"ஹலோ தலைவரே,  அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும்  30 ஆம் தேதி வெளி நாட்டுப்பயணத்தை மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், அதற்கு முன்பாக பீகார் வரை, சென்று வந்திருக்கிறார்.''”

"ஆமாம்பா, ஸ்டாலின் பீகாரைக் கலக்கிவிட்டு வந்திருக்கிறாரே?''”

Advertisment

rang1

"உண்மைதாங்க தலைவரே,  பீகாரில் ராகுல்காந்தி நடத்திய வாக்காளர் உரிமைப் பேரணியின் நிறைவு நிகழ்ச்சியில், 27ஆம் தேதி கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக, தனி விமானத்தில் அவர் பீகார் சென்றிருந்தார்.  அங்கே  நடந்த பேரணியில் மக்கள் திரளுக்கு நடுவே, ஒரே ஜீப்பில் ராகுல், ஸ்டாலின், தேஜஸ்வி, பிரியங்கா காந்தி ஆகியோர் நின்றபடி பயணித்தனர். ஜீப்பில் முன் பக்க இருக்கையில் கனிமொழி எம்.பி., அமர்ந்திருந்தார்.  பேரணியின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பா.ஜ.க.வின் துரோக அரசியலையும், தேர்தல் ஆணையத்தின் மிரட்டல் அரசியலையும் பிட்டுப் பிட்டு வைத்ததோடு, இதைக் கண்டெல்லாம் ராகுல்காந்தி பயப்படமாட்டார் என்று சூளுரைத்தார். மேலும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.வின் அத்துமீறல் அதிகாரத்தை மக்கள் நிச்சயம் பறிப்பார்கள் என்றும், பீகார் தேர்த லில் ராகுலும் தேஜஸ்வியும் கைகோத்திருப்பது மிகப்பெரிய வெற்றியை இந்தியா கூட்டணிக்கு அள்ளித் தரும் என்றும்,  ஏற்கனவே நாடாளு மன்றத் தேர்தலில் பீகார், பா.ஜ.க.வின் இறு மாப்பை அடக்கிவிட்டது என்றும், எப்படிப் பட்ட சர்வாதிகாரியும் மக்கள் சக்தி முன்பு மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும் எ்றும் அழுத்தம் திருத்தமாக அறிவித்தார். அவரது  பேச்சை மிகவும் ரசித்த ராகுல், கூட்டம் முடிந்ததும் தனிப் பட்ட முறையில் அவருக்கு  நெகிழ்ச்சி யோடு நன்றி தெரிவித்தார். பீகார் மக் கள் ரசிக்கும்படி அங்கே ஒரு கலக்கு, கலக்கிவிட்டு வந்திருக்கிறார் ஸ்டாலின்.''”

rang3

"சரிப்பா, நடிகர் விஜய் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக் கிறதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, நடிகர் விஜய் மீது பெரம்பலூர் குன்னம் போலீஸ் ஸ்டேசனில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப் பட்டு விசாரணைக்கு அழைக்கப்படு வார் என்கிறது போலீஸ் வட்டாரம். கடந்த 21ஆம் தேதி மதுரையில் அவர் நடத்திய மாநாட்டின்போது, அவர் நடந்துவந்த ரேம்ப்பின் மீது ஏறிய தொண்டர்களை, விஜய்யின் பவுன்சர் கள் கீழே தூக்கி வீசினார்கள்.''

"இதில் பெரியம்மாபாளையத் தைச் சேர்ந்த விஜய் ரசிகர் சரத்குமார், கடுமையாகப் பாதிக்கப்பட, இது குறித்து அவர் அம்மா, தனியார் தொலைக் காட்சியில் காட்டமாகப் பேட்டி கொடுத்தார். இதைப்பார்த்த விஜய் கட்சியின் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் ராம்குமார் என்பவரைக் காட்டி, "இவர்தான் தள்ளிவிடப்பட்ட இளைஞர், இவர் வருந்தவில்லை' என்று சீன் போட்டார்.''”

"பிறகு?''”

"இது பாதிப்புக்குள்ளான சரத்குமாரை எரிச்சலாக்கியது. இதைத் தொடர்ந்து அவரும் அவர் அம்மாவும் சென்று, பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத் தில் விஜய் தரப்பின் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் பெரம்ப லூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில்  நடிகர் விஜய் மற்றும் பெயர் தெரியாத அவரது பவுன்சர்கள் 10 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சம்பவம் நடந்த லிமிட்டைச் சேர்ந்த மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது த.வெ.க.  நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ரொம்பவே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்கிற பதட்டப் பரபரப்பில் இருக்கிறாராம் விஜய்.''”

Advertisment

"இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தூத்துக்குடியில் போட்டி யிடப் போவதாக ஒரு டாக் உலவுகிறதே?''”

"எடப்பாடி ஆட்சியின் போது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போரா டிய மக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில். 13 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்திற்கு பின் தூத்துக்குடி வந்த விஜய், அந்த 13 பேர் வீடுகளுக்கும் சென்று இரங்கலைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தன்னாலான நிதி உதவியையும் செய்தார். இது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் விஜய் மீது அபிமானத்தை ஏற்படுத்தியது.''

"இதை வாக்காக அறுவடை செய்துவிடலாம் என்று விஜய் தரப்பு நினைக்கிறதாம்.  குறைந்த பட்சம் மீனவ மக்களின் 70 ஆயிரம் வாக்குகள் த.வெ.க. பக்கம் திரும்பும் என்றும் கணக்குப் போடப்படுகிறது. இவற்றின் அடிப்படையில்  தூத்துக்குடியில் நிற்கலாமா? என்கிற ஆலோசனை விஜய்  தரப்பில் நடப்பதால், அதுகுறித்த தகவல் வெளியே பரவிவருகிறது.''”

"புதுச்சேரி முதல்வரோடு, த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்திச்சுப் பேசினது பரபரப்பாயிருக்கே..."

rang2

"ஆமாங்க தலைவரே மதுரையில் மாநாடு முடிந்த மறுநாள் த.வெ.க.வின் பொதுச்செயலாள ரான புஸ்ஸி ஆனந்த் உடனடியாக புதுச்சேரி வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் தனியே பேசியிருக்காங்க. அப்ப புதுச் சேரியில் த.வெ.க. -என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைச்சுக்கலாம். பதிலுக்கு தமிழ்நாட்டில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி அமைத் தது என நீங்கள் அறிவிக்கணும் என விஜய்யின் ஆர்வத்தை என்.ஆரிடம் சொல்லியுள்ளார். என். ஆர்.காங்கிரசோடு கூட்டணி வைத்தால் புதுவை யைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கணிசமான வாக்குகள் த.வெ.க.வுக்கு சாதகமா இருக் குங்கிறது விஜய்யோட கணக்கு. புஸ்ஸி சொன்னதையெல்லாம் கேட்டுட்டு தன் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து பதில்சொல்வதாக சொல்லியனுப்பி யிருக்கார் ரங்கசாமி என்கிறார்கள் கட்சிப் பிரமுகர்கள். தவிரவும், த.வெ.க. 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த தொகுதியளவில் பிரபலமான, வசதியான நிர்வாகிகள் இருக்கிறார்களா என பட்டி யல் எடுத்துள்ளது. அதில் 30 பேருக்கு மேல் தேறவில்லை. இவர்களை தேர்தலில் நிறுத்தினால் டெபாசிட்கூட வாங்கமாட் டார்கள் என ரிப்போர்ட் வந்துள்ளது. அதனால்தான் மதுரை மாநாட்டில் பேசும் போத
ு, அனைத்து தொகுதிகளுக்கும் நானே வேட்பாளர் என நினைத்துக்கொள் ளுங்கள் என்று பேசினார் விஜய். தமிழகத்திலும் பெரிய கூட்டணி உறுதியாகாத நிலையில், புதுச்சேரியிலாவது கூட்டணியை உறுதிப்படுத்திக் கொள்வதற் காகத்தான் இந்த வியூகமாம்.

"அனுபவமில்லாத அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமித்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதே?''”

"கட்டுமானத் தொழில் நிறுவனங் களுக்கும் பொதுமக்களுக்கும் இடையி லான பிரச்சனைகளைக் களைய, ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் ரெரா எனும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணை யத்தை தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியது. பொதுமக்கள் எந்த விதத்திலும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சட்ட விதிகளை ரெரா உருவாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினர் களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கட்டுமானங்கள் குறித்த அனுபவமும், கள அறிவும் இல்லாதவர்களாம். அப்படிப்பட்ட வர்களால் எப்படி பொது மக்களின் பிரச்ச னைகளைத் தீர்க்கமுடியும்? என்ற கேள்வியை சீனியர் அதிகாரிகள் கேட்கின்றனர்.''”

"அதானே?''”

"அதுமட்டும் இல்லைங்க தலைவரே, இந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூவரோடு, ஓய்வுபெற்ற சென்னை மாநக ராட்சி அதிகாரி ஒருவரும் உறுப்பினராக அந்த ஆணையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் -மனைவிக்கே அரசு பதவிகளைத் தூக்கிக் கொடுப்பதா? என்கிற குற்றச்சாட்டும் இப்போது கோட்டையிலேயே எழுந்திருக்கிறது. இது சீனியர் அதிகாரிகளை வெறுப்பேற்றவும் செய்திருக்கிறதாம்.''” 

"தமிழக அமைச்சர் ஒருவரின் மகன், மாஜி பா.ஜ.க. மாநில நிர்வாகி கையால் பதக்கம் அணிவித்துக்கொள்ள மாட்டேன் என்று மறுத்திருக்கிறாரே?''”

rang4

"ஆமாங்க தலைவரே, புதுக்கோட்டை மாவட்டம் ஆவரங் குடிப்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து முன்னெ டுத்த 51ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 7 நாட்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் அரசியல் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அந்த வகையில் 25ஆம் தேதி  பா.ஜ.க. மாஜி மாநிலத் தலைவர் வந்திருந்தார். அவர், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். அப்போது, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மகன் சூரியராஜபாலு, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருந்தார். அவருக்கும் பா.ஜ.க மாஜி மாநிலத் தலைவர், பதக்கத்தை அணிவிக்க முயன்றபோது, சூரியராஜபாலு சிரித்துக் கொண்டே, அந்தப் பதக்கத்தைக் கழுத்தில் போடவிடாமல் தடுத்து, கைகளில் வாங்கிக்கொண்டு படம் எடுத்துக்கொண்டார். இதனால் அந்த மாஜியின் முகம் இருண்டுபோனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த பா.ஜ.க. பிர முகர், ’"அந்தத் தம்பி எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். யார் கைல பதக்கம் வாங்கணும், யார் கைல வாங்கக் கூடாது என்பது, ஒவ் வொரு மனிதரின் தனிப்பட்ட உரிமை. அவர் இந்தத் துறையில் சாதனை பண்ணணும்'’என்று சங்கடத்தோடு சொல்லிவிட்டுச் சென்றார்.''”

"திண்டுக்கல் மாநகராட்சியில் ஏகத்துக்கும் ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதே?''”

"அண்மையில் மாநகராட்சிகளின் துணை இயக்குநர் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி, பாதாள சாக்கடை நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ. 17 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.19,834 மதிப்பு கொண்ட ஒரு குப்பைத் தொட்டியை ரூ.37,750 என்ற வீதத்தில் 137 குப்பைத் தொட்டிகளை ரூ.51,71,750க்கு சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலமாக வாங்கியதும், அப்போதைய மாநகராட்சி கமிஷனர் மனோகர், துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன்  ஆகியோர் 1 முதல் 12 வரை உள்ள வார்டுகளில் சொத்துவரியை குறைவாக மதிப்பிட்டு ரூ.18,00,272 முறைகேடு செய்ததும் கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இதனடிப்படையில்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. அதேபோல் இந்த ஊழல்கள் நடந்தபோது திண்டுக்கல் மேயராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த மருதராஜ் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற குரல் அங்கே வலுத்துவருகிறது.''”

"தாசில்தார் ஒருவர் வசூலில் கொடிகட்டிப் பறக்கிறார் என்கிறார்களே?''”

"சிவகங்கை மாவட்டத் தாலுகா ஒன்றில் தாசில்தாராக பணியாற்றி  வருபவர் வெண்ணெய் திருடும் கடவுளின் பெயரைக் கொண்ட வர்.’  இவர் பதவி ஏற்றதிலிருந்து வசூலில் கொடிகட்டி பறந்து வருகிறாராம். மணல், சரளைக் குவாரிகள் தொடர்பான உரிமம் ஒருவர் பெயரில் இருக்க, அதை இன்னொருவரை விட்டு நடத்தச்சொல்லும் அவர், "நீங்க குவாரியை ஓட்டிக்கங்க. எதுவந்தாலும் நான் பாத்துக்குறேன்'’என தனியாகச் சிலரைக் களமிறக்கி, மணல் சரளைக் கடத்தலுக்கு துணை போவதாக, கனிமவளத்துறை மூலம் ஆட்சியருக்கு தகவல் சென்றிருக்கின்றது. இருந்தும் ஏனோ அது கிடப்பில் போடப்பட்டி ருக்கிறது. இந்த நிலையில் அரசு புறம்போக்கு நிலங்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறேன் என்கிற பெயரில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள 3 சென்ட் நிலம், வெறும் ரூ.5 லட்சத்திற்கே' என ரியல் எஸ்டேட்  அதிபர்களிடம் மலிவு விலையில் விற்று அவர்களுக்கும் இவர் சேவைசெய்து வருகிறாராம்.''” 

"வேற என்ன தகவல் இருக்கு?''”

"இந்த மாதம் ஓய்வுபெறவிருக்கும் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தீயணைப்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட இருக்கி றார். இதைத் தொடர்ந்து  இவருக்கு பெரிய அளவில் பிரிவு உபசாரவிழா தயாராகி வருகிறது. இந்த நிலை யில் தற்காலிக டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமிக்கப்படவிருக்கிறாராம்.''”

"சரிப்பா, நானும் ஒரு  முக்கியமான, கவலைக் குரிய ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அரசு வெளியிடும் அரசாணைகள், அறிவுறுத்தல்கள்,  கருத் துருக்கள் என எதுவாக இருந்தாலும் தமிழில்தான் வெளியிட வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கடுமையாக அறிவுறுத்தியிருந்தார் ஸ்டாலின். இதற்காக ஒரு அரசாணையும் தமிழில் பிறப்பிக்கப் பட்டது. இந்த உத்தரவை ஏற்று அரசுத் துறைகள் அனைத்தும் தமிழில் உத்தரவுகளைப் பிறப்பித்தன. இதை 1 மாதம்தான் அவை கடைபிடித்தன. அதன்பிறகு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ட்ரான்ஸ்ஃபர் உத்தரவு தவிர மற்ற பெரும்பாலான உத்தரவுகளும்  அரசாணைகளும் ஆங்கிலத்திலேயே  வெளியிடப்பட்டு வருகின்றன. இது குறித்த புலம்பல்கள் கோட்டையில் எதிரொலிக்கிறது.''” 

_________________
சிகிச்சையில்

ஐயா நல்லகண்ணு!

ranbox

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முக்கால் நூற்றாண்டுக்கு மேலான தன் கட்சிப் பணிகளாலும் அறியப்படும் நல்லகண்ணு அவர்கள், ஆகஸ்ட் 22-ஆம் தேதியன்று தனது வீட்டில் படுக்கையிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் அவரது நெற்றி, கை நடுவிரல் ஆகியவற்றில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது இரண்டாவது மகள் மருத்துவர் ஆண்டாள் மற்றும் குடும்பத்தினர் நந்தனம் அருகிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று சற்று தேறிவந்த நிலையில், மருத்துவமனையில் காபி அருந்தும் போது புரைக்கேறியதில், நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டது. உடனே அதற்கான சிகிச்சையில் சிறிது சுணக்கம் ஏற்பட, அப்போது நல்லகண்ணுவைக் காணவந்த மருத்துவத் தம்பதி களும் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்களுமான மருத்துவர்கள் ரவீந்திரன், சாந்தி ரவீந்திரன் ஆகியோர், அந்த தனியார் மருத்துவமனையில் அளித்துவந்த சிகிச்சை போதாதெனவும், தீவிர சிகிச்சை தேவையெனவும் உணர்ந்து, உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவி யுடன் கொண்டு சென்றார்கள். அப்படி மாற்றாது போயிருந் தால், சிக்கல் ஏற்பட்டிருக்கும் என இந்த மருத்துவ தம்பதிகள் அபிப்ராயப்படுகின்றனர். அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கவனித்ததில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி நல்லகண்ணு அவர்களுக்கு சற்று சுயநினைவு திரும்பியது. உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் தென்பட்டது. இந்நிலையில் புதனன்று இரவு 11 மணி வாக்கில் நாடித்துடிப்பில் சிறிது சரிவு ஏற்பட, உடனடியாக கவனித்து தற்போது வென்டிலேஷன் துணையுடன் செயற்கை சுவாசமளித்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.''       


-கீரன்