வேலூர் மாவட்ட காவல்துறையில், எஸ்.பி. இடமாற்றத்துக்கு காரணம், காவல்துறைக்குள் நடக்கும் முட்டல் மோதலா என்று பட்டிமன்றம் நடக்கிறது. 2025, ஜூலை 16ஆம் தேதி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் மயில்வாகனன். அதற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவில் இருந்தார். வேலூர் எஸ்.பி.யாக பொறுப்பேற்றதும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்த தகவல் அவருக்கு பழைய சோர்ஸ்களிடமிருந்து கிடைத்ததும் தனி டீம் உருவாக்கினார். வேலூரில் போதை மாத்திரை, பவுடர் என விற்பனை செய்த பெரிய நெட்வொர்க்கை மும்பை, டெல்லிக்கு சென்று கைதுசெய்து சிறையிலடைத்தார். வேலூர் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் போதைப்பொருள் விற் பனைக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக் கப்பட்டனர். இந்த பல்கலைக்கழக மாணவர்கள், இதற்கு முன்பும் இப்படி கைதாகியுள்ளனர். இந்தமுறை, போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் என ஓர் பட்டியலை உருவாக்கி தீவிர நடவடிக்கையில் இறங்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில், மயில்வாகனனும் இடமாற்றம் செய்யப்பட்டார். வேலூர் எஸ்.பி.யாகி 7 மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, "இந்த இடமாற்றத்துக்கு சில காரணங்கள் சொல்லப்பட்டுவருகிறது. அதாவது, மாவட் டத்திலுள்ள காவல்துறை அதிகாரிகள் சிலர் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றனர். தங்களுக்கு வேண்டப்பட்ட ஆள்தான் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது அந்த டீம். அந்த டீம் முன்னிறுத்துபவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்பதால் ஐ.ஜி. அஸ்ரா கர்க், அவர்களை நியமனம் செய்யவில்லை. இதனால் கடந்த 10 மாதங்களாக அந்த பணியிடம் காலியாகவே இருந்துவருகிறது. அந்த இடத்தைப்பிடிக்க பல லாபிகள் நடக்கின்றன. இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேலூர் மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு ஆய்வாளராக அரியூர் காவல்நிலைய ஆய்வாளரான நாகராஜ் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து சில அரசியல் அமைப்புகள் மேலிடத்துக்கு புகார் தெரிவித்தன. இந்த நியமனம் அமைச்சர் துரைமுருகன் கவனத்துக்கு சென்றதும் கடுப்பாகிவிட்டார். அதற்கு காரணம், காட்பாடியை சேர்ந்த டெல்லி முரளி என்ற முரளிதரன். டெல்லியில் சில பா.ஜ.க. பிரமுகர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கடந்த அ.தி.மு.க. எடப்பாடி ஆட்சியில் தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் லாபி செய்துவந்தார். வடதமிழ்நாடு காவல்துறையில் அவரது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. சென்னை விமான நிலையம் முதல் காட்பாடி வீடுவரை எஸ்கார்ட், போலீஸ் பாதுகாப்பு தந்து, வீட்டு வாசலிலேயே காவல்துறை அதிகாரிகள் காத்திருப்பார்கள். துரைமுருகனை கடுப்பாக்கும் வேலைகளையும் செய்தார் டெல்லி முரளி. இவர் ஆளுநராகப் போகிறார் எனத் தகவல் பரப்பி அவரது பிம்பத்தை உயர்த்தி ரவுசு செய்தார். இதனால் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விரட்டப்பட்டார். அவருடன் அப்போது நெருக்கமாக இருந்த இன்ஸ்பெக்டர் நாகராஜ், அசோகன் உட்பட சிலர் மாவட்டம் விட்டு மாவட்டம் தூக்கியடிக்கப்பட்டனர். மா.செ. நந்தகுமார் சிபாரிசில் ஓராண்டுக்கு பின்பு வேலூர் மாவட்டத்துக்குள் வந்தார் நாகராஜ். அவரைத்தான் இப்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமனம் செய்ததும், இவரை எதற்கு நியமனம் செய்தீர்கள் என அமைச்சர் துரைமுருகன் கேள்வி யெழுப்பினார்.
அதே நேரத்தில், எஸ்.பி. தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுபவருக்கு ஸ்பெஷல் ப்ராஞ்ச் நுண்ணறிவுப் பிரிவின் ஒப்புதல் தேவை. அவர்கள் நாகராஜூக்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் அயல்பணியாக பொறுப்பேற்ற 13வது நாளிலேயே எஸ்.பி. இன்ஸ்பெக்டர் பணியி லிருந்து திருப்பி அனுப்பப் பட்டார். அதேபோல் எஸ்.பி.யின் தனிப் படையிலிருந்த இன்ஸ்பெக்டர் ராஜசேகரை இடமாற்றம் செய்ய முயன்றபோது, வேலூர் சரக டி.ஐ.ஜி.யிடம் பேசி தன் மாவட் டத்திலேயே வைத்திருந்தார் மயில்வாகனன். அவரையும் திருவண்ணாமலை மாவட் டத்துக்கு இடமாற்றம் செய்தது எஸ்.பி.யை அதிருப்தியடையச் செய்தது. அதே நேரத்தில், மாவட்டத்தில் போதைப்பொருட்களைத் தடுக்க ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்தார் எஸ்.பி. அந்த டீம் தான் கஞ்சா, பவுடர் எனப் போதைப் பொருட்களை வாங்கிவந்து விற்பனை செய்த வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை கைது செய்தது. இந்த விவகாரத்தில் எஸ்.பி.க்கு பெரிய இடங்களில் இருந்தெல்லாம் நெருக்கடி வந்தது. இதனால் இன்னும் 3 பேரை கைது செய்யமுடியாத நிலையை உருவாக்கியது. அவர் அதையெல் லாம் கண்டுகொள்ளவில்லை. அந்த ஸ்பெஷல் டீம் ஆக்டிவாகத்தான் இருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகம் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார மட்டத்திலுள்ள செல்வாக்கை வைத்து அவரை இடமாற்றம் செய்ய நெருக்கடி தந்தது. இதெல்லாம்தான் அவரின் இடமாற்றத்துக்கு காரணம் என்கிறார்கள்.
இடமாற்ற விவகாரம் சில கேள்விகளை உருவாக்கியுள்ள நிலையில் புதிதாக பொறுப் பேற்றுள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ ராமன், போதை கும்பல் விவகாரத் தில் என்ன செய்யப்போகிறார்? வேலூர் மாவட்ட காவல்துறை லாபிக்குள் புதிய எஸ்.பி. சிக்குவாரா என்பது போகப்போக தெரிந்து விடும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/vellore-2026-02-19-18-32-23.jpg)