போலீசிடம் சிக்கிய மகன்! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தாய் பலி!

aa

ட்டம் எல்லாருக்கு ஒன்றாக இருப்பதில்லை. சேலம் அம்மாபேட்டை வித்யா நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்த பழனிமுத்து மகன் வேலுமணி (35). இவருடைய தாயார், பாலாமணி (75). அம்மா, மகன் இருவரும் பட்டைக்கோயில் அருகில் எலுமிச்சம் பழ வியாபாரம் செய்துவருகின்றனர். சேலத்தில் ஏப். 25, 26 ஆகிய இரு நாள்களும் முழு ஊரடங்கு என்று மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்தார்.

mm

ஏப். 24-ஆம் தேதியன்று காலை 8.30 மணியளவில், கிடங்கிலிருக்கும் எலுமிச்சம் பழங்களை டோர் டெலிவரி செய்வதற்காக வ

ட்டம் எல்லாருக்கு ஒன்றாக இருப்பதில்லை. சேலம் அம்மாபேட்டை வித்யா நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்த பழனிமுத்து மகன் வேலுமணி (35). இவருடைய தாயார், பாலாமணி (75). அம்மா, மகன் இருவரும் பட்டைக்கோயில் அருகில் எலுமிச்சம் பழ வியாபாரம் செய்துவருகின்றனர். சேலத்தில் ஏப். 25, 26 ஆகிய இரு நாள்களும் முழு ஊரடங்கு என்று மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்தார்.

mm

ஏப். 24-ஆம் தேதியன்று காலை 8.30 மணியளவில், கிடங்கிலிருக்கும் எலுமிச்சம் பழங்களை டோர் டெலிவரி செய்வதற்காக வேலு மணியும், அவருடைய தாயார் பாலாமணியும் கிடங்கைத் திறந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சேலம் நகர காவல் நிலைய தலைமைக் காவலர் முத்துசாமி, ஊரடங் கின்போது கடைதிறந்ததற்காக வேலுமணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

தன் கண்முன்னாலேயே மகன் அடிவாங்கு வதைப் பார்த்து வெலவெலத்துப் போன மூதாட்டி பாலாமணி, ""ஏன் சார் பையனை அடிக்கிற. நீ எல்லாம் நாசமாத்தான் போவ... கடைய சாத்தச் சொன்னா சாத்திட்டுப் போறோம்...'' என்று வசைபாட, விவகாரம் வேறுதிசைக்குச் சென்றது.

அதன்பிறகு நடந்ததை வேலுமணி நம்மிடம் சொன்னார்.

""முதல்நாளே தகராறான நிலையில், தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் எலுமிச்சை வீணாகக்கூடாதென்ப தால் மறுநாள் காலை 5.30 மணி அளவில் கிடங்குக்குப் போனோம்.

அப்போதும் அங்கு வந்த ஏட்டு முத்துசாமி, விசாரணை செய்யவேண்டும் என்று சொல்லி வலுக் கட்டாயமாக காவல்நிலையம் அழைத்துச்சென்றார். காவல்நிலையத்தில் இன்ஸ் பெக்டர் குமார், ''ஏன்டா நீ என்ன பெரிய புடுங்கியா? போலீசையே அடிக்கிறியா? நீ டவுன்ல எப்படி கடை போட்டுடறேனு பார்த் துக்கறேனு'' மிரட்டினார்.

டூட்டியில் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் என்னை மாறி மாறி அடித்தனர். விவகாரத்தை முடிப்பதற்காக எங்கம்மா ஏட்டு முத்துசாமி காலிலும், அப்போது அந்த இடத்திலிருந்த ஆறேழு போலீஸ்காரங்க கால்களிலும் விழுந்து என்னை விட்டுவிடும்படி மன்னிப்பு கேட்டார். அதைப்பார்த்த முத்துசாமி ஏட்டு, ஆத்திரத்தில் என் அம்மாவை அடிக்க வருவதுபோல் லட்டியை ஓங்கினார். அதைப் பார்த்த அதிர்ச்சியில் என் தாயார் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

அங்கிருந்து இருசக்கர வாகனத்திலேயே என் அம்மாவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே என் அம்மா இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்'' என்றவர் மேற்கொண்டு பேசமுடியாமல் கண்ணீர்விட்டு கதறியழுதார்.

ஊரடங்கை மீறியவர்களை திருப்பூரில் ஆம்புலன்ஸில் ஏற்றி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியுள்ளது சர்ச்சையாகியுள்ள நிலையில், காவல்துறை அத்துமீறல் ஒரு உயிர்போகக் காரணமானதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.

-இளையராஜா

nkn020520
இதையும் படியுங்கள்
Subscribe