Advertisment

பேசுவது இந்துத்வா! கடத்துவது கடவுள் சிலை! -சிக்கிய பா.ஜ.க. பிரமுகர் + கோவில் குருக்கள்!

ss

மிழக கோவில்களில் அற்புதமான சிலைகள் கடத்தப்படுவது காலங் காலமாக நடப்பதுதான். ஆனால், இந்தச் சிலைக்கடத்தலில் இதுவரை ஊராட்சி -வெளிநாட்டு கடத்தல் காரர்கள் தொடங்கி அறநிலையத்து றையினர் வரை கைதாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்களே தவிர, சம்பந்தப்பட்ட கோவில் குருக்கள் யாருமே கைதானதில்லை. சமீப காலத்தில் இது மிகப்பெரிய கேள்வி யாக உருவெடுத்திருந்தது.

Advertisment

கோவில் குருக்களின் உதவி யில்லாமல் அல்லது அவருக்கு தெரியாமல் சிலைக்கடத்தல் நடக்க வாய்ப்பே இல்லை என்று வாதாடு கிறவர்கள் உண்டு. அவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சிலைக் கடத்தல் வழக்கில் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் ஒருவரும், கோவில் குருக்கள் ஒருவரும் கைதாகியிருப்பது ஆன்மிக வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ss

நாகை மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்னாம்சேத்தி வடக்கு குத்தகையை சேர்ந்தவர் செல்வம். 42 வயதான இவர் தற்போது பா.ஜ.க.வின் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது நண்பர் பைரவசுந்தரம். 70 வயதான இவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் குருக்களாக பணி செய்கிறார். ஆன்மிக வட்டாரத்தில் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் உண்டு. அந்த நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக மறைமுகமாக சிலைகளை கடத்தி வந்திருக்கிறார்கள்.

Advertisment

ssஇதையறிந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் அவர்கள் சிலையைக்

மிழக கோவில்களில் அற்புதமான சிலைகள் கடத்தப்படுவது காலங் காலமாக நடப்பதுதான். ஆனால், இந்தச் சிலைக்கடத்தலில் இதுவரை ஊராட்சி -வெளிநாட்டு கடத்தல் காரர்கள் தொடங்கி அறநிலையத்து றையினர் வரை கைதாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்களே தவிர, சம்பந்தப்பட்ட கோவில் குருக்கள் யாருமே கைதானதில்லை. சமீப காலத்தில் இது மிகப்பெரிய கேள்வி யாக உருவெடுத்திருந்தது.

Advertisment

கோவில் குருக்களின் உதவி யில்லாமல் அல்லது அவருக்கு தெரியாமல் சிலைக்கடத்தல் நடக்க வாய்ப்பே இல்லை என்று வாதாடு கிறவர்கள் உண்டு. அவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சிலைக் கடத்தல் வழக்கில் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் ஒருவரும், கோவில் குருக்கள் ஒருவரும் கைதாகியிருப்பது ஆன்மிக வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ss

நாகை மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்னாம்சேத்தி வடக்கு குத்தகையை சேர்ந்தவர் செல்வம். 42 வயதான இவர் தற்போது பா.ஜ.க.வின் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது நண்பர் பைரவசுந்தரம். 70 வயதான இவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் குருக்களாக பணி செய்கிறார். ஆன்மிக வட்டாரத்தில் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் உண்டு. அந்த நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக மறைமுகமாக சிலைகளை கடத்தி வந்திருக்கிறார்கள்.

Advertisment

ssஇதையறிந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் அவர்கள் சிலையைக் கடத்துவது உறுதியானதும் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலையையும் பறிமுதல் செய் தனர். அந்தச் சிலையின் மதிப்பு 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப் பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களிடம் சோதனை நடத்தியதில், வள்ளி-தெய்வானை, பெருமாள், ஆனந்தநடராஜர் என 9 சிலைகள் மறைத்து வைக் கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்து அவற்றையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட மற்ற சிலைகளின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கூறுகின்றனர். சிலைக் கடத்தல் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள சிலைக் கடத் தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய் குமார் சிங் கூறுகை யில், ""வேதாரண் யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த கோவில் குருக்கள் பைரவசுந்தரமும், அவரது நண்பர் செல்வமும் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலையை 1.20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்போவது தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சிலையை விற்பதற்கு பேரம் பேசியதை ரகசியமாக கண்காணித்தோம். அதைத்தொடர்ந்து செல்வத்தின் வீட்டை சோதனை செய்ததில் ஒன்றரை அடி உயர உலோக அம்மன் சிலை, வள்ளி-தெய்வானை சிலைகள், வராக அவதாரம் கொண்ட பெருமாள் சிலை உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டன. அதில் ஒரு சிலை வேதாரண்யம் பகுதியை சேர்ந்தது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலைகள் குறித்தான விவரம், புகைப்படங்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ளோம். அதோடு சிலைகள் காணாமல் போனதாக ஏதாவது புகார் இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம். சிலைக்கடத்தலில் ஈடுபட்ட குருக்கள் பைரவசுந்தரம் மற்றும் செல்வம் ஆகியோர்மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதுகுறித்து ஆயக்காரன்புலம் பகுதி யைச்சேர்ந்த சிலரிடம் விசாரித்தோம். “""பா.ஜ.க. ஒன்றியச் செயலாளராக இருக்கும் செல்வம் சமீபகாலம் வரை சாதாரண ஆளாகத்தான் இருந்தார். வாய்மேட்டில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய பேமிலி ஃபிரண்ட் என்கிற போர்வையில் மூன்று கார்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதோடு அங்கு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, காரைக்காலில் இருந்து மது வகைகளை கடத்திவந்து ஆள் போட்டு விற்றார்.

அந்தச் சமயத்தில்தான் அதே பகுதியில் உள்ள பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த குருக்கள் பைரவசுந்தரத்தோடு நெருக்கம் ஏற்பட்டது, அவரது வழிகாட்டலின்படியே அந்த அரசியல் பிரமுக ரிடமிருந்து விலகி வேதாரண்யம் எக்ஸ் எம்.எல்.ஏ. வேதரத்தினத்தின் ஆசியோடு, முத்துப்பேட்டையைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் வழியாக பா.ஜ.க.வில் இணைந்தார். ssதற்போது வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பில் இருக்கிறார். பா.ஜ.க.வைச் சேர்ந்த எஸ்.கே.வேதரத்தினத்தின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டு அரசியலில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக் கிறார். கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் தேர்த லில் சுயேச்சையாக போட்டியிட்ட செல்வம், சமீபத் திய உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி யின் சார்பில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. பிர முகரான வேதரத்தினம், வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அதேபோல் பிராமணர் சமூகத்தை சேர்ந்த பைரவசுந்தரத்தின் சொந்த ஊர் பன்னாள். ஆனால் வேதாரண்யத்தில் குடியிருக்கிறார். அங்கிருந்தபடியே அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குருக்களாக பணி செய்கிறார். 70 வயதைத் தாண்டியவராக இருந்தாலும் இளைஞரைப்போல தினம் ஒரு பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்து செல்வார். பைரவசுந்தரத்தின் அப்பா உமாபதி குருக்கள், ஆயக்காரன்புலம் நாளாம்சேத்தி கோவில் குளத்தில் உள்ள கோவிலில் குருக்களாக இருந்துகொண்டு மாந்திரீகம் செய்வது, கயிறு கட்டுவது, பேய்ஓட்டுவது என்று வசிய வேலைகளை செய்து வந்தார். அவரது வேலைகளை அப்படியே செய்து வருகிறார் பைரவசுந்தரம். அதன்மூலம் நிறைய வி.ஐ.பி.க்களின் தொடர்பில் இருக்கிறார்.

ஆயக்காரன்புலம் நாளாம்சேத்திக்கும், பஞ்சநதிக்குளம் நடுசேத்திக்கும் இடையே உள்ள ஒரு இடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் வேலை நடந்தது. அப்போது ராமர், சீதாதேவி, பூமாதேவி, பைரவர்னு நிறைய சிலைகள் கிடைத்தன. அந்த சமயத்தில் பைரவசுந்தரத்தின் பெயர் அடிபட்டது. இந்த சிலை புதையலுக்கு பின்னணியில் அவரது கைவரிசை இருக்கிறது என பேசப்பட்டது. அதேபோல சில வருடங்களுக்கு முன்பு அவர் குருக்களாக இருக்கும் ஒரு கோவிலில் ஒரு சிலை காணாமல் போனது. பிறகு சிலநாள் கழித்து அது குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிலையை தூக்கி தண்ணீரில் போட்டதும் இவர்தான் என அப்போது பேசப்பட்டது.

சிலையை கடத்திச் சென்று விற்க ஒரு ஆள்தேவை என்பதால் செல்வத்தை இணைத்துக் கொண்டு சிலைக் கடத்தலில் ஈடு பட்டிருக்கிறார் குருக்கள். ஆரம்பத்தில் செல்வத்தின் வேலை கடத்திக்கொண்டு வரப்பட்ட சிலைகளை மாதம் மூன்று லட்சம் ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு பாதுகாத்து வைப்பது, பாதுகாத்த சிலையை சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்ப்பதற்கு தனி ரேட் என்று பேரம் பேசி இந்த வேலையை செய்துள்ளார். செல்வமும், குருக்களும் சிலைக்கடத்தலில் செல்வச் செழிப்போடுதான் இருக்கிறார் கள்'' என்றார்கள்.

இதுகுறித்து சிலைக்கடத் தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், “""இது இன்று நேற்று நடந்ததல்ல, இருபது ஆண்டுகளாக நடந்து வருகிறது. பொன்.மாணிக்கவேல் பொறுப்பில் இருக்கும்போது கைது செய்யப்பட்ட சர்வதேச சிலைக்கடத்தல் தரகர்களிடம் விசாரித்து சேகரிக்கப்பட்ட லிஸ்ட் ஒன்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருக்கிறது. அதன்படியே ஒவ்வொருவராக கைது செய்துவருகிறோம். இவர் கள் இருவருக்கும் பின்னணியில் கடற்கரையோரம் உள்ள அர சியல் கட்சி பிரமுகரின் கை வரிசை இருப்பது விசாரணையில் தெரிகிறது, விரைவில் ஆதாரத் தோடு கைது செய்வோம்'' என்கிறார்.

நாகை மாவட்ட பா.ஜ.க.வினரோ, செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதோடு அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்தும் நீக்கிவிட்டதாக கூறுகிறார்கள். திடீர் பா.ஜ.க. காரருக்கு அவசர அவசரமாக பொறுப்பு கொடுக்கப்பட்டதும், அவரது பின்னணி தெரிந்து நீக்கப்பட்டிருப்பதும் மேலிடம் வரை சர்ச்சையாகியுள்ளது. இந்துத்வா கொள்கை பேசு பவர்களே இந்து கடவுள் சிலைக் கடத்தலில் தொடர்புடையவர் களாக இருப்பது பல மட்டங் களிலும் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது.

-க.செல்வகுமார்

nkn220120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe