லங்கையில் 3 தேவாலயங்கள், 3 பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியாகியிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். உலக நாடுகளை உறைய வைத்திருக்கும் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், இலங்கையில் செயல்படும் குறிப்பிட்ட ஒரு இஸ்லாமிய அமைப்பே இதற்கு காரணம் எனச் சொல்லி, 27 முஸ்லிம்களை கைது செய்துள்ளன இலங்கையின் புலனாய்வு அமைப்புகள்.

s

வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயரதிகாரிகளுடனும் அவசர ஆலோசனை நடத்தினார் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே. முதல்கட்ட விசாரணையில், ஹோட்டல் களிலும் தேவாலயங்களிலும் நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலைதாரிகளே ஈடுபட்டிருந்த தாக ரணிலிடம் அதிகாரிகள் விவரித்திருக்கிறார் கள். கொடூரமாக நடந்துள்ள இந்த தாக்குதலில் நிலைகுலைந்துபோன ரணில், ""தாக்குதலின் பின்னணிகளை முழுமையாக தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தற்கொலைதாரிகள் என்கிற வகைப்பாட்டில் புலனாய்வு செய்து சாதாரண பின்னணி கொண்டதாக இச்சம்பவங்களை முடித்துவிட நினைக்காதீர்கள். தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பது உள்நாட்டு சதியா? அல்லது வெளிநாட்டு சதியா? சதிகளுக்கு காரணம் என்ன? என்பது குறித்து முழுமையான விசாரணை அறிக்கை எனக்குத் தேவை'' என கடுமையாக உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisment

இதற்கிடையே தேசத்தைப் பாதுகாக்க முப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரம் கொடுத்து உத்தரவிட்டிருப்பதுடன், இலங்கை முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. தாக்குதல் நடந்த இடங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்ட புலனாய்வு அதிகாரிகள், தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைதாரிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள் அனைத் திலும் 25 கிலோ எடை கொண்ட சி - 4 ரக வெடி பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. சி - 4 ரகம் என்பது வீரியமிக்க வெடிபொருள். வானுயர்ந்த கட்டிடங்களை துவம்சம் செய்யும் ஆற்றல் மிக்கது. அத்துடன் அந்த வெடிபொருட் களுடன் 100-க்கும் மேற்பட்ட ஆணிகளையும் இணைத்துள்ளனர். வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் போது கொத்துக்கொத்தாக மனிதர்கள் கொல்லப்பட வேண்டுமென்பதற்காகவே ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், தாக்குதல்களுக்கு ஆளான ஷாங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்த 2 நபர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்திருப்பதையும் அதற்கான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் புலனாய்வு அமைப்புகள் கைப்பற்றியிருப்பதாக கொழும்புவிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.

s

Advertisment

இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘""உள்நாட்டு அரசியல், வெளிநாட்டு வர்த்தக சதி என்கிற இரண்டு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வருடம், பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு அந்த இடத்தில் மகிந்த ராஜபக்சேவை அமர வைத்தார் அதிபர் சிறிசேன. அதிகபட்ச சட்டச் சிக்கலை உருவாக்கியது இந்தச் சம்பவம். உச்சநீதிமன்றம் தலையிட்டதன் பேரில் இலங்கையின் அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ராஜபக்சேவை பதவியிலிருந்து அகற்றினர். மீண்டும் ரணிலே பிரதமரானார். ராஜபக்சேவை பிரதமராக்கிய சிறிசேனவின் இமேஜ் சர்வதேச அளவில் சரிந்தது.

sss

இந்தச் சூழலில், ரணிலின் அதிகாரத்தில் இலங்கை மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை நிலைநிறுத்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க லாம். ஏனெனில், தாக்குதல் நடந்த 8 இடங்களும் தமிழர்களின் பகுதிகளிலேயே நடந்துள்ளது. அதுவும் கிறிஸ்தவ தேவாலயங்களும் வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களும் மட்டுமே குறிவைக்கப்பட்டிருப்பதையும் கவனத் தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டால்தான் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட கிறிஸ்துவ நாடுகள் ரணிலை நோக்கி கேள்வி எழுப்பும்.

இது ஒருபுறமிருக்க, உள்நாட்டு போர் முடிந்த காலகட்டத்திலிருந்தே இலங்கையை சிங்கள தேசமாக மாற்றும் முயற்சியை எடுத்து வருகின்ற னர் பௌத்த பிக்குகள். இதற்கு தமிழர்கள் மட்டுமல் லாது கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 2009-ல் நடந்த யுத்தத்தில் ஈழத்தமிழர்களை கொன்றழித்தாயிற்று. அவர் களால் இனி பிரச்சனை இல்லை. அடுத்து கிறிஸ்த வர்களை அழித்து அதன் பழியை முஸ்லிம்கள் மீது போடுவதன் மூலம் இரு மதத்தினரையும் ஒடுக்கி விடலாம். இதன் மூலம் ஒரு கட்டத்தில் ஏக இலங்கையை சிங்கள தேசமாக அறிவித்து விட முடியும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் செயல்படுகின்றன.

ra

உள்நாட்டு அரசியல் இப்படியிருக்க, உலக வல்லா திக்க நாடுகளோ இலங்கையின் எண்ணெய் வளங்களை குறி வைத்து அரசியல் செய்து வரு கின்றன. உலக அளவில் எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்காலமாக பெட் ரோலிய வளங்கள் குறைந்து வருகின்றன.. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இணையாக தற்போது அபரிமிதமான எண்ணெய் வளமிக்க நாடாக இருக்கிறது இலங்கை. பல ஆய்வு முடிவுகள் இதனை நிரூபிக்கின்றன. இந்த நிலையில்தான், இலங்கையின் பொருளாதார வளத்தை அமெரிக்காவும் சீனாவும் கொள்ளையடிக்க பல முதலீடுகளை இலங்கைக்குள் இறக்கியிருக்கின்றன. இந்த இரு நாடுகளும், எண்ணெய் வளங்களை அபகரிக்கும் திட்டத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், வடகிழக்கு கடற்பரப்பில் அபரிமிதமாக இருக்கும் எண்ணெய் வளங்களை இந்த இரு நாடுகளையும் புறக்கணித்து பிரிட்டனிடம் ஒப்படைக்க விரும்புகிறது இலங்கை அரசு. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ள நிலையில்தான் இந்த குண்டு வெடிப்பு பயங் கரம் நடந்திருக்கிறது. இலங்கைக் குள் தங்களைத் தவிர வேறு ஒரு நாடு கால் பதிக்க அமெ ரிக்காவும் சீனாவும் அனுமதிக்குமா?

ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை சுரண்டுவதற்காக அந்த நாட்டுக்குள் கால் பதிக்க வேண்டுமாயின் அந்நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, அதனை அச்சுறுத்தி, அந்த நாட்டுக்கு உதவுவதாகச் சொல்லி வல்லரசு நாடுகள் உள்ளே நுழைந்து விடும். இந்த டெக்னிக்கை அமெரிக்காதான் அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் அண்மைக்காலமாக சீனாவும் அதே பாணியைப் பின்பற்றுகிறது. இத்தகைய டெக்னிக் தான் இலங்கை வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றது. ஆக, வெடிகுண்டு பயங்கரத்துக்கு காரணம் வெளிநாட்டு சதியா? உள்நாட்டு அரசியலா? வெளிநாட்டு சதி எனில் குண்டு வைத்தது அமெரிக்காவா? இல்லை சீனாவா? என்பது விரைவில் அம்பலமாகும்'' என்கின்றனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ள இந்த பயங்கரம் ஜீரணிக்க முடியாதது. விடுதலைப் புலிகள் இருந்தவரை எந்தச் சூழலிலும் இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை. சிங்கள அர சின் ராணுவத்தையும் அதன் பொருளாதார கட்ட மைப்பை தகர்த்தெறிந்துள்ள புலிகள், தங்களின் துல்லிய தாக்குதல்களை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளனர். அவர்கள் நடத்திய எந்த ஒரு தாக்குதலிலும் பொது மக்களுக்கோ, வழிபாட்டு தலங்களுக்கோ ஒரு சின்ன பாதிப்பும் ஏற்பட்ட தில்லை. புலிகள் இருந்த வரை வல்லரசுகளின் தீவிரவாதம்கூட இலங்கைக்குள் நுழையமுடிய வில்லை. மீறி நுழைந்த தீவிரவாதத்தை புலிகளே அழித்த சம்பவங்களும் உண்டு. ஆனால், புலிகளின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பிரகடனப்படுத்தி உலக நாடுகளின் உதவியோடு அவர்களை அழித்த பலனை இப்போது அறுவடை செய்து வருகிறது இலங்கை.

-இரா.இளையசெல்வன்

____________

இறுதிச்சுற்று

வேட்பாளர் தேர்வு!

மே. 19-ஆம் தேதி நடை பெறும் இடைத் தேர்தல் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து, நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழுவையும் நியமித்துவிட்டது தி.மு.க. தலைமை. ஆளும் கட்சியின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் மகேந்திரன், ஒட்டப்பிடாரம் சுந்தர்ராஜ், அரவக்குறிச்சி சாகுல் ஹமீது, சூலூர் சுகுமார் ஆகிய நான்கு பேரை வேட்பாளர்களாக அறிவித்துவிட்டார் தினகரன்.

இந்த நான்கு தொகுதிகளில் செந்தில் பாலாஜி போட்டி யிடும் அரவக்குறிச்சி தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்ப தால், அத்தொகுதியில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை வேட் பாளராக அறிவித்தால் அந்த சமூகத்தின் வாக்குகளை வாங்குவது சுலபம் என முதல்வர் எடப்பாடிக்கு, உளவுத்துறை நோட் போட்டது. இந்த விஷயம் தினகரனுக்கும் லீக் ஆக ஆளும் கட்சியை முந்திக் கொண்டு சாகுல் ஹமீதை வேட்பாளராக அறிவித்துவிட்டார்.

-ஜெ.டி.ஆர்.

பொள்ளாச்சி போல பெரம்பலூர்?

fபொள்ளாச்சி பாலியல் கொடூர வீடியோக்களைப் போல் பெரம்பலூரிலும் இருக்கிறது என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவி, அப்பகுதி மக்களை திகிலடைய வைத்துள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்த ஆளும் கட்சி வி.ஐ.பி. ஒருவரின் பி.ஏ.வாக இருக்கும் அந்த நபர், வி.ஐ.பி.யிடம் உதவி கேட்டோ, மனு கொடுக்கவோ வரும் இளம் பெண்களை கரெக்ட் பண்ணிவிடு வாராம். அதன் பின் அந்த வி.ஐ.பி.க்கும் அனுப்பிவிடுவாராம். அந்தப்f பெண்களை வீடியோ எடுத்து, தொடர்ச்சியாக தொல்லை கொடுப்பாராம் அந்த வி.ஐ.பி. அப்படிப்பட்ட வீடியோ வில் சிக்கிய ஒரு இளம் பெண், போலீசாக இருக்கும் தனது உறவுக்கார பெண்ணிடம் விஷ யத்தைச் சொல்லி அழுதாராம். அந்த போலீஸ் பெண்மணியோ, ஆளும் வி.ஐ.பி.யிடமே அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய் பேரம் பேசினாராம். இத னால் மிரட்சியான அந்தப் பெண் கப்சிப்பாகிவிட்டாராம். "இந்த வில்லங்க விஷயத்தை தீவிர விசாரணை செய்து, அந்த வி.ஐ.பி.மீதும் அவரின் பி.ஏ.மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குப் போவேன்' என்கிறார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வக்கீல் அருள். "விசாகா கமிட்டி இதுகுறித்து விசாரிக்கும்' என்கிறார் எஸ்.பி.திசா மிட்டல். ஆனால் அப்படி ஒரு வீடியோ இருப்பது உண்மையா அல்லது வதந்தியா என்பது விரைவில் தெரியவரும் என்கிறார்கள் பெரம்ப லூர் புள்ளிகள்.

-எஸ்.பி.சேகர்

காசை திருப்பிக் கொடு’’

தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் குமாருக்காக ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் அள்ளி வழங்கினார்கள். அந்த வகையில் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் பணத்தை வாரி இறைத்தனர். ஓட்டுப் பதிவு அன்று பூத்தில் இருந்த அ.தி.மு.க. ஏஜெண்டுகள், தங்களிடம் பணம் வாங்கிய ஆட்களெல்லாம் ஓட்டுப் போடுகிறார்களா என வாக்காளர் பட்டியலைப் பார்த்து டிக் அடித்துக் கொண்டே வந்தனர்.

லிஸ்டில் மிஸ்ஸானவர்களை கவனமாக குறித்துக் கொண்டு, ஓட்டுப் பதிவு முடிந்த மறுநாள் காலையிலேயே ஒவ்வொரு வீடாகப் போய், "பணத்தை திருப்பிக் கொடுத்துருங்க, கட்சித் தலைமையிலிருந்து கணக்கு கேட்டு குடையுறாய்ங்க' என மக்களை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

-சி.என்.ஆர்.