திருப்பத்தூர் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு கட்டித் தந்த வீடுகளில், திறப்பு விழா நடந்த 15 நாட்களிலேயே ஒரு வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
2021, ஆகஸ்ட் 27ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் களின் நலம் காக்க 317 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில், புறாக்கூண்டு போல் வாழ வசதியில்லாத நிலையி லுள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என் றும் அறிவித்தார். அதன்படி 2021, நவம்பர் 2ஆம் தேதி வேலூர் மாவட் டம் மேல்மொணவூர் முகாமில் அடிக் கல் நாட்டி புதிய வீடுகளுக்கான கட்டுமானத்தை தொடங்கிவைத் தார். தமிழ்நாட்டிலுள்ள 106 இலங் கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் மக்களுக்கு, 406 கோடி மதிப்பில் 7,469 வீடுகள் கட் டித்தரும் பணிகளைத் தொடங்கினர்.
இந்த வீடுகள் 320 சதுர அடி யில் ஒரு அறை, சமையல் அறை, கழிப்பறை, ஹால் என கட்டித் தரப் பட்டுள்ளன. வேலூர் மேல்மொண வூர், திண்டுக்கல் மாவட்டம் மாலப் பட்டி, திருச்சி வாழவந்தான் கோட்டை, கரூர் தோரணக்கல்பட்டி ராயனூர், சேலம் பவளத்தூர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தச்சூர் ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல முகாம்களில் வீடுகள் கட்டும் பணி நடந்துவருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக் குட்பட்ட மின்னூர், சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் வசித்துவந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு அரசு ரூ.4.42 கோடி நிதி ஒதுக்கியதில் மின்னூர் பகுதியில் 236 குடியிருப்புகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மை யினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்துவைத்தனர். திறப்பு விழா நடந்த 15 நாட்களுக்குப் பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி காந்தன் என்கிற மயூரன் விஜயா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் புதிய வீட்டிற்கு குடிவந்துள்ளது. அப்படி வந்தவர்கள் அதன்பின் நடந்தவற்றைக் கூறும்போது, "கட்டடப் பணிகள் நடைபெற்று வரும்போது அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், துறைசார்ந்த அரசு அதிகாரிகள் என அனைவரும் ஆய்வுசெய்துவிட்டு சென்றார்கள். நாங்கள் குடிவந்தபின் பார்த்தபோது, வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளது. என் வீட்டின் மேற்கூரை பூச்சு விழுந்துள்ளது. நாங்களோ, குழந்தைகளோ அப்போது வீட்டில் இருந்திருந்தால்? செத்த பிறகு நஷ்டஈடு தருவார்கள், ஆறுதல் சொல்வார்கள், போன உயிர் திரும்ப வருமா? எங்களை வாழவைப்பதற்காக வீடு கட்டித் தந்தார்களா? சாவதற்கு கட்டிக்கொடுத்தார்களா? இதுமட்டுமல்ல வெளியிலுள்ள கால்வாய், கழிவறைக்கான பைப் லைனை மாற்றி மாற்றி அமைத்துள்ளனர்''” என்றார்.
அதே குடியிருப்பில் உள்ள கண்ணம்மா, வீட்டின் சுவரிலுள்ள விரிசல்களை சுட்டிக்காட்டினார். பல வீடுகளின் சுவர்களில் விரிசல் காணப்பட்டது. பில்லரையும், சுவரையும் சரியாக இணைக் காததே விரிசலுக்குக் கார ணம். அங்கு கட்டப்பட்டுள்ள பல வீடுகளிலும் இதே நிலைதான். இதனால் முகாம் மக்கள் பிரச்சனை செய்ததும், தகவலறிந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் நேரடி யாகச் சென்று வீடுகளை ஆய்வுசெய்தார். இரண்டு நாள் அதிகாரிகள் குழு ஆய்வுசெய்து வெளியிட் டுள்ள அறிக்கையில், "பயனாளிகள் தங்களுக்கான வீட்டை உள் அலங்காரம் செய்ய, டைல்ஸ் ஒட்ட கூடுதல் மின்விளக்கு பொருத்த, பெயின்ட் பட்டி பார்க்க சிமெண்ட் பூச்சுகளை உடைத்தார்கள். அதி களவு மாறுதல் நடந்த வீடுகள் 28, குறைந்தளவு மாறுதல் நடந்த வீடுகள் 24. இந்த மாறுதலால்தான் ஒரு வீட்டின் பூச்சு விழுந்துள்ளது. மற்றபடி வீட் டின் கட்டுமானம் தரமாகவே உள்ளது. குடியிருப் பைக் கண்காணிக்கத் தவறிய வருவாய் ஆய்வாளர் பணிவிடுவிப்பு, ஒப்பந்தக்காலம் முடியும் வரை கண்காணிக்கத் தவறிய ஒப்பந்ததாரருக்கு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.
இந்த வீடுகள் கட்டும் பணியைச் செய்தது ஆளும்கட்சியைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவராகவுள்ள ஸ்ரீநிதி கன்ஸ்ட்ரக்சன் சக்தி கணேசன். இவர் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான வில்வநாதனுக்கு உறவினர் என்கிறார்கள் ஆளும்கட்சியினர்.
சின்னச் சின்ன மாறுதல் செய்ததற்கே மேற்கூரை பெயர்ந்துவிழுகிறது, சுவரில் விரிசல் விழுகிறெதென்றால், இதுவே அதன் தரம். இதனைத் தீவிரமாக விசாரணை நடத்தினால் கமிஷன் பார்த்த பலரும் சிக்குவார்கள் என்பதால் இந்த விவகாரத்தை பயனாளிகள்மீது குற்றம்சாட்டி முடித்துவிட்டார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-கிங்