கடந்த பிப்ரவரி 11-13 இதழில் வெளியான ‘"அரசியல் ஆடுகளம்!'’ பகுதியில், “"அண்ணாச்சி மீண்டும் அருப்புக் கோட்டை எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு உள்ளது'’ என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுவதாகக் குறிப் பிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், “"பொதுவான பார்வையைத் தாண்டிய உண்மை நிலவரத்தைப் பகிர விரும்புகிறேன்' எனக்கூறி, கட்சியின் உள் விவகாரங்களை விளக்கி னார். அதை அடிப்படை யாகக் கொண்டு தொ டர்ந்து தகவல் சேகரித்த போது, அருப்புக் கோட்டை மற்றும் திருச்சுழி தொகுதிகளில் இருந்து கிடைத்த விவரங்கள் இதோ...
முதலில், விருதுநகர் தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.பி. மாணிக் கம் தாகூர் ஏன் தி.மு.க. மீது கடும் அதிருப்தியிலுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக் குள் - விருதுநகர் மாவட் டத்திலுள்ள சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கியுள் ளன.
கடந்த பிப்ரவரி 11-13 இதழில் வெளியான ‘"அரசியல் ஆடுகளம்!'’ பகுதியில், “"அண்ணாச்சி மீண்டும் அருப்புக் கோட்டை எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு உள்ளது'’ என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுவதாகக் குறிப் பிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், “"பொதுவான பார்வையைத் தாண்டிய உண்மை நிலவரத்தைப் பகிர விரும்புகிறேன்' எனக்கூறி, கட்சியின் உள் விவகாரங்களை விளக்கி னார். அதை அடிப்படை யாகக் கொண்டு தொ டர்ந்து தகவல் சேகரித்த போது, அருப்புக் கோட்டை மற்றும் திருச்சுழி தொகுதிகளில் இருந்து கிடைத்த விவரங்கள் இதோ...
முதலில், விருதுநகர் தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.பி. மாணிக் கம் தாகூர் ஏன் தி.மு.க. மீது கடும் அதிருப்தியிலுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக் குள் - விருதுநகர் மாவட் டத்திலுள்ள சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கியுள் ளன. இவற்றில் அருப்புக் கோட்டை தவிர மற்ற மூன்று தொகுதிகளில் மாணிக்கம் தாகூருக்கு கணிசமான வாக்கு முன்னிலை கிடைத்தது. ஆனால் அருப்புக்கோட்டையில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிர பாகரன் 12,278 வாக்குகள் அதிகம் பெற்றதால், மொத்தப் போட்டி கடைசி வரை இழுபறியாக நீண்டது. இறுதியில் மாணிக்கம் தாகூர் வெறும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது.
இந்த வெற்றியை எதிர்த்து, தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும், "இது “தட்டிப்பறிக் கப்பட்ட வெற்றி'’என்ற குற்றச்சாட்டை பிரேமலதா தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
தனக்கு ஏற்பட்ட இந்த சூழ்நிலைக்கு அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான அண்ணாச்சியே காரணம் என்ற மனக்கசப்பு மாணிக்கம் தாகூரிடம் இருக்கிறது. அதனால் தான் அவர் இனி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமில்லாத மனநிலையிலும், தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டிலும் வெளிப்படை யாக இருக்கிறார்.
அருப்புக்கோட்டை தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் “பல்பு” வாங்கிய விவகாரத்தில், தி.மு.க. தலைமைவரை அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறார் அண்ணாச்சி. அதே நேரத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசின் திருச்சுழி தொகுதி, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனிக்கு பெருவாரியான வாக்கு முன்னிலை கிடைக்கச் செய்தது. ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள்; அதுவும் அடுத்தடுத்த தொகுதி கள். ஆனால் தேர்தல் பணிகளில் ஒருவரின் வேகமும், மற்றொருவரின் சுணக்கமும் தெளி வாகப் பட்டது. இது தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இப்படியொரு சூழலில்தான் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பை விருதுநகர் மாவட்டத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முந்தைய காலங்களில், அரசியல் சீனியரான அண்ணாச்சியின் விருப்பப்படி, அவர் வசிக்கும் விருதுநகருக்கு அருகிலுள்ள பட்டம்புதூரில்தான் தென்மண்டல தி.மு.க. மாநாடுகள் நடைபெற்றன. ஆனால் இந்த முறை, அமைச்சர் தங்கம் தென்னரசின் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட கல்குறிச்சியில் தென்மண் டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/ministers1-2026-02-12-16-49-47.jpg)
இந்த மேடையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரு அமைச்சர்களையும் மருது சகோதரர்கள் போல இணைந்து செயல்படு பவர்கள் எனப் பாராட்டினார். தனிப்பட்ட முறையில் அண்ணாச்சியை பாசமுள்ளவராகக் குறிப்பிட்ட அவர், தங்கம் தென்னரசைப் பற்றி “எந்தத் துறையைக் கொடுத்தாலும் தனித்தன்மையுடன் செயல்பட்டு முத்திரை பதிப்பார்; பன்முக ஆற்றல் கொண் டவர்’என்று ஸ்பெஷலாக பாராட்டினார்.
இரு அமைச்சர்களும் இணைந்தே இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தி வைத்தார் கள் என்று மேடையில் பாராட்டு கிடைத்தாலும், ஒரு லட்சத்துக் கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்புக்கான பெரும்பா லான ஏற்பாடுகளைத் தொடர்ந்து கவனித்தது தங்கம் தென்னரசுதான். இதுகுறித்த முழு விவரமும் தி.மு.க. தலைமையிடம் சென்றுள்ளது.
அருப்புக்கோட்டை தொகுதியில் வேட் பாளராக களம்காணத் தேவையான அனைத்து அரசியல் ஏற்பாடுகளையும் அண்ணாச்சி இப் போது துல்லியமாகச் செய்து வருகிறார். களம் அவருக்கு சாதகமாக இருப்பதாக பேசப்படு கிறது. தனக்கு எதிராக எந்தக் கட்சியில் யார் போட்டியிடலாம் என்பதையும் முன்கூட்டியே ஆய்வு நடத்தி முடிவு செய்து வைத்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பட்ட அடி, அண்ணாச்சியின் வேகத்தை இன்னும் அதிகப் படுத்தியிருக்கிறது.
இந்தப் பின்னணியில், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் உதயநிதி. கட்டுப்பாடு நிறைந்த தி.மு.க. கட்சிக்குள் கூட இவ்வாறான உள்விவகாரங்கள் நடக்கும்போது, அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமா?
மேடையில் ஒற்றுமை பேசப்பட்டாலும், உள்ளுக்குள் நடக்கும் அரசியல் கணக்குகள் வேறு மாதிரியாக உள்ளன. அதன் முடிவு வரவிருக்கும் தேர்தலுக்கான சீட் பட்டியல் வெளியாகும்போது தெரியும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us