கோடி கடனில் இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கு காரணம், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மோசமான திட்ட மிடலும், நிர்வாகச் சீர்கேடும் தான் என்று கூறுகிறார்கள். 

எனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கவும், அவற்றில் சரி செய்யப்பட வேண்டியது குறித்தும் ஆய்வு செய்யவும், 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார். அவர்களுக்கு தனித்தனி துறைகளை பிரித்தும் கொடுத்துள்ளார். அதில் மிகவும் திறமையான அதிகாரியாக வலம்வரும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., அமுதா ஐ.ஏ.எஸ்., தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 4 அதிகாரிகளும் பல ஆண்டுகள் பல துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதும், இவர்களுக்கு எல்லாத் துறை களைப் பற்றிய அனுபவங்களும் இருப்பதால், அவர்களால் தற்போதைய ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் மோசமான நிதிநிலையை சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் முதல்வர் இந்த அதிகாரிகளை நியமித்துள்ளார். இவர்கள், அவர்களுக்கான துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் நோக்கில் பல திட்டமிடல்களை முன்னெடுப்பார்கள். இப்போதுள்ள சூழலில் ஆட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தினால்தான் அடுத்துவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என்ற இலக்கோடு இந்த அதிகாரிகள் களம் காணவுள்ளார்கள். 

அதில் முதல்கட்டமாக, "உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்பு ஆவணங்களை பெறுவதற்கான முகாமை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. அதனை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம் ஜூலை 15ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் வரை மொத்தம் பத்தாயிரம் சிறப்பு முகாம்களை நடத்தி, அதன்மூலம் பொதுமக்களை நேரில் சந்திக்கும் புதிய யுக்தியை தி.மு.க. அரசு முன்னெடுத்துள்ளது. இதன்மூலம் மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளி குறைந்து, அரசின்மீதான நம்பிக்கை அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப் படுகிறது!

-ஸ்ரீவர்மா

nkn190725
இதையும் படியுங்கள்
Subscribe