ராங்கால் தத்தளிக்கும் தமிழகத் தலைநகர்! தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை!

cc

"ஹலோ தலைவரே, அடை மழையால் வெள்ளத்தில் தவிக்கும் சென்னையில், முதல்வர் ஸ்டாலினின் நேரடிப் பார்வையும்-விரைவான மீட்பு நடவடிக்கைகளும் மக்களுக்கு நம்பிக்கையைத் தந்திருக்குது.''”’

"ஆமாம்பா, அவரே களத்தில் இறங்கியதால், அரசு எந்திரம் ஸ்பீடாயிடிச்சி. இருந்தாலும், தலைநகரான சென்னை ஒவ்வொரு பருவ மழைக்கும் இப்படி தத்தளிக்கிற நிலைமையை, முறையான கட்டமைப்புகள் மூலமா மாற்று வதில்தான் மு.க.ஸ்டாலின் அரசின் முழு வெற்றி உள்ளது. சென்னை மூழ்காமல் தப்பிச்சாலும் தமிழகத்தில் பா.ஜ.க. மூழ்குற நிலையில் இருக்குதாமே?''”’

cc

"பா.ஜ.க.வில் உள்ளவங்களே அப்படி சொல்றாங்க தலைவரே, அவங்க கோபமெல்லாம் அண்ணாமலை மேலேதான். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விரைவில் தமிழக பா.ஜ.க.வுக்கு மூடுவிழா நடத்தப் போறாருன்னு அவங்க கட்சிக்காரங்களே சொல்றாங்க. அவர் ஜாதகத்தில் தமிழக முதல்வராக ஆவார்னு எந்த ஜோசியரோ சொன்னதை நம்பித்தான் அவர் அரசியலுக்கே வந்தாராம். மாநிலத் தலைவரான தற்கும் ஜோசியம்தான் காரணம்னு நம்பியிருந்த அவருக்கு எதிரா, இப்போது கட்சியின் மாநில நிர்வாகிகளும், தேசிய நிர்வாகிகளும் கோபக் கொந்தளிப்பாக இருக்கிறார்களாம்.''”’

"என்ன காரணம்?''””’

annamalai

"அண்ணாமலையின் பிம்பம், கே.டி.ராகவன் விவகாரத்தில் சரிந்துபோயிடிச்சி. இருந்தும் விடாமல், தமிழகத்தில் அக்கட்சியின் தலைவர் களாக இருந்தவர்களும் முக்கியப் பிரமுகர்களும் கட்சியின் பெயரில், நிறைய வசூலித்து விழுங்கி விட்டதாக, பிரதமர் மோடியிடம் அண்ணாமலை ரிப்போர்ட் கொடுத்தாராம். கூடவே, இவர்களின் தில்லுமுல்லுகளுக்கு கட்சியின் மேலிடப் பார்வை யாளர்களான சி.டி.ரவி, சந்தோஷ் போன்றவர் களும் உடந்தையாக இருந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தாராம்.

"ஹலோ தலைவரே, அடை மழையால் வெள்ளத்தில் தவிக்கும் சென்னையில், முதல்வர் ஸ்டாலினின் நேரடிப் பார்வையும்-விரைவான மீட்பு நடவடிக்கைகளும் மக்களுக்கு நம்பிக்கையைத் தந்திருக்குது.''”’

"ஆமாம்பா, அவரே களத்தில் இறங்கியதால், அரசு எந்திரம் ஸ்பீடாயிடிச்சி. இருந்தாலும், தலைநகரான சென்னை ஒவ்வொரு பருவ மழைக்கும் இப்படி தத்தளிக்கிற நிலைமையை, முறையான கட்டமைப்புகள் மூலமா மாற்று வதில்தான் மு.க.ஸ்டாலின் அரசின் முழு வெற்றி உள்ளது. சென்னை மூழ்காமல் தப்பிச்சாலும் தமிழகத்தில் பா.ஜ.க. மூழ்குற நிலையில் இருக்குதாமே?''”’

cc

"பா.ஜ.க.வில் உள்ளவங்களே அப்படி சொல்றாங்க தலைவரே, அவங்க கோபமெல்லாம் அண்ணாமலை மேலேதான். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விரைவில் தமிழக பா.ஜ.க.வுக்கு மூடுவிழா நடத்தப் போறாருன்னு அவங்க கட்சிக்காரங்களே சொல்றாங்க. அவர் ஜாதகத்தில் தமிழக முதல்வராக ஆவார்னு எந்த ஜோசியரோ சொன்னதை நம்பித்தான் அவர் அரசியலுக்கே வந்தாராம். மாநிலத் தலைவரான தற்கும் ஜோசியம்தான் காரணம்னு நம்பியிருந்த அவருக்கு எதிரா, இப்போது கட்சியின் மாநில நிர்வாகிகளும், தேசிய நிர்வாகிகளும் கோபக் கொந்தளிப்பாக இருக்கிறார்களாம்.''”’

"என்ன காரணம்?''””’

annamalai

"அண்ணாமலையின் பிம்பம், கே.டி.ராகவன் விவகாரத்தில் சரிந்துபோயிடிச்சி. இருந்தும் விடாமல், தமிழகத்தில் அக்கட்சியின் தலைவர் களாக இருந்தவர்களும் முக்கியப் பிரமுகர்களும் கட்சியின் பெயரில், நிறைய வசூலித்து விழுங்கி விட்டதாக, பிரதமர் மோடியிடம் அண்ணாமலை ரிப்போர்ட் கொடுத்தாராம். கூடவே, இவர்களின் தில்லுமுல்லுகளுக்கு கட்சியின் மேலிடப் பார்வை யாளர்களான சி.டி.ரவி, சந்தோஷ் போன்றவர் களும் உடந்தையாக இருந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தாராம். இதையறிந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பொன்னார், வானதி சீனிவாசன் உள்ளிட்ட அத்தனை மாநிலப் பிரமுகர்களும், எம்.எல்.ஏ.க்களும் அண்ணா மலைக்கு எதிராக வரிந்துகட்டி, அவர் மீது புகார்களை தலைமைக்கு அனுப்பினாங்க. டெல்லி மேலிடமும் அண்ணாமலைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாம். அதனால், இனியும் பா.ஜ.க.வில் குப்பை கொட்ட முடியாது என்பதைப் புரிந்துகொண்ட அண்ணாமலை, கே.பி.ஜே. (கொங்குநாடு பாரதிய ஜனதாக் கட்சி) என்ற பெயரில் புதுக்கட்சியைத் தொடங்க முடிவெடுத்திருக்கிறாராம்.''”’

"ம்...''”

"அண்ணாமலை தலைமையில் உருவாக இருக்கும் இந்தப் புதிய கட்சியில், பா.ஜ.க. தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஹெச்.ராஜா, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட, சம்மதம் தெரிவிச் சிருக்காங்களாம். அதனால் இப்பவே கட்சியில் இருக்கும் மாவட்ட வாரியான நிர்வாகிகளுடன் நெருக்கம் பாராட்டி வருகிறாராம். தனது புதிய கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று கணிக்கிற அண்ணாமலை, விரைவில் அந்தக் கட்சியைப் பலப்படுத்தி, தமிழகம் தழுவிய அளவில் ஆதரவைப் பெருக்கி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்று கணக்குப் போடு கிறாராம்.''”’

’"ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 13-ந் தேதி திருப்பதியில் கூட்டும் தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துக்குவாரா?''”’

”"தென் மாநிலங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும், தீவிர வாதம் குறித்த பிரச்சனைகளை விவாதிக்கவே கூட்டம் கூட்டப்படுவதாகத் தெரிகிறது. இதில் ஸ்டாலின் பங்கேற்பாராங்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. ஏன்னா, ஸ்டாலின் முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் முதல்முறையாக டெல்லிக்குச் சென்றபோது, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்ப அமித்ஷாவை சந்திக்க அவர் விரும்பிய நிலையில், நேரம் கிடைக்கலை. அதனால் அமித்ஷாவின் கூட்டத்தை பதிலுக்கு ஸ்டாலினும் புறக்கணிப்பார்னு சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்னு இப்ப கோட்டை வட்டாரங்கள் சொல்லுது. அவர் கலந்து கொள்ளும் பட்சத்தில் என்னென்ன கோரிக்கைகளை வைக்கப் போகிறாரோ என்று அறிந்துகொள்வதில், அமித்ஷா ஆர்வம் காட்டுகிறாராம்.''’

"மாஜி அ.தி.மு.க. மந்திரி ஒருவருக்கு, கம்பி எண்ணும் யோகம் நெருங்குதாமே?''”’

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அந்த மாஜி அமைச்சர், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். தனது துறையில் வேலை போட்டுத் தருவதாகக் கூறி, ஏராள மானவர்களிடம் ஏகத்துக்கும் வசூலித்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதுபோல, அவரின் கீழ் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியவரும் மாஜி மீது மோசடிப் புகாரைக் கொடுத்திருந்தார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண், அந்த மாஜி மீது எஃப்.ஐ.ஆர். போட்டு வழக்கைப் பதிவு செய்துவிட்டார். இது போன்ற மோசடிப் புகார்கள், அவர் மீது அணிவகுத்து வருவதைப் பார்த்த காவல்துறை, மாஜி மந்திரியை அதிரடியாகக் கைது செய்யவும் வியூகத்தில் இருக்கிறதாம்.''”’

"இப்போதைய அமைச்சர் ஒருவரின் உதவியாளர்கள் பற்றியும் அதிக புகார்கள் வருதே?''”’

’"ஏற்கனவே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா, போலீஸ்காரர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் சர்ச்சையானது. இப்போது அவரது மற்றொரு உதவியாளரான பில்லா ஜெகன் என்பவர், தீபாவளி அன்று, தூத்துக்குடியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமர்ந்துகொண்டு மது அருந்திய நிலையில் கலாட்டாவில் ஈடுபட்டி ருக்கிறார். போதையின் உச்சத்தில், மேலும் மதுவருந்த, அந்த வளாகத்திலேயே இருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அலுவலகத்தை திறந்துவிடச்சொல்லி, அங்கிருந்த பணியாளர் ஒருவரை அடித்து உதைத்திருக்கிறார். அந்தப் பணியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸ், தயவு தாட்சண்யம் பார்க்காமல், பில்லா ஜெகனை கைது செய்தது. விசாரணை யில், அவர் தொடர்பான பல கிரிமினல் சம்பவங்கள் தெரியவந்திருக்கு. அதிலும் இந்த பில்லா ஜெகன் விமானத்தில் பறந்தபடியேதான் தன் நண்பர்களுடன் கிரிமினல் செயல்களுக்குத் திட்டம் போடுவாராம். இதையெல்லாம் மாநில உளவுத்துறை, முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு போயிருக் கிறதாம்.''”’

"உள்ளாட்சி சட்டங்களில் திருத்தங்களைச் செய்ய அரசு முடிவெடுக்குதே?''”’

"உண்மைதாங்க தலைவரே, உள்ளாட்சித் தேர்தலில் மீதமிருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலையும் தி.மு.க. அரசு, நடத்தி முடித்துவிட்டது. முந்தைய ஆட்சியாளர்கள், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் செக்கில் கையெழுத்து போடும் அதிகாரத்தை துணைத் தலைவர்களுக்கு கொடுத்திருந்தனர். பெரும்பாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர்களை, இந்தக் கட்சியின் அரசியல் ரவுடிகள் ஆட்டி வைத்துக்கொண்டு இருந்தனர். அதனால், இப்போது செக்கில் கையெழுத்து இடும் அதிகாரத்தை, தலைவர்களிடம் மாற்றத் திட்டம் தயாராகி வருகிறது. அரசுக்கு வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி முடிவுக்கு தி.மு.க. அரசு வந்திருக்கிறது.''”

"டி.டி.வி. தினகரன், தனது அ.ம.மு.க. கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தை நடத்தி இருக்காரே?''”’

rang

"இந்த 3 நாள் கூட்டம் 6-ந் தேதி தொடங்குச்சு. முதல் நாள் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் தினகரன். அதில் கலந்துக்கிட்ட மா.செ.க்கள் அனைவருமே சசிகலாவின் தலைமையில் அ.தி.மு.க. வருமா? அந்தக் கட்சியுடன் அ.ம.மு.க. இணையுமா? என்றெல்லாம் கேள்விகளோடு இருந்தனர். ஆனால் தினகரனோ, வெற்றி தோல்வி சகஜமானது. நமக்கான வெற்றி கிடைத்தே தீரும். மாநகராட்சி -நகராட்சி தேர்தலில் நம் கட்சி வெற்றிபெறும் என்றெல்லாம் பேசிக் கொண்டே போக, கூட்டத்தில் முணுமுணுப்பும் சலசலப்பும் எழுந்திருக்கு. அதை கவனித்த அவர், உங்க மனதில் என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரியும். அதை வெளிப் படையாகவே கேளுங்கள். இல்லை என்றால் கடிதம் மூலம் எழுதிக் கொடுங்கள் என்று சொல்லி யிருக்கிறார். உடனே எல்லோரும் அப்போதே அவருக்கு, மளமள வென கடிதம் எழுத ஆரம்பித்து விட்டார்களாம்.''’

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். அண்மையில் மறைந்த, மதுரையின் மாமனிதரான கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எம்.ஏ. நன்மாறன், தனது கடைசிக் காலத்தில், தன் மனைவியின் விருப்பப்படி, வீட்டுவசதி வாரியத்தில் தனக்கு குறைந்த வாடகையில் வீடு ஒன்றை ஒதுக்கித் தரும்படி, கடந்த ஆட்சிக் காலத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் மரணமடைய, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செய்தார். அப்போது அவரது கோரிக்கை ஸ்டாலினின் கவனத்துக்கு வர, தன்னுடன் இருந்த தனது செயலாளரான உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.சிடம் இது குறித்துப் பேச, இதைத் தொடர்ந்து நன்மாறன் குடும்பத் திற்கு ஒரு வீடு அலாட் செய்யப்பட்டி ருக்கிறதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகப் போகுதாம்.''”

nkn101121
இதையும் படியுங்கள்
Subscribe