வன்தான் தப்பை ஒத்துக்கிட்டான்ல... இருந்தாலும் அதுக்குத் தண்டனையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளான மாணவிக்கு பணமும், வேறொரு ஸ்கூலில் சேர்த்துவிட்டு தொடர்ந்து பீஸ் கட்டவும் செய்யணும். அதற்காக அவனோட சம்பளத்திலிருந்து மாதம் ரூ.2 ஆயிரம் பிடித்தம் செய்யவெண்டுமென, "மைனர் குஞ்சு' நீதியை வழங்கி, சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் காப்பாற்றியுள்ளது பள்ளி நிர்வாகம்.

d

ஆசியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலவழிப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, 2015-ம் ஆண்டு 300-வது வருடத்தைக் கடந்திருக்கும், "ஷெனாய் நகர் -புனித ஜார்ஜ் பள்ளி' இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலோ இந்தியன் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னாளில் ட்ரஸ்ட்டாக மாற்றப்பட்ட நிலையில்... 2006-க்கு பிறகு மொத்தமுள்ள 12 நிர்வாக உறுப்பினர்களில் 7 நபர்கள் பள்ளியின் தாளாளராக இருக்கும் பிரான்சிஸின் உறவினர்களே. இந்த தாளாளர் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் ஆங்கிலோ இந்தியன் சமூகத்திற்காக நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ. என்பதும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றான இதில் ஆதரவற்ற குழந்தைகள் மிகுதியாக படித்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர், "எனக்கு அம்மா மட்டும்தான். நான் இங்கேயே தங்கி படித்து வந்தேன். எங்களுடைய உடற்கல்வி இயக்குநரும், ஹாஸ்டல் வார்டனுமான எபிதாஸ் அங்கிருக்கும் அனைத்து மாணவிகளிடமும் சைகையாலும், வார்த்தையாலும் ஆபாசமாக நடந்து கொள்வார். அதுபோக மாணவிகள் அனைவரின் மீது கை வைப்பதும், இடிப்பதுமாக இருப்பார்.

Advertisment

ஒரு நாள் நானும் அவருடைய பாலியல் தொல்லைக்கு ஆளானேன். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறினேன். நடவடிக்கை இல்லை. தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளானாதால் வேறு வழியில்லாமல் அம்மாவிற்கு தகவல் கூறினேன். அவர்களும் வந்து பள்ளி நிர் வாகத்திடம் சண்டை போட்டார்கள். உடனே அங்கிருந்து என்னை புரசைவாக்கத்திலுள்ள புனித மாத்தியா ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. என்னைப் போல் பல மாணவிகள் இன்று வரை எபிதாஸால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்." என அதே பள்ளியில் பணியாற்றிவந்த ஆசிரியர் ஒருவரிடம் கூற விவகாரம் விஸ்வரூப மானது.

s

பெயர் கூற விரும்பாத அதே பள்ளியின் ஆசிரியர் ஒருவரோ, "நிர்வாகத்தோட நெருக்க மாக, முக்கியமாக பிரான்சிஸ் குடும்பத் தினருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் எபிதாஸை கண்டும் காணாமல் இருந்த நிலையில் மாணவி விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. மற்றவர்களின் கண்துடைப்பிற்காக, "மாணவிகளை செக்ஸ் அப்யூஸ் செய்ததாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. உங்களை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது.? இது குறித்த விளக்கம் வேண்டும்." என .உடற்கல்வி இயக்குநராகவும், ஹாஸ்டல் வார்டனாகவும் இருந்த எபிதாஸிடம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது பள்ளி நிர்வாகம். அந்த ஆசிரியரும், "ஆமாம்! தெரியாமல் செய்துவிட்டேன்... இனிமேல் அத்தகைய தவறுகள் நடக்காது''" என விளக்கமளித்தார். அதற்கடுத்து நிகழ்ந்ததுதான் எதிர்பாராத திருப்பமே.

Advertisment

இந்த விவகாரம் குறித்து போலீஸிற்குப் போகாமல் சினிமாவில் வரும் விவேக்கின் மைனர் குஞ்சு காமெடிபோல், "அவர் செய்த தவறை ஒப்புக்கொண்டார். அதற்காக 15 நாட்கள் மட்டும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்படு கின்றார். அது போக, உடற் கல்வி இயக்கு நர் தகுதியி லிருந்து உடற்கல்வி ஆசிரியராக பணி இறக்கம் செய்யப்படுகின்றார். மாணவியின் எதிர்காலம் கருதி அவர் வாங்கிய சம்பளம் ரூ.38 ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு ரூ.36 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்'' என மைனர் குஞ்சு பாணியில் தீர்ப்பை வாசித்தது பள்ளி நிர்வாகம்.

ss

"சம்பந்தப்பட்ட சஸ்பெண்ட் காலத்திலேயே அவர் அங்குதான் இருந்ததாகவும், உடற்கல்வி பிரிவிற்கு அவர்தான் இன்றுவரை தலைமை என்பதும் அனைவரும் அறிந்ததே. பள்ளியில் எத்தனையோ பாலியல் சீண்டல்கள் நடந்தும், வெளியேவந்த அந்த ஒரு பிரச்சினையையும் மைனர் குஞ்சு தீர்ப்பின் மூலம் முடித்து வைத்துவிட்டனர். இன்னும் எண்ணற்ற மாணவிகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் எங்கே நடவடிக்கை?'' என வேதனைப்பட்டார் அவர்.

2003-ம் ஆண்டு முதல் 2006-வரை இந்தப் பள்ளியில் தன்னார்வத்தொண்டராக 60 வயது பாரிக் மாத்யூஸ் என்ற ஆங்கிலயேர் பள்ளியில் இணைந்து பணியாற்றினார். அத்தகைய காலகட்டத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த மூன்று மாணவர்கள் தலைமறைவானதாக செய்தி வெளியானது. போலீஸாரும் விசாரித்த நிலையில்... அந்த மாணவர்களுடன் ஆங்கிலேயர் பாரிக் மாத்யூஸ் ஓரின சேர்க்கையில் ஈடுப்பட்டதும், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் விற்றதும் தெரியவந்தது. அத்தோடு அவ்விவகாரம் மூடி மறைக்கப்பட்டது என்பதுதான் அப்பள்ளியின் முந்தைய பாலியல் வரலாறு.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக போராடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் ஸ்ரீதரோ, "இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை மாணவிகளிடம் பா-யல் தொல்லை கொடுத்த எபிதாஸ் பற்றி, மாணவியின் புகார்வந்த நிமிடமே அதனை காவல்துறை, குழந்தைகள் நல ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியப்படுத்தாமல் பள்ளியின் தாளாளரே, தானே காவல்துறை அதிகாரி, தானே நீதிபதி என, தன்னை எண்ணி வரலாற்றில் அழிக்கப்பட முடியாத கறை படிந்த தீர்ப்பை வழங்கியிருக்கின்றார். போக்சோ சட்டத்தில் "மைனர் குஞ்சு' தீர்ப்பு என்பதே இல்லை என்பது அவருக்கு தெரியாது போலும். மாணவி பாலியல் தொல்லை குறித்து 7 ஆவணங் களுடன் கடந்த 02-02-2021 அன்று புகார் செய் தேன். எவ்வித நடவடிக்கையும் இல்லை'' என்கிறார்.

ஜூன் 7-ம் தேதியன்று மாணவிகளின் புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராக பள்ளியின் தாளாளரும், முன்னாள் நியமன எம்.எல்.ஏ. பிரான்சிஸ், எபிதாஸ் உள்ளிட்டோ ருக்கு சம்மன் வழங்கப்பட்டிருந்தது. எபிதாஸ் மட்டும் ஆஜரான நிலையில் பிரான்சிஸ் ஆஜராகவில்லை.

இதுகுறித்துக் கருத்தறிய குற்றச்சாட்டுக் குள்ளான எபிதாஸிடம் பேசினோம், " இது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியராக பணியிலிருக்கும் மார்க் என்பவருக்கும் எனக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இன்னொன்று நான் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்தவன் என்பதாலும் ஒன்றுமில்லாத பழைய விவகாரத்தை இன்று பூதாகரமாக்குகின்றனர்.

அந்த மாணவிக்கு பேட்மின்டன் பயிற்சி கொடுக்கும்போது தவறுத லாக என் கை பட்டது. சிலரின் தூண்டுதலால் அதனை பெரிதாக்கி, எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது நிர்வாகம். கட்டாயத்தின் அடிப்படையிலேயே நானும் பதிலளித்தேன்.

என் மீது தவறு ஏதுமில்லை என்கின்ற ஒரே காரணத்தினால் அந்த மாணவியும் அந்த மாணவியின் அம்மாவும் இதை பெரிது படுத்தவில்லை. குறிப்பிட்ட சிலரின் ஆதாயத்திற் காக, நிறுவனத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் என்மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது''" என மறுத்தார் அவர்.

தாளாளர் பிரான்சிஸோ, "இது ஒரு சின்ன இன்ஸிடென்ட். அந்த மாணவியின் அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பவே விசாரித்தோம். அந்த அம்மாதான் போலீசுக்கு எதுவும் போக வேண்டாம் நீங்களே விசாரிச்சு நல்ல முடிவா சொல்லுங்கன்னு சொன்னாங்க.. அதன் அடிப்படையில்தான் விசாரித்து சஸ்பெண்ட் பண்ணினோம். ஒழுங்கு நடவடிக்கை எடுத்தோம். அத்தோடு அந்த கேஸ் க்ளோஸ். பிறகு மூன்றுமுறை இதுபோல் விசாரித்தார்கள். இப்பொழுது ஸ்ரீதரின் புகாரின்பேரில் விசாரிக்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைக்கின்றோம். இது சிலரின் தூண்டுதலால் இவ்வாறு நடக்கின்றது. முழுக்க முழுக்க பணபேர அளவில்தான் இந்த புகாரே இருக்கிறது''" என முடித்துக்கொண்டார் அவர் .

பாலியல் சீண்டலில் சாதி-மத பேதமின்றி அனைத்து பள்ளி நிர்வாகங் களும் ஒரே மாதிரியாக இருப்பது எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.