ரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகளால் டோலிவுட்டை அலறவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி... கோலிவுட்டையும் அலறவிட்டுக்கொண்டிருக்கிறார்.

"கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா?' எனக்கேட்டு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றம் சுமத்தினார். "தி பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கா?' என ஸ்ரீகாந்த் மீது குற்றம் சுமத்தினார்.

நடிகர் ராகவா லாரன்ஸை சில நண்பர்கள் மூலம் கோல்கொண்டா ஹோட்டலில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

"ஹோட்டலில் அவரின் அறைக்குள் போனதும் சுவாமி ராகவேந்திரரின் புகைப்படமும், ருத்ராட்ச மாலைகளும் வைத்திருந்தார். மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்து முன்னேறியதாகவும், பலருக்கும் உதவி செய்வதாகவும் தெரிவித்தார். இதனால் அவர் மீது மதிப்பு ஏற்பட்டது. ஆனால் போகப்போக கலர் மாறத் தொடங்கினார். ஆடையை நீக்கி எனது தொப்புள் பகுதியை காட்டச் சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமான்ஸ் பண்ணிக்காட்டச் சொன்னார். அப்படியே பாய்ந்து என்னை படுக்கையில் தள்ளி செக்ஸ் வைத்துக்கொண்டார். எனக்கு பட வாய்ப்புத் தருவதாகச் சொன்னார். எங்களின் நட்பு தொடர்ந்தது. ஆனால் பெல்லம்கொண்டா இந்த நட்புக்கு வில்லனானார்' என ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

Advertisment

srireddy

ப்படி அதிரடி கிளப்பிய ஸ்ரீரெட்டி... "பல நடிகர்களின் தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது. ஆனால் நான் தமிழ் சினிமாவின் இருட்டுப் பக்கத்தின் ரகசியங்களை தொடர்ந்து வெளியிடவே விரும்புகிறேன்' என தெரிவித்ததுடன்... பாலியல் ரீதியான பட்டியலை தொடர்ந்து வாசிக்கிறார்.

""ஹைதராபாத்தில் "அரண்மனை' படப்பிடிப்பு நடந்தபோது... படத்தில் நடிக்கக்கேட்டு கணேஷ் என்பவர் தன்னை "எக்ஸிகியூடிவ் புரொடியூஸர்' எனச் சொல்லிக்கொண்டு போன் செய்தார். எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சுந்தர்.சி.யை அறிமுகப்படுத்தி வைத்தனர். என் ஃபேஸ்புக் நண்பரான கேமராமேன் செந்தில்குமாரும் "200 சதவிகிதம் அடுத்த படத்தில் உனக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்றார். மறுநாள் நோவாடெல் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள். தனக்கும், சுந்தர்.சி.க்கும் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்று கணேஷ் சொன்னார். அதன்பிறகு என்ன நடந்ததோ... அந்த பெருமாளுக்கே வெளிச்சம். கணேஷ் ஒரு பிராடு. எனக்கு உதவவில்லை'' என குற்றம் சுமத்தியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

Advertisment

தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோவாக இருக்கும் சந்தீப் கிஷன், தமிழிலும் "யாருடா மகேஷ்?', "மாநகரம்', "நெஞ்சிலே துணிவிருந்தால்' உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

"சந்தீப் கிஷன் மோசமான நடத்தையுள்ளவர். இந்த உலகத்திலேயே மிக அழுக்கான ஆள்' என குற்றம் சுமத்தியுள்ளார் ஸ்ரீரெட்டி.

ந்த பரபரப்புக்கு மத்தியில்... ஹைதராபாத்திற்குள் நுழைய ஸ்ரீரெட்டிக்கு தடைவிதிக்க தெலுங்கு நடிகர் சங்கம் முயற்சிப்பதாக சொல்கிறார் ஸ்ரீரெட்டி.

தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ்விற்கு ஸ்ரீரெட்டி விடுத்திருக்கும் கோரிக்கையில்... “""பல அரசியல்வாதிகள் சினிமா நடிகைகளோடு தொடர்பில் இருப்பவர்கள்தான். உங்களுக்கு வேண்டப்பட்ட உங்கள் கட்சிக்காரர்களும் இதில் உண்டு. ஆனாலும் நான் அரசியல்வாதிகளைப் பற்றி வாய் திறக்கப்போவதில்லை. என்னை ஹைதராபாத்திற்குள் நுழையவிடாமல் தடுக்க முயற்சிகள் செய்கிறது தெலுங்கு நடிகர்சங்கம். எனக்கு தகுந்த பாதுகாப்பை நீங்கள் வழங்கவேண்டும்'' எனக் கேட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் குபீர் குற்றச்சாட்டுகளால் கோலிவுட்டிற்கு வியர்த்திருக்கும் நேரத்தில்... எந்த கெட்ட பழக்கமும் இல்லாத "டீடோட்லர்' எனப்படும் டி.ராஜேந்தர்... ""சினிமாவில் நல்லவங்களும் இருக்காங்க. கெட்டவங்களும் இருக்காங்க. குற்றச்சாட்டுக்கு ஆளானவங்க தகுந்த விளக்கத்தைச் சொன்னால் பிரச்சினை தீரும்'' எனச் சொல்லியுள்ளார்.

இது தனக்கான ஆதரவுக் குரல் என உணர்ந்த ஸ்ரீரெட்டி... “""உங்கள் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன். உங்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி சார்'' என டி.ஆருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

""ஆமா... ஸ்ரீரெட்டி சொல்றதெல்லாம் உண்மையா? இல்லேன்னா... பரபரப்புக்கு அப்படிச் சொல்றாரா?''

இப்படி ஒரு டவுட் எல்லாருக்குமே...

அதற்கு ஸ்ரீரெட்டி என்ன சொல்லீருக்கார்ன்னா..

. "சிலநாள் பரபரப்புச் செய்தியில இடம்பிடிக்கிறதுக்காக... யாராவது தங்களோட சொந்த வாழ்க்கையை பணயம் வைப்பாங்களா?'

-ஆர்.டி.எ(க்)ஸ்