உளவாளியைத் தூதராக்கி ஊடுருவும் இலங்கை? -எச்சரிக்கும் தமிழுணர்வாளர்கள்!

ss

தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதராக வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டது வெளியுறவுத்துறை மட்டங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிற நிலையில்... தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவர் நடத்திவரும் ஆய்வுப்பணிகள் இந்தியாவுக்கு ஆபத்தானவை என்கிறது இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

srilanka

இலங்கையில் துறைமுகங்கள் திட்டத்தை முன்னெடுத்து வரும் சீன அரசு, இலங்கையின் பொருளாதார பலத்தை வலிமைப்படுத்துவதற்காக பல லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை அதிபர் கோத்தபாய மற்றும் பிரதமர் ராஜபக்சே இருவரும் அதற்கான கதவுகளை சீனாவுக்காக அகலத் திறந்து வைத்துள்ளனர்.

துறைமுக திட்டங்களின் வழியாக, இந்தியாவின் தென்மாநில கடல் பிரதேசங்களை உளவு பார்க்கவும், இந்திய துறைமுகங்களின் கட்டமைப்புகளை அறியவும் இலங்கையின் உதவியை நாடியுள்ளது சீன அரசு. சீனாவுக்கு உதவும் வகையில்தான் வெங்கடேஸ் வரனை துணைத்தூதராக நியமித்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. இதுகுறித்து இலங்கைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் தொடர்புடையவர்களிடம் நாம் விசாரித்தபோது,”ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, விடுதலைப் புலிகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த உதவிகளை உளவு பார்த்து ராஜபக்சே சகோதரர்களுக்கு தகவல் தந்து வந்தவர் வெங்கடேஸ்வரன். ஈழத்தமிழர் இவர். கருணாவைப்போல இவரும் துரோகிதான். ராஜபக்சே சகோதரர்களின் உயர்மட்ட உளவாளி இவர்.

sare

யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு உணவும், மருந்துகளும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களும் எங்கிருந்து கிடைக்கின்றன? யார் அவைகளை அனுப்பித் தருகிறார்கள்? எங்கெங்கு விநியோகிக்கப்படுகிறது? அவ

தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதராக வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டது வெளியுறவுத்துறை மட்டங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிற நிலையில்... தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவர் நடத்திவரும் ஆய்வுப்பணிகள் இந்தியாவுக்கு ஆபத்தானவை என்கிறது இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

srilanka

இலங்கையில் துறைமுகங்கள் திட்டத்தை முன்னெடுத்து வரும் சீன அரசு, இலங்கையின் பொருளாதார பலத்தை வலிமைப்படுத்துவதற்காக பல லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை அதிபர் கோத்தபாய மற்றும் பிரதமர் ராஜபக்சே இருவரும் அதற்கான கதவுகளை சீனாவுக்காக அகலத் திறந்து வைத்துள்ளனர்.

துறைமுக திட்டங்களின் வழியாக, இந்தியாவின் தென்மாநில கடல் பிரதேசங்களை உளவு பார்க்கவும், இந்திய துறைமுகங்களின் கட்டமைப்புகளை அறியவும் இலங்கையின் உதவியை நாடியுள்ளது சீன அரசு. சீனாவுக்கு உதவும் வகையில்தான் வெங்கடேஸ் வரனை துணைத்தூதராக நியமித்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. இதுகுறித்து இலங்கைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் தொடர்புடையவர்களிடம் நாம் விசாரித்தபோது,”ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, விடுதலைப் புலிகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த உதவிகளை உளவு பார்த்து ராஜபக்சே சகோதரர்களுக்கு தகவல் தந்து வந்தவர் வெங்கடேஸ்வரன். ஈழத்தமிழர் இவர். கருணாவைப்போல இவரும் துரோகிதான். ராஜபக்சே சகோதரர்களின் உயர்மட்ட உளவாளி இவர்.

sare

யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு உணவும், மருந்துகளும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களும் எங்கிருந்து கிடைக்கின்றன? யார் அவைகளை அனுப்பித் தருகிறார்கள்? எங்கெங்கு விநியோகிக்கப்படுகிறது? அவை செல்லும் பாதைகள் என்றெல்லாம் சிங்கள ராணுவத்திற்கு முன்கூட்டியே வெங்கடேஸ்வரன் தகவல் தர, அவைகளை தடுத்து நிறுத்துவதுடன் சிங்கள ராணுவத்துக்கு அவற்றை அனுப்பி வைத்துவிடுவர். தகவலின் தன்மைக்கேற்ப வெங்கடேஸ் வரனுக்கு சன்மானம் கொடுத்துவிடும் சிங்கள அரசு.

உயர்மட்ட உளவாளியான வெங்கடேஸ்வரன், இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு ராஜபக்சே சகோதரர்களிடமும், சிங்கள ராணுவ தளபதிகளுடனும் நெருங்கிய தொடர்பை வளர்த்துக்கொண்டார். இப்படிப்பட்ட காலத்தில்தான் கடந்த ஆண்டு, இலங்கையின் ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தையும் ராஜபக்சே குடும்பம் கைப்பற்றியது. பொதுவாகவே, சீனாவின் செல்லப்பிள்ளையாக கருதப்படுபவர்கள் ராஜபக்சே சகோதரர்கள்.

இந்தியாவின் கடல்வழி மார்க்கத்தின் கட்டமைப்பு மீது சீனாவுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. குறிப்பாக, இந்திய துறைமுகங்களை கண்காணிக்கும், உளவு பார்க்கும் வேலையை சில பல ஆண்டு களாகவே செய்துவருகிறது சீனா. ஆனால், அதற்கான ஒற்றர்கள் சீனாவுக்கு கிடைக் காமல் இருந்தனர். இந்த நிலையில்தான், இலங்கையின் ஆட்சி அதிகாரம் முழுமையும் ராஜபக்சேக்களிடம் அடைக்கலமானதால் அவர்கள் வழியாக இந்தியாவுக்கு எதிரான வலைப்பின்னல்களை ராஜபக்சேக்களை வைத்தே நடத்திக்கொண்டிருக்கிறது சீனா. அந்த வகையில் முதல்கட்டமாக சீனாவுக்காக தனது நம்பிக்கைக்குரிய ஒற்றர் வெங்கடேஸ்வரனை துணை தூதர் போர்வையில் இந்தியாவுக்குள் நுழைத் துள்ளார் கோத்தபாய.

தென்னிந்தியாவுக்கான துணை தூதர் பதவிக்கு இலங்கையின் வெளியுறவுத் துறையில் பணிபுரிந்த தகுதி வாய்ந்த அதிகாரிகளைத்தான் நியமிப்பது வழக்கம். அதனடிப்படையில் கடந்த காலங்களில் இந்த பதவிகளில் தமிழர்கள் பலர் இருந்தபோதி லும், இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவர்கள் செயல்பட்டதில்லை. துணை தூதருக்குரிய பணிகளை மட்டுமே அவர்கள் கவனித்தனர்; கவனமும் செலுத்தினர். முதன்முறையாக இந்த பதவிக்கு தகுதி வாய்ந்த அதிகாரிகள் பலர் இருந்தபோதும், அரசியலமைப்பு சட்டத்தை புறக்கணித்து, தகுதியில்லாத ஒற்றர் பணியில் இருந்த வெங்கடேஸ்வரனை தூணைத்தூதராக கொண்டு வந்துள்ளனர் ராஜபக்சேக்கள். இவரும் பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வுப் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

srilanka

குறிப்பாக, தமிழகத்திலுள்ள தூத்துக்குடி துறைமுகம், புதுச்சேரியிலுள்ள காரைக்கால் துறைமுகம் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார் வெங்க டேஸ்வரன். இந்த 2 துறைமுகங்களுக்கும் சீனாவால் அச்சுறுத்தல் இருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் உலவும் தகவல். அப்படிப்பட்ட நிலையில், தூத்துக்குடியிலுள்ள முட்டியாரா அனல்மின் நிலையத்தின் பணிகளை சமீபத்தில் ஆய்வு செய்திருக் கிறார் வெங்கடேஸ்வரன். இந்தியாவுக்கு சொந்தமான துறைமுகங்களிலும், தமிழகத்திற்கு சொந்தமான அனல்மில் நிலையத்திலும் இலங்கை துணைத் தூதருக்கு என்ன வேலை? அவர் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் என்ன? இப்படி விசிட் அடிப்பதும், ஆய்வு செய்வதும் துணை தூதரின் பணிகள் கிடையாது. அப்படியிருக்கையில் எதற்காக ஆய்வு செய்யவேண்டும்?

துறைமுகம் மற்றும் அனல்மின் நிலையங்களில் உள்ள அரசு அதிகாரிகளின் மூலமாக திட்டங்களின் வடிவமைப்புகள், அதன் நோக்கங்கள், பலன்கள் என பலவற்றையும் தெரிந்துகொண்டு அத்தகவல்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ராஜபக்சேக்களிடம் சேரும் அந்த தகவல்கள், சீனாவுக்கு சொல்லப் படுகின்றன. சீனா விரும்பும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று உளவு பார்த்து இலங்கைக்கு தகவல் சொல்லிக்கொண்டிருந்த வெங்கடேஸ்வரனை தற்போது இந்தியாவுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைத்து தகவல்களை பெற்று வருகிறது இலங்கை. வெங்கடேஷ்வரனின் ஆய்வுகளின் பின்னணியிலுள்ள ஆபத்துகளை இந்திய அரசு உணர்ந்துள்ளதா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்திற்கு விசிட் அடித்த வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன்சர்மா, காவல்துறை எஸ்.பி. நிகாரிகாபட் ஆகியோருடன் ஆலோசித்திருக்கிறார். அதன்பிறகு புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார் வெங்கடேஸ்வரன். மேலும், புதுச்சேரியில் இருக்கும் தனியார் துறைமுகம் ஒன்றிற்கும் விசிட் அடித்து துறைமுகத்தின் கட்டமைப்புகளை ஆய்வு செய்துள்ளார்.

காரைக்காலுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கான பணிகளையும் அதற்கான கட்டமைப்புகளையும் ஆய்வு செய்யவே வெங்கடேஸ் வரன் விசிட் அடித்ததாக புதுச்சேரி அரசு தரப்பில் கூறப்பட்டாலும், கப்பல் போக்குவரத்து திட்டங்கள் குறித்து இரு நாடுகளுக் கிடையே பேசுவதற்கும் ஆய்வுகளை செய்வதற்கும் சம்மந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் முன்னெடுப்பதற்கு பதிலாக துணை தூதர் ஒரு வரை இந்தப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தையோ, இலங்கையிலுள்ள சீன அரசின் திட்டங்களையோ அல்லது இலங்கையிலிருக்கும் அதன் துறைமுக திட்டங்களையோ இந்திய தூதர் ஒருவர் ஆய்வுசெய்ய, சீனாவும் இலங்கையும் சம்மதிக்குமா? இன்னும் சொல்லப்போனால், இந்திய வெளியுறவு அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவினரையாவது இலங்கையின் துறைமுகங்களை ஆய்வுசெய்ய இலங்கை அரசு அனுமதிக்குமா? இந்தியாவுக்கு எதிரான பல ரகசிய திட்டங்களையும் உளவு வேலைகளையும் இலங்கையின் உதவியுடன் சீனா செய்து வருகிறது என்கிற சந்தேகம் இந்தியாவுக்கு உண்டு. சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளும் வகையில் இந்திய அதிகாரிகள் இலங்கைக்குள் ஆய்வு நடத்த ராஜபக்சேக்கள் சம்மதிப்பார்களா?

நிச்சயம் ஒத்துழைக்க மாட்டார்கள். அப்படியிருக்கும்போது, "இலங்கையின் தூதர் ஒருவரை இந்தியாவிலுள்ள துறைமுகங் களையும் அனல்மின் நிலையங்களையும் ஆய்வுசெய்ய இந்திய ஒன்றிய அரசு எப்படி சம்மதிக்கிறது என்பதுதான் புரியவில்லை' என்கிறார்கள் தெற்காசிய கடல் பிராந்தியத்தை அலசும் ஆய்வாளர்கள். இதற்கிடையே, தமிழகத்தில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிக்கூடங்களை பர்ச்சேஸ் செய்யும் திட்டத்தையும் வெங்கடேஸ்வரன் மூலம் ரகசியமாக முன்னெடுத்து வருகிறது இலங்கை அரசு. சமீபத்தில், கோவையில் இயங்கும் தனியார் பள்ளிக்கூடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன் அப்பள்ளிக்கூட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையையும் நடத்தியிருக்கிறார் வெங்கடேஸ்வரன். "ஒரு துணை தூதருக்கு பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது?' என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சென்னையிலுள்ள இலங்கைத் துணை தூதரகத்தில் அடிக்கடி தமிழர்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்து கிறார் வெங்கடேஸ்வரன். அந்த ஆலோசனையில், இலங்கை அரசுக்கு சாதகமான பல விசயங் கள் அவர்களுக்கு போதிக்கப் படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் அரசியல் சூழல்கள், அவலுலக நிர்வாக விவாதங்கள் என பல்வேறு ரகசியங்கள் இலங்கையின் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் உயரதிகாரிகளிடமும் அரசியல் தலைவர்களிடமும் ரகசிய சந்திப்புகளை நடத்திவருகிறார் வெங்க டேஸ்வரன் என்கிறார்கள்.

nkn040921
இதையும் படியுங்கள்
Subscribe