கோட்டையைப் பிடித்தாலும் கோவையில் ஒரு தொகுதியினைக்கூட பிடிக்கவில்லை என்பது தி.மு.க.வின் கௌரவத்திற்கு சேலஞ்சாக அமைய, நகர்ப்புற தேர்தலில் கோவை மேயரை தன்வசப்படுத்த, கரூர் செந்தில்பாலாஜியை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தி.மு.க.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பெண்களுக்கு 50 வார்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக மேயர் பதவி பெண்களுக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயருக்கான தேர்தலில் தி.மு.க. தரப் பில் காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க., ம.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் பலமாக களமிறங்கினா லும், கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரு சீட்டை வழங்கியுள்ள அ.தி.மு.க.வோ வேலுமணி எனும் ஒற்றை நபரை முன்னிறுத்தி களமிறங்கியுள்ளது.
மேற்கு மண்டலத்தில் தி.மு.க. வென்றாக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் சேலத்திற்கு நேருவையும், கோவைக்கு செந்தில் பாலாஜியையும் அறிவித்தது தி.மு.க. தலைமை. கோவைக்கு வந்த நாளிலிருந்தே தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து கருத்துகளைக் கேட்ட செந்தில்பாலாஜி, "இது எனக்கு தன்மானப் பிரச்சனை. ஒத்துழை யுங்கள்'' என்கின்ற வேண்டுதலை வைத்தார்.
'அத்திப்பழத்தை பிட்டால் அத்தனையும் சொத்த' என்பது போல கட்சிக்குள்ளேயே முன் னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை வடக்கு புறநகர் மாவட்ட மா.செ. சி.ஆர்.ராமச்சந்திரன், கிழக்கு மாநகர் மாவட்ட மா.செ. நா.கார்த்திக், வடக்கு மாநகர் மாவட்ட மா.செ. பையாகவுண்டர், கிழக்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, தெற்கு மாவட்ட மா.செ. டாக்டர் வரதராஜு, தமிழ்மணி, தென்றல் செல்வராஜ், புரட்சி பிரபாகரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் க்ரூப் பாலிடிக்ஸ் செய்வதுதான் முக்கிய பிரச்சனை! பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்" என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
உக்கடம் பகுதியினைச் சேர்ந்த தி.மு.க. நிர் வாகி ஒருவரோ, "கட்சி விசுவாசியும், பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளருமான கோட்டை மேடு அப்பாஸிற்கு 82-வது வார்டை வழங்காமல் கிழக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தியின் ஆதரவாளரான முபசீராவிற்கு வார்டு ஒதுக்கப்பட் டது, மேயர் வேட்பாளர் என முன்னிலைப்படுத்தப் பட்ட 57-வது வார்டு மீனா ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்காமல், சாந்தாமணி எனும் புதுமுகத் திற்கு வார்டு அறிவிக்கப்பட்டது என பிரச்சனை களுக்குக் குறைவில்லை. இங்கு பதவியிலிருக்கும் பலர் செந்தில்பாலாஜியின் தலைமையை விரும்பவில்லை" என ஆதங்கப்படுகிறார்.
கட்சி நிர்வாகிகள் பலர் பெயருக்கு பிரச்சாரம் செய்வது செந்தில் பாலாஜிக்கு தெரியவர, தன்னு டைய சொந்த ஊரான கரூரிலிருந்து ஆட்களை இறக்கி வார்டு வார்டாக பிரச்சாரத்தை முடுக்கி விட்டு, மொத்தமுள்ள 100 வார்டுகளுக்குண்டான 1,290 பூத்களுக்கு பூத்திற்கு தனியாக 10 பேர், அவர்களை கண்காணிக்க 2 பேர் என நியமித்து வேலை வாங்கிவருவதால் தி.மு.க. வேட்பாளர்களின் மத்தியில் பிரகாசம் தோன்றியுள்ளது.
வடக்கு மாநகர மாவட்டத்தினைச் சேர்ந்த 60 வயதைத் தாண்டிய கட்சி மூத்த உறுப்பினர் ஒருவரோ, "தி.மு.க.வில் பொறுப்பிலுள்ள, தற்போது போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவிகித நபர்கள் கட்சியினைத் தாண்டி முன்னாள் அமைச் சர் வேலுமணியுடன் வியாபாரத் தொடர்பிலுள்ள வர்கள். 38-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் மேயர் பதவிக்காகப் போட்டியிடும் ஷர்மிளா சந்திர சேகருக்கு எதிராக தி.மு.க. சார்பில் அமிர்தவல்லி போட்டியிடுகிறார். ஷர்மிளா வெற்றிபெற வேண்டு மென்பதற்காக அதே வார்டில் வசிக்கும் கிழக்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தன்னுடைய மகளை அங்கு நிறுத்தா மல் 20 கி.மீ. தொலைவிலுள்ள 97-வது வார்டில் நிறுத்த என்ன காரணம்? இந்த வார்டின் அருகில் தான் வேலுமணியின் வீடும் இருக்கின்றது. உன்னு டைய வேட்பாளரை நான் காப்பாற்றுகிறேன். என்னுடைய வேட்பாளருக்கு நீ வழிவிடு என்பது போல்தான் உள்ளது.
கோவை மாநகராட்சியில் தன் ஆதரவு ஆட் கள் மேயர் பொறுப்பில் அமரவேண்டுமென்பது வேலுமணியின் விருப்பம்! அப்பொழுது தான் மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.ஆயிரம் கோடிக்கு அதிகமான ஊழலை மறைக்கமுடியும். அதற்காக வரிந்துகட்டுகிறார் அவர். இதையெல்லாம் மீறி கோவை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றும் நாள் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும்" என்கிறார் அவர்.
வேலுமணியின் தனிப் பட்ட செல்வாக்கு செந்தில் பாலாஜிக்கு சரியாக டப் பைட் கொடுத்து வர, குரூப் பாலி டிக்ஸ், வேலுமணியுடன் தி.மு.க.வினரின் மறைமுக உறவு, உள்ளூர் தி.மு.க.வினரின் ஒத்துழையாமைக்கு நடுவில் வெற்றிக்கு வாள் சுழற்றுகிறார் செந்தில்பாலாஜி. எப்பாடு பட்டாவது கோவையை முதல் வர் கையில் கொடுக்கவேண்டும் என்பதற்காக கரன்சி மழை யைப் பொழியத் திட்டமிட் டுள்ளார் செந்தில்பாலாஜி. எல்லாம் சரியாக நடந்தால்... 60-க்கும் அதிகமான வார்டுகளைப் பிடித்து, கோவை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றும் என்கிறது உளவுத்துறை.
படங்கள்: விவேக்