மகனின் தோழியிடமே பாலியல் சீண்டல்! விசாரணை வளையத்தில் பெண் சீடர்கள்!

bb

க்கீரனின் முயற்சியால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் குழந்தைகள் மீது, காம வெறியாட்டம் நடத்திவந்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவன ரான சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

பாபா என்ற பெயரில் உலவிய போலி சாமியார் சிவசங்கர் பாபா கடந்த ஜூன் 16 ஆம் தேதி டெல்லி அருகே பிடிபட்டார், ஜூன் 17 ஆம் தேதி மதியம் 3:30 மணியளவில் செங்கல்பட்டு மகிளா கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவை, பத்திரிகையாளர்கள் கண்ணில் மண்ணை தூவி கோர்ட்டின் உள்ளே அழைத்து சென்றனர். சென்னையில் இருந்து புறப்பட்டபோது சிவசங்கர் பாபாவை டெம்போ டிராவல் வேனில் ஏற்றி வந்தனர். ஆனால் வழியில், அரசால் தடை செய்யப்பட்ட கருப்பு சன்லைட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொலேரோ ஜீப்பில் மாற்றி அழைத்து வரப்பட்டதால் காலையில் இருந்து காத்துக் கிடந்த பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கோர்ட்டு வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

s

அப்போது அவருக்காக ஆஜர் ஆன வழக்கறிஞர் நாகராஜன் மற்றும் மீரான் ஆகியோர் சிவசங்கரனுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினர். ஆனால் நீதிபதி அம்பிகா, அவரின் உடல்நலம் சீராகத்தான் உள்ளது, அவருக்கு எவ்வளவு உயரிய சிகிச்சை வேண்டும் என்றாலும் அரசு மருத்துவமனையிலேயே ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

பின்னர் சிவசங்கர் பாபாவை பதினைந்து நாள் நீதிமன்ற காவலில் (ஜூலை 1ஆம் தேதி வரை) வைக்க உத்தரவிட்டார். கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சாதாரண அறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர், சக கைதிகளுக்கு வழங்க

க்கீரனின் முயற்சியால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் குழந்தைகள் மீது, காம வெறியாட்டம் நடத்திவந்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவன ரான சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

பாபா என்ற பெயரில் உலவிய போலி சாமியார் சிவசங்கர் பாபா கடந்த ஜூன் 16 ஆம் தேதி டெல்லி அருகே பிடிபட்டார், ஜூன் 17 ஆம் தேதி மதியம் 3:30 மணியளவில் செங்கல்பட்டு மகிளா கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவை, பத்திரிகையாளர்கள் கண்ணில் மண்ணை தூவி கோர்ட்டின் உள்ளே அழைத்து சென்றனர். சென்னையில் இருந்து புறப்பட்டபோது சிவசங்கர் பாபாவை டெம்போ டிராவல் வேனில் ஏற்றி வந்தனர். ஆனால் வழியில், அரசால் தடை செய்யப்பட்ட கருப்பு சன்லைட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொலேரோ ஜீப்பில் மாற்றி அழைத்து வரப்பட்டதால் காலையில் இருந்து காத்துக் கிடந்த பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கோர்ட்டு வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

s

அப்போது அவருக்காக ஆஜர் ஆன வழக்கறிஞர் நாகராஜன் மற்றும் மீரான் ஆகியோர் சிவசங்கரனுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினர். ஆனால் நீதிபதி அம்பிகா, அவரின் உடல்நலம் சீராகத்தான் உள்ளது, அவருக்கு எவ்வளவு உயரிய சிகிச்சை வேண்டும் என்றாலும் அரசு மருத்துவமனையிலேயே ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

பின்னர் சிவசங்கர் பாபாவை பதினைந்து நாள் நீதிமன்ற காவலில் (ஜூலை 1ஆம் தேதி வரை) வைக்க உத்தரவிட்டார். கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சாதாரண அறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர், சக கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவையே சாப்பிட்டுள்ளார். இரவு நீண்ட நேரம் சரியாக தூங்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் மறுநாள் காலை அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட, உடனடி பரிசோதனை நடத்தப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிவசங்கர் பாபாவை, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யில் அட்மிட் செய்தனர். இந்த நிலையில், இவருக்கு உடந்தையாக இருந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவியான சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டார்.

சுஷ்மிதா கைது செய்யப்பட்டபோது ஆறு மாத கைக்குழந்தையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் ஓர் ஆசிரி யையான தீபா தலைமறைவாகியுள்ளார். அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார். பாரதி என்ற ஆசிரியை வெளிநாட்டில் இருப்பதால் அவரை பிடித்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

bb

தலைமறைவான தீபா, பள்ளி மாணவிகளை பாபாவிடம் கோர்த்துவிடுவதில் முக்கியமானவராக இருந்தார். “இன்னைக்கு ராத்திரி நான் முக்தி அடையணும்” என்று சிவசங்கர் பாபா சொன்னால், அதன் அர்த்தம் என்னவென்று புரிந்துகொண்டு அதற்கேற்ப மாணவியரை லவுஞ்ச் அறைக்கு அனுப்பி வைத்தவர் தீபாதான். அவர் சிக்கினால் இன்னும் பல மர்மங்கள் வெளிப்படும்.

மேலும் கருணா, நீரஜ் ஆகியோர் விசாரணை வளையத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசங்கர் பாபா உடல்நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளதால் ஓரிரு நாட்களில் அவரை மீண்டும் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு போலீஸ் கஸ்டடி கோரப்படும்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சந்திரமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நக்கீரன் அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசினார். தனக்கேற்பட்ட பாதிப்பின் வேதனையால் ஒருமையில்தான் பேசினார்.

"1992 ஆம் ஆண்டு நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே என் அம்மாவுடன் அவனை சந்திக்க போவேன். மண்ணடியில் இருக்கும் போதே அங்கு செல்வோம். பின்னர் இவன் பெசன்ட்நகர் சென்றபோது அங்கும் செல்வோம். இவனை கடவுள் போல பார்த்து வந்தேன். நான் சிறு வயதில் நன்றாக அழகாக இருப்பேன். அப்போதே என்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பான். சில சமயம் என்னை பார்த்து நீ வயதுக்கு வந்துவிட்டாயா என்று கேட்டுக்கொண்டே இருப்பான். வயதுக்கு வந்ததும் சொல் என்பான். அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அவனோட டார்கெட்டே அழகான பொண்ணுங்கதான். என்கிட்ட குளோஸா பழகினான். சில சமயம் நான் முதல் பொண்டாட்டினு சொல்லுவான். அதும் என் அம்மா இருக்கும்போது இப்படி பேசமாட்டான். எல்லோரு சொல்றாங்களே, பிராமணர் பள்ளியை பத்தியும், பிராமணர் களை பத்தியும் அவதூறா பேசறதா சொல் றாங்களே, இவனால அதிகம் பாதிக்கப்பட்டதே பிராமணர்களும் அவர்களின் மகள்களும்தான். நானே பிராமணர் தான்.

பொது வெளியில கட்டி அணைத்து முத்தம் கொடுப்பதற்கும் தனியறையில கட்டி அணைத்து முத்தம் கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அது பெண்களுக்கு தெரியும். சத்சங் நிகழ்ச்சில பேசும்போது அவ்வளவு ஆபாசமா இருக்கும். நிகழ்ச்சி முடிந்ததும் பெண்ணின் மார்பகத்தை சுட்டிக்காட்டி அதற்கேற்ப தேங்காய் கொடுங்கன்னு சொல்லுவான்.

மண்ணடில தான் முதல்ல தப்பான நோக்கத்துல தொட்டான். பின்னர் பெசன்ட் நகர்ல தனி அறையில மிக மோசமா நடந்துக்கிட்டான். அதுக்கப்புறம் நான் அங்க போறத நிறுத்திட்டேன். பிளஸ் டூ பாஸ் ஆன போது அவங்கிட்ட அம்மா அழைச்சிட்டு போனாங்க. கேளம்பாக்கத்தில் தற்போதுள்ள பள்ளிக்கு கூட்டிட்டு போனான். அப்போ அந்த லவுஞ்ல வைச்சி தப்பா நடக்க முயற்சி செய்தான். ஆனா நான் ஒத்துழைக்காததால அப்போ என்னை விட்டுட்டான். அதுக்கப்பறம் அந்த பக்கமே போகல.

அந்த சமயம் என்னோட தோழியான சுவேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவள கேரளாவுல உள்ள தாய் பாதம் என்ற இடத்துக்கு அழைத்து சென்றபோது எங்கேயே விழுந்து இறந்துவிட்டதாக சொன்னாங்க. அதைப் பற்றியும் விசாரிக்கணும். இவன சும்மா விடாதீங்க'' என்று கொட்டித் தீர்த்தார்.

bb

இவரை தொடர்ந்து நம்மிடம் பேசிய ரமேஷ் "1993 முதல் நான் அவனுடன் பயணித்தேன். கண் பார்வை பிரச்சனைக்காக சென்றேன். அது கடைசிவரை சரியாகவில்லை. மண்ணடி, பெசன்ட்நகரில் இருந்ததை விட நீலாங்கரையில் தான் பிரபலம் ஆனான். டி.வி.யில் பேசுவான். இவனோட பேச்சில் மயங்கி முப்பது சவரன் நகையை பறி கொடுத்துவிட்டேன். கூட்டம் அதிகம் வர ஆரம்பித்தது. நான் மத்திய அரசின் முக்கிய பணியில் இருந்ததால் அவனோட கணக்குவழக்குகளை பார்த்து வந்தேன். என் மகனும் மகளும் அங்கு தான் படித்து வந்தனர்.

பழனி போகர் செய்த சிலையை எடுக்க போகிறேன் என்று கூறி ஏமாற்றி வந்தான். அந்த வேளையில் அங்கு வந்தவர்தான் ஜானகி சீனிவாசன். கடந்த முப்பது வருடமாக அவனுடன் இருந்து வருவதால் அவனோட எல்லா விஷயங் களும் இவருக்குத் தெரியும். போலீஸ் பாணியில் ஜானகியை விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும். என் மகளை ஜானகியின் தங்கை மகனுக்கு இவன் ஏற்பாட்டில் தான் திருமணம் முடிந்தது. இவனால என்னோட மகள் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்துவர்றா... ஒரு கட்டத்துல இவனோட லீலைகள் தெரிய வந்துச்சு. இத்தனை காலம் அவனுக்கு பக்கபலமா இருந்த என் மகளிடமே தவறா நடக்க முயற்சி செய்திருக்கான். 2013 முதல் அங்க போறத நிறுத்திட்டோம்.

அதேபோல அந்த ஜானகி சீனிவாசன் மற்றும் அனு இருவருக்கும் அவனது அந்தரங்க விஷயங்கள் எல்லாம் தெரியும். என் மகள்கிட்ட தப்பா நடந்துவிட்டு வெளியே சொன்னால் அப்பா கண் பார்வை போய்விடும்னு மிரட்டி வந்திருக்கான். மண்ணடியிலே சிட்பண்டு நடத்தி மோசடியும் செய்திருக்கான் இவன். இவனோட மனைவி சசி கலா, ராமச்சந்திரா மருத்துவமனை உடையாருக்கு மிகவும் நெருக்கம். பல வருஷமா அங்க வேலை செய்து வந்தாங்க. மகன் சரத், மகள் வந்தனா இவனோட போக்கு பிடிக்காம இவங்க எல்லோரும் சேர்ந்து இவன வீட்ட விட்டே துரத்திட்டாங்கனா பாருங்க. சொந்த மகளோட திருமணத்திற்கே சேர்க் கலைன்னா பாருங்க சரத்தோட தோழிகிட்டேயே இவனோட லீலைய காட்டிருக்கான்.

அதேபோல இவன் வடநாட்டுக்கு போனாவே லதா சீனிவாசன் தான் எல்லாம் ஏற்பாடுகளும் செய்வாங்க. இந்த முறையும் அவுங்க தான் புத்த பிட்சு போல வேசம் போட்டு நேபாளத்துக்கு தப்பிக்க ஏற்பாடு பண்ணி யிருக்காங்க. திருவல்லிக்கேணி பகுதியில பினாமி பெயரில் கூரியர் நிறுவனமும் நடத்துறான். அதேபோல பள்ளி பக்கத்திலே விஜயமாருதினு சொகுசு பங்களா, கேரள மாநிலம் தேக்கடில சிவ் கைலாஷ்னு சொத்து இருக்கு. பள்ளி மாணவிகள படிக்க வைக்கிறதா அங்க அழைச்சுட்டு போவான். திருப்போரூர் அடுத்த வெங்கல் ஏரி பகுதியில சொத்து இருக்கு. வருமான வரித்துறை தீவிரமா விசாரிச்சா எல்லாம் வெளியே வரும்.

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) "அந்த பள்ளிக்கு போனபோது பெரிய அழகான கட்டிடங்கள், தோட்டம் அதுல அழகான பூக்கள், கோயில் என அனைத்தும் எங்களை கவர்ந்தது. என்னை லவுஞ்சுக்கு கூப்பிட்டாரு. பாபா. சாக்லெட் ஏதோ தரப்போறாரோனு நினைச்சு ஆசைஆசைய போனா, பெட் ரூமுக்கு கூப்பிட்டாரு. போனா? வாய் கழுவிட்டு வரச்சொன்னாரு. கண்ண மூடு சாமி உனக்கு ஒன்னு சொல்லி தர்றேனு உடம்புல தவறாக தொட்டாரு. பயத்துல கண் கலங்கினேன் அதைப் பார்த்த அவன் அப்பறமா பாத்துக்க லாம்னு அனுப்பிட்டான். அதுல இருந்து அந்த பக்கமே போக பயம். என் பெற்றோர் பாபாவை முழுவதும் நம்பினாங்க, அதுனால அவுக கிட்ட அப்போ சொன்னா நம்ப மாட்டாங்க. அதனாலவே அவுக கிட்ட சொல்ல முடியல. என்னப்போல என் தோழிக்கும் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்கு. ஒரு வழியா பள்ளி முடிச்சிட்டு வெளியே வந்துட்டேன். பலமுறை ஆளை வைச்சு கூப்பிட்டான். ஆனா நான் போகல. இனிமையான பள்ளிக் கால வாழ்க்கை முழுசா கசப்பாக்கிட்டான் இந்த பாவி..! இவனுக்கு சாதகமா பேட்டி தராங் களே.. அவங்களையும் விசாரிக்கணும்''’என்றார் கலக்கமான குரலில்.

nkn230621
இதையும் படியுங்கள்
Subscribe