"சாத்தியமே இல்லை' என்கிறார் ரஹ்மானின் தந்தை முகம்மது கனி. "சாத்தியம்தான்... அதுதான் நடந்தது, அதை நம்ப மனமில்லை அவர்களுக்கு' என்கிறார் ரஹ்மான்.

"எது சாத்தியம், எது சாத்தியமேயில்லை?'

bb

"காதலித்து தன்னை நம்பி வந்த பெண்ணை பெற்றோர், உடன்பிறந்தோர் மத்தியில் 10 வருடம், யார் கவனத்தையும் ஈர்க்காமல் மறைத்துவைத்து சாதித்தேன்' என்கிறார் ரஹ்மான். "பத்து வருஷமா...… இதெல்லாம் சாத்தியமா?' என நமக்கே சந்தேகம் வரத்தான் செய்கிறது.

Advertisment

சரி என்ன நடந்தது? எதற்கு பத்து வருடம்?

கேரளாவின் அயிலூரைச் சேர்ந்தவர்கள் ரஹ்மானும் சஜிதாவும். எலெக்ட்ரிகல் மற்றும் பெயிண்டிங் சார்ந்த வேலை பார்த்துக்கொண்டிருந்த சஜிதாவுக்கும் ரஹ்மானுக்கும் காதல் மலர, இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் காதல் கைகூடுமா என்ற சந்தேகம் எழுந்தது.

2010-ல் வீட்டை விட்டு வெளியேறிய சஜிதா ரஹ்மானைத் தேடிவந்தார். அன்றைய நிலையில் ரஹ் மானுக்கும் நிரந்தர வேலையோ, பெரிய வருமானமோ கிடையாது. ஆனால் வீட்டில் அவருக்கென தனி அறை உண்டு. பார்த்தார், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சஜிதாவை வீட்டுக்குள் கொண்டுவந்துவிட் டார். நேரம் அமையட்டும்… திருமண வாழ்வைத் தொடரலாம் என இருவரும் காத்திருந்தனர். அதுவரைக்கும் தன் வீட்டில் தனக்குத் தரும் உணவிலேயே கொஞ்சம் சஜிதாவுக்கு. இயற்கை உபாதைகளைக் கழிக்க இரவில் அவரை வெளியே அனுமதித்திருக்கிறார். இப்படியாக பத்து வருடங்களைத் தாண்டியிருக் கிறது இந்த காதல் ஜோடி.

Advertisment

dd

இதற்கிடையில் காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லையென புகார் கொடுத்த சஜிதாவின் குடும்பம், ஒரு கட்டத்தில் அவள் இல்லை இறந்துபோய் விட்டாளென கருதிக்கொண்டு வாழவே ஆரம்பித்துவிட்டது.

இந்த தலைமறைவு வாழ்க்கை சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் ரஹ்மான் தனது வீட்டிலிருந்து காணாமல் போனார். வீட்டினர் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில் ரஹ்மானின் சகோதரர் பஷீர், நென்மேராவில் தனது தம்பியைப் பார்த்துவிட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் ரஹ்மானைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போதுதான் விதானச்சேரியில் அவர் தங்கியிருந்ததும், கூடவே சஜிதா உடனிருப்பதும் அம்பலமானது. விசாரணையில், அவர் சஜிதா எனவும் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ரஹ்மான். அவர்கள் திரு மணம் செய்துகொள்ளப்போவது ஒருபுறமிருக்க, ரஹ்மானின் தந்தை முகம்மது கனி, “"வீட்டில் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணை 10 வருடம் மறைத்துவைத்திருந்தான் என்ற கதையை யாரும் நம்பப்போவதில்லை. வேறெங்கோ நண்பர் வீட்டிலோ… வெளியூரிலோ அவளை மறைத்துவைத்திருந்திருக்கலாம். அந்த சின்ன அறையில் 10 ஆண்டுகள் ஒரு பெண்ணை மறைத்து வைப்பதென்பது நடக்கக்கூடியதில்லை. நாங்கள் அவள் குரலை, நடமாட்டத்தை, தும்மலைக் கேட்டிருப்போம். ரஹ்மானின் அறையில் கழிவறை கிடையாது. உடல்நலமில்லாமல் போக, இயற்கை உபாதை பிரச்சனை என எத்தனையோ இக்கட்டுகள் இருக்கிறது. தவிரவும் இந்த பத்தாண்டுகளில் எங்கள் வீட்டில் கூடுதலாக உணவு சமைத்ததில்லை.

ஒருமுறை அவன் இரண்டு நாள் தமிழ்நாட்டுக்குச் சென்றி ருந்தான். அந்த ரெண்டு நாளும் அவள் பட்டினி கிடந்தாளா? அப்படி அவள் வீட்டில் இருந்ததாகத் தெரியவந்திருந்தால் அதிகாரிகளுக்கோ அவள் குடும்பத்தினருக்கோ தெரிவித்திருப்போம். அந்தப் பெண் காணாமல் போய் போலீஸ் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாதெனத்தான் அவன் சொன்னான். சஜிதாவுக்கு ரஹ்மானுக்கும் காதல் இருந்திருக்குமென என் வீட்டிலோ, அவர்களது வீட்டிலோ யாரும் சந்தேகிக்கவில்லை. அவன் சொல்வது உண்மையாக இருந்து, இங்கே மறைந்திருக் கும்போது அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால்''…என திகிலடைய வும் செய்கிறார் முகம்மது கனி. இந்த 10 வருடங்களில் ரஹ்மான் தொடர்ந்து வேலைக்குச் சென்றதில்லையாம். ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு வீட்டிலேயே நேரம் செலவிட்டிருக்கிறார். வேலைக்குப் போனாலும் முடிந்தவரை விரைவில் வீடு திரும்புவதை குறிக்கோளாக வைத்திருந்திருக்கிறார்.

"ரஹ்மான் மேல் வழக்கெதுவும் வேண்டாம். நான் விரும்பித்தான் அவருடன் தங்கியிருந்தேன்'’என்கிறார் சஜிதா.

கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி அப்பகுதி எம்.எல்.ஏ. பாபு தலைமையில் ரஹ்மான்-சஜிதா ஜோடி திருமணம் செய்து கொண்டிருக்கிறது. மணமகள் தரப்பில் திருமணத்தில் கலந்து கொள்ள... மணமகன் தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.