தில்லைநகர் என்பது திருச்சியில் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு என்று உருவாக்கம் செய்யப்பட்ட இடமாக இருந்து வருகிறது. தற்போது யாராலும் அவ்வளவு எளிதில் இடம் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தால் 2,990 ரூபாய்க்கு விற்கப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மறுநாளே, 3.30 கோடி ரூபாய்க்கு விற் பனை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது. இதையடுத்து, சங்கத்தின் செயலர் "சஸ் பெண்ட்' செய்யப்பட்டு தற்போது அந்த தில்லைநகர் கூட்டுறவு சங்கத்தின் அ.தி.மு.க. நிர்வாகக்குழு கலைக்கப்பட்டுள்ளது.
தில்லைநகர் கூட்டுறவு வீடு கட்டு மான சங்கத்தின் நிர்வாகக்குழு, 6 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றது. குழுவின் தலைவராக அ.தி.மு.க. பாலக் கரை
தில்லைநகர் என்பது திருச்சியில் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு என்று உருவாக்கம் செய்யப்பட்ட இடமாக இருந்து வருகிறது. தற்போது யாராலும் அவ்வளவு எளிதில் இடம் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தால் 2,990 ரூபாய்க்கு விற்கப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மறுநாளே, 3.30 கோடி ரூபாய்க்கு விற் பனை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது. இதையடுத்து, சங்கத்தின் செயலர் "சஸ் பெண்ட்' செய்யப்பட்டு தற்போது அந்த தில்லைநகர் கூட்டுறவு சங்கத்தின் அ.தி.மு.க. நிர்வாகக்குழு கலைக்கப்பட்டுள்ளது.
தில்லைநகர் கூட்டுறவு வீடு கட்டு மான சங்கத்தின் நிர்வாகக்குழு, 6 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றது. குழுவின் தலைவராக அ.தி.மு.க. பாலக் கரை பகுதிச் செயலர், கலீலூர் ரகுமான் உள்ளார். நிர்வாகக் குழுவின் கூட்டம், கடந்த அக்டோபர் மாதம் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தில்லை நகர் பேரன்ட் காலனி யில் உள்ள, 6,750 சதுர அடி நிலத்தை விக்னேஸ் வரி என்பவருக்கும், தென்னூர் அண்ணாநகரில் உள்ள 2,790 சதுர அடி நிலத்தை ஹக்கீம் என்பவருக்கும் உரிமை மாற்றம் செய்து தர, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக விக்னேஸ்வரியிடம் 2,990 ரூபாயும், ஹக்கீமிடம் 3,069 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி, அந்த இடத்தை கூட்டுறவு சங்கத்தின் செயலர் வேலாயுதம் என்பவர், இருவருக்கும் அக்டோபர் 3-ல் உரிமை மாற்றம் செய்து கொடுத்துள்ளார். இதில் விக்னேஸ்வரி 3-ம் தேதி 2,990 ரூபாய்க்கு வாங்கிய இடத்தை, அடுத்தநாள் 4-ம் தேதியே பிரவீண் என்பவருக்கு 3.30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
தில்லைநகரைப் பொறுத்தவரை 1 சதுரஅடி நிலத்தின் விலை குறைந்தபட்சமே 10 ஆயிரத்துக்கு மேல். ஆனால் இந்த உரிமை மாற்றம் மூலம் சதுர அடி 50 காசுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல்தான் தென்னூரிலும் நிலத்தின் மதிப்பு உள்ளது. ஆனால் வெறும் 2,990 ரூபாய்க்கு 6,750 சதுர அடி நிலத்தையும், 3,069 ரூபாய்க்கு 2,790 சதுர அடி நிலத்தையும் விற்று, கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது. வீட்டுவசதித்துறை விசாரணையில் இறங்கியதில், "அரசு வழிகாட்டு மதிப்பு'ப்படி, இந்த இரு விற்பனையிலும் 56 லட்சம் ரூபாய் இழப்பீடும், சந்தை மதிப்புப்படி பார்த்தால் 10 கோடி ரூபாய்வரை இழப்பீடும் ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த கூட்டுறவு சங்கத்தின் செயலர் வேலாயுதத்தை சஸ்பெண்ட் செய்து, கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டனர்.
திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் கட்டுப்பாட் டில் உள்ள இடங்களை ஏற்கனவே வாங்கியவர்களின் வாரிசு களுக்கு மட்டுமே உரிமை மாற்றம் செய்துதர வேண்டும் என்பது விதி. அதேபோல், சங்கத்தில் நீண்டகால உறுப்பினர்களுக்கே உரிமை மாற்றம் செய்ய வேண்டும். இதையெல்லாம் மீறி உரிமை மாற்றம் நடந்துள்ளது. இடத்தை வாங்கிய திருச்சி பிசினஸ் புள்ளிகள், அமைச்சர்வரை சென்று தப்பிக்கப் பார்த்தனர். சமீபத்தில் அமைச்சரின் இல்ல விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடியிடம்கூட இதுபற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் விசாரணையில் இதில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் பல கோடி ரூபாய் இழப்புக்கு காரணமான நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது என நிர்வாகக்குழு தலைவர் கலீலூர் ரகுமான் உட்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு, டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பதிவுத் துறையின் பதிவாளர் வில்வசேகர், தில்லை நகர் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்து, 8-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். அடுத்தகட்ட மாக "கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டில் அக் கட்சியின் பகுதிச் செயலாளர் தலைமையிலான நிர்வாகக் கமிட்டி ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-ஜெ.டி.ஆர்.