ரு வாரத்தில் முடிவைச் சொல்கிறேன் என்று ஜனவரி 3ந்தேதி கூடிய தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்திருந்தார் மு.க.அழகிரி. என்ன மூவ்மெண்ட் மதுரையில் என விசாரித்தோம்.

stalin-alagiri

""அண்ணே ஒரு முடிவோட தான் அந்த ஆலோசனைக் கூட்டத்திலிருந்து கிளம்பினார். சென்னையில் தயாளு அம்மாவை பார்க்கப் போன இடத்தில் குடும்பத்தில் தனது உடன்பிறப்புகளான செல்வி, தமிழரசு ஆகியோரிடம் தனக்கான நியாயத்தை அழகிரி சொல்ல, இது ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்கிறது. கோபாலபுரம் குடும்ப உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அழகிரிக்கும் ராஜ்யசபா எம்.பி, அவர் மகன் துரைதயாநிதிக்கு மாணவர் அணி பொறுப்பு என அழகிரிக்காக சிபாரிசு செய்துள்ளனர். ஆனால், அழகிரியோ தன் உடல்நிலையால் ராஜ்ய சபா எம்.பி. பதவியை விரும்பவில்லை. அதை துரை தயாநிதிக்கு கொடுங்க. என் ஆதரவாளர்களான மன்னன், முபாரக் மந்திரி போன்றோர்களுக்கு மேயர் தேர்தலில் முக்கியத்துவம் கொடுங்க என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் பேசியபோது, யாரும் பிடிகொடுத்து பேசவில்லையாம். காரணம், 3ந் தேதி கூட்டத்தில் தன்னுடைய ஆதங்கங் களைக் கொட்டிய அழகிரி, தன் பேச்சின் இறுதியில், மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று சொன்னதை தி.மு.க. நிர்வாகிகள் கொஞ்சமும் விரும்பவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் சூழல் கனிந்து வரும் நிலையில் அவர் இப்படிப் பேசலாமா என்பது, ஆட்சிக் கனவில் இருக்கும் நிர்வாகிகளின் கேள்வி.

Advertisment

தி.மு.க.தான் தங்கள் உயிர் என்ற உணர்வுடன் அழகிரி பக்கம் இருக்கும் ஆதரவாளர்களும்கூட, மீண்டும் தி.மு.கவில் இணைந்து பணியாற்றுவதை அழகிரியின் அந்தப் பேச்சு கெடுத்து விட்டதாகவே நினைக்கிறார்கள். மேலும், அழகிரி ஆதரவாளர்களை மீண்டும் உள்ளே கொண்டு வருவதால், மதுரையில் கட்சிக்கு புதிய சங்கடத்தை தான் கொடுக்கும். ஏற்கனவே அவரிட மிருந்து விலகிய கட்சி நிர்வாகிகள் எப்படி மீண்டும் அழகிரி முன் எப்படி நிற்க முடியும்? பழையதை மனதில் வைத்து பழிவாங்கமாட்டாரா? தேவை யில்லாத தலைவலி வேண்டாம் என்ற ரீதியில் தலைமைக் கழக நிர்வாகிகள் பேசியுள்ளனர்.

இந்த குழப்பத்தில், மதுரையில் ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராம சபை கூட்டம் மிக பிரமாண்டமாக ஏற் பாடு நடந்துவந்த நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்ததுடன், பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று வாய் மொழி உத்தரவு போட்டிருக்கிறார் ஸ்டாலின். பொங்கலுக்குள் நல்ல செய்தி வரும் என்று அழகிரி ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த செய்தி, தேர்தலுக்கு முந்தைய பலன் தரக்கூடியதா, தேர்தலுக்குப் பிறகான பலன்கள் நிறைந்ததா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

-அண்ணல்