கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணா மலையில், தி.மு.க. வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. ஒரு இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு அணியின் நிர்வாகிகள் கூட்டத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த முடியுமா என்று ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அந்தச் சந்திப்பை ஓவர்டேக் பண்ணுறமாதிரி விருதுநகரில் தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் காட்டி யிருக்கிறோம்.
பாசத்திற்கும் வீரத்திற்கும் பெயர்பெற்ற தென் மண்டலத்தின் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளீர்கள். இது வெறும் நிர்வாகிகள் சந்திப்பா? இல்லை, வரவிருக்கும் தேர்தல் வெற்றியை முன்னறிவிக்கும் மாநாடா என்று சொல்லும் அளவுக்கு மிகவும் எழுச்சியுடன் கலந்துகொண்டிருக்கின்றீர்கள்.”
-விருதுநகர் அருகேயுள்ள கல்குறிச்சியில் 7ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க. தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், துணை முதல்வரும் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பெரு மிதத்துடன் பேசினார்.
மேலும் அவர், "“இந்த நிர்வாகிகள் சந்திப்பு இத்தனை சிறப்பாக நடைபெறுவதற்கு இரண்டு பேர் மிக மிக முக்கிய காரணம். ஒருவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டா வழங்குபவர். இன்னொருவர் தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி வழங்குபவர். அந்த இருவருக்கும் நன்றி. இந்தச் சந்திப்புக்கான பணிகளை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனுக்கும், அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசுக்கும் என்னுடைய நன்றி''’என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் "நாட்டை சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும்

இந்நிகழ்ச்சியில் "நாட்டை சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும் ஒளிக்குச்சிகள் நீங்கள்'’என்று திருச்சி சிவா எம்.பி.யும், "இனி எந்தத் தேர்தல் வந்தாலும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்'” என்று அமைச்சர் தங்கம் தென்னரசும், "தமிழகத்திற்குத் தேவையான நிதி முறையாக வழங்கப்படவில்லை' என்று கனிமொழி எம்.பி.யும் குறிப்பிட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/dmkyouthwing-south1-2026-02-09-16-44-59.jpg)
தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது உரையில், "இளைஞர்கள் தான் ஒரு இயக்கத்தின் உயிர். உங்களால்தான் இந்த இயக்கம் பலமாக உள்ளது. இந்தக் கூட்டத்தில் உங்கள் முகங்களைப் பார்த்தால், நம்பிக்கை பெருகுகிறது. தமிழ்நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் உள்ளது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பகுதியில் இயக்கத்தின் தூதுவர்களாக செயல்பட வேண்டும். பொய்களை எதிர்த்து உண் மையை மக்க ளிடம் கொண்டு செல்லவேண்டும். வரவிருக்கும் தேர் தல்களில் பெரும் வெற்றியை நாம் பெறவேண்டும்''’என்று உறுதியுடன் கூறினார்.
தி.மு.க. இளைஞரணி பாசறைக் கூட்டங்கள், இளைஞர்களை வெறும் கொடிகட்டிப் பேரணி நடத்தும் தொண்டர்களாக அல்ல; கட்சியின் வரலாறையும், கொள்கையையும், போராட்ட அரசியலையும் உடம்போடு ஒட்டிக்கொள்ளும் கேடர்களாக உருவாக்கும் பயிற்சி மேடைகள். அந்தப் பாசறைகளில் வளர்ந்த இளைஞர்கள், கொள்கை பேசும் தைரியத்தோடு நிற்கிறார்களா, தலைமை விதைத்த அரசியல் விதைகள் அவர் களுக்குள் எவ்வளவு ஆழமாக வேர் பிடித் திருக்கிறது என்பதை அறிய, தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் கூடியிருந்த இளைஞரணி யினரை நேரடியாக நாடி பிடித்து பேச்சுக் கொடுத்தோம்.
இளமுகில் என்பவர், "இப்பத்தான் காலேஜ் முடிச்சிருக்கேன் சார்.. கட்சியோட அடிப்படை கொள்கை எல்லாம் தெரியாது'' என்று நேர்மையாகப் பேச, அடுத்து நம் முன்னால் நின்றவர் யோகேஷ். "2026-ல ஆட்சியைப் பிடிக் கணும்... அவ்வளவுதான்''’என்று சுருக்கமாகக் கூற, ‘"அவ்வளவுதானா?'’என்ற திகைப் புடன், "பாசறைக் கூட்டங்களில் பயிற்சி பெற்றது உண்டா?''’ என்று தொடர்ந்து கேட்டோம். "ஆமா.. போயிருக்கேன். ஆனா, அங்கே பேசுனத கவனிக்கல''” என்று தலையைச் சொறிந்தவர், டென்ஷனில் இருந்து விடுபட்டு “"சமூக நீதிக்கொள்கை எனக்கு பிடிக்கும்'' என்றார் உற்சாகத்துடன். அந்தச் சூழலை கலகலப் பாக்க, இலகுவான கேள்விக்கு மாறினோம். அவரிடம் ‘"உதயநிதி அப்பா யாரு? ஸ்டாலின் அப்பா யாரு?''’ என்று கேட்டவுடன் டக்டக்கென பதில் தெறித்து விழுந்தது. ஸ்டாலின், கலைஞர்,’என்று அவர் சொல்ல, மு.க.ஸ்டாலின் அடிக்கடி உச்சரிக்கும் அந்தப் பிரபல வாசகம் நினைவுக்கு வந்தது. ‘"அப்ப.. கலைஞரோட அப்பா பேர் என்ன?''’என்று நாம் கேட்ட மாத்திரத்தில் ''போங்க சார், இவ்வளவு சொல்லிட்டேன்ல போதும் விடுங்க''’என்றார். அந்த நொடியில் பக்கத்தில் நின்ற வரதராஜன் “"கலைஞரோட அப்பா பேரு முத்துவேல்''’என்று குரலை உயர்த்திவிட்டு, “"சார், முத்துவேலோட அப்பா யாருன்னு கேட்றாதீங்க''’என்று கையெடுத்துக் கும்பிட, அருகில் நின்றவர்கள் சிரித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/dmkyouthwing-south2-2026-02-09-16-45-10.jpg)
அங்கிருந்து அடுத்த ஸ்பாட்டுக்கு சென்றோம். நவீன்குமார் நம்மிடம், "எங்க கட்சி கொள்கை என்னன்னு சொல்லவா? மொதல்ல சுயமரியாதை, அப்புறம் சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு, மதச்சார்பின்மை, மொழிக்கொள்கை, மாநில உரிமை, சமூக முன்னேற்றம், இன்னும் நெறய இருக்கு''’என்று கடகடவென்று பட்டியலிட்டார். பக்கத்தில் நின்ற கவுதமும் அதையே ரிபீட் பண்ண, அங்கிருந்து நகர்ந்தோம்.
ஹரிஹரன், “"மூணு தலைமுறையா நாங்க தி.மு.க. குடும்பம். எட்டு படிக்கிற என் தம்பி கூட கட்சியோட மொழிக்கொள்கை பத்தி மேடையேறி பேசுவான்''’என்றார். அருகிலிருந்த சசி மாறன் “"பாக முகவர் கூட்டத்துக்கு நான் போயிருக்கேன். அத பத்தி சொல்லவா?'' என்று அவராகவே முன்வர, "பகுத்தறிவு குறித்து சொல் லுங்களேன்'' என்றோம். "நான் கோயிலுக்கெல்லாம் போவேன். பகுத்தறிவுன்னா கடவுள் மறுப்பு மட்டும் இல்ல. மூடநம்பிக்கை கூடாது... அவ்வளவுதான். திமுக ஒண்ணும் இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்ல. நாங்க எந்த மத நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்ல. ஏன், எதற்காகன்னு கேள்வி கேட்கிற அறிவியல் சிந்தனைதான் பகுத்தறிவு. இதுல பெண் உரிமை ரொம்ப ரொம்ப முக்கியம்''’என்று அசத்தினார்.
வினோத்குமார், “"14 வயசுல தலைவர் கலைஞர் அரசியலுக்கு வந்துட்டாரு. அது இந்தி எதிர்ப்பு போராட்டத்துல. அப்ப அடிமையா இருந்த காலகட்டம். இளைஞர்கள் கொள்கை ஈர்ப் போட இருந்தாங்க. இப்ப இருக்கிற யங் ஜென ரேசன்கிட்ட ரொம்பவும் எதிர்பார்க்க முடியாது. இம்புட்டு உணர்ச்சியோட இங்கே கூட்டத்துக்கு வர்றதே பெரிய விஷயம். அப்புறம்.. மக்கள்கிட்ட வாங்க கொள்கைய பத்தி பேசுவோம்னா, ஆளை விடுன்னு கிளம்பிருவாங்க. தி.மு.க. ஆட்சியோட நலத்திட்டத்த எடுத்துச் சொல்லணும். மக்கள் என்னென்ன பயன் அடைஞ்சிருக் காங்கன்னு எடுத்துச் சொல்லணும். இந்த இளை ஞர் கூட்டம் இத பண்ணு னாலே போதும்''’என்று விவரமாகப் பேசினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/dmkyouthwing-south3-2026-02-09-16-45-22.jpg)
கார்த்தி ஏதோ சொல்வதற்கு தயங்கி நிற்க, ‘"நீங்க யாரோட ரசிகர்?''’என்று கொக்கி போட் டோம். “"யாரு நடிச்ச சினிமான்னாலும் பார்ப் பேன். ஹீரோ முக்கியம் இல்ல. நான் யாருக்கும் தனிப்பட்ட ரசிகன் இல்ல''’என்றவரிடம், அப்ப டின்னா, "நீங்க உதயநிதி ரசிகர் இல்லியா?''’என்று தொடர்ந்து கேட்டோம். “"அவரு தலைவராயிட்டாரு; அமைச்சராயிட்டாரு, அவரைப் போயி நடிகர் லிஸ்ட்ல சேர்க்கிறீங்க?''’என்று சிரித்தபடியே மறுத்தார்.
"நான் ஒண்ணு சொல்றேன்... எழுதிக் கங்க''’என்று சொற்பொழிவாற்றப் போவதுபோல தொண்டையைக் கனைத்துக்கொண்ட விஜய் கணேஷ்,“"வெவரம் இல்லாதவங்க, அரசியல் அரிச்சுவடி தெரியாதவங்க, எங்கள தீய சக்தின்னு சொல்லிட்டு திரியிறாங்க. உண்மைய சொல்ல ணும்னா, நாங்க 75 வருஷத்துக்கு முன்னாலயே தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக அரசியல் அவதாரம் எடுத்த பராசக்தி''’என்று கூற, பின்னால் நின்றவர்கள் கை தட்டினார்கள். புரிதல் உள்ள இளைஞர்கள் நகரும் திசையே தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்!
இளைஞரணி வலுவாக உள்ளதை இந்த மாநாட்டின் மூலம் சாதித்துக் காட்டியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி.
______________
மேடையில் பேசப்படாத பிரச்சினை!!
மாநாட்டு திடலுக்கு வெளியே நம்மைப் பின்தொடர்ந்த பெரியவர் வரதராஜன், தனியே அழைத்து, "நாட்டில் நிறைய பேருக்கு கொள்கையும் இல்ல; வெங்காயமும் இல்ல. உதட்டளவுல கொள்கை பேசுறதயே பெரிய விஷயமா பார்க்கிறாங்க. இங்கு பேசுவதைக் காட்டிலும், கொள்கைப் பிடிப்புடன் வாழறதுதான் முக்கியம். ஒவ்வொரு ஊரிலும் இவங்க எந்த நிர்வாகிங்க பின்னால நிக்கிறாங்களோ, அவங்க ரோல்மாடலாக வாழ்ந்து காட்டணும். இன்னைக்கு இருக்கிற அரசியல்ல இதெல்லாம் நடக்கிற காரியமா? ஒரு லட்சம் இளைஞர்கள் ஒரே இடத்துல ஒண்ணா கூடிருக்காங்க. பார்க்க சந்தோஷமா இருக்கு. ஆனா.. இளைஞர்கள்ல நிறைய பேர் ஏதோ ஒரு போதைக்கு அடிமையா இருக்காங்க. மொதல்ல அதுல இருந்து இவங்கள காப்பாத்தணும். இந்த மேடையில், இந்த நேரத்தில் இதைப்பற்றி பேச வேணாம்னு விட்டுட்டாங்க.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு''’என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us