Advertisment

பார்வை!-உரத்த குரல்!

kumarasamy

parvai

மிழகத்தில் புலனாய்வு இதழ்களின் தாக்கம் 1980-ல்தான் அதிகமாக இருந்தது. அவற்றில் நக்கீரன் தனக்கென தனிப்பாதை வகுத்துக்கொண்டு பயணிக்கத் தொடங்கிய காலம்தொட்டு வாசித்து வருகிறேன். பொதுவாகவே எனக்கு அரசியல் ஈடுபாடு சற்று அதிகம் என்பதால் நக்கீரன் இதழின் நம்பகத் தன்மையான செய்திகளை வாசிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலைகூட ஏற்பட்டதுண்டு. எத்தனையோ அடக்குமுறைகளைத் தாங்கி, அடாவடிகளை எதிர்கொண்டு பத்திரிகை உலகில் எதிர்நீச்சல் போட்டு உண்மைய

parvai

மிழகத்தில் புலனாய்வு இதழ்களின் தாக்கம் 1980-ல்தான் அதிகமாக இருந்தது. அவற்றில் நக்கீரன் தனக்கென தனிப்பாதை வகுத்துக்கொண்டு பயணிக்கத் தொடங்கிய காலம்தொட்டு வாசித்து வருகிறேன். பொதுவாகவே எனக்கு அரசியல் ஈடுபாடு சற்று அதிகம் என்பதால் நக்கீரன் இதழின் நம்பகத் தன்மையான செய்திகளை வாசிக்காமல் இருக்கமுடியாது என்ற நிலைகூட ஏற்பட்டதுண்டு. எத்தனையோ அடக்குமுறைகளைத் தாங்கி, அடாவடிகளை எதிர்கொண்டு பத்திரிகை உலகில் எதிர்நீச்சல் போட்டு உண்மையை உரக்கச் சொல்வது நக்கீரனே!

Advertisment

2018, மார்ச் 18-20 இதழ்:

ஆஹா! அட்டைப்படம் அட்டகாசமாக இருந்தது. டி.டி.வி. தினகரன் அமைப்புக் கட்சிக் கொடியில் ஜெ. படத்திலிருந்து ரத்தக்கண்ணீர் உருளும் காட்சி, உண்மையிலேயே மறைந்த பின்னும் ஜெ. பாவம்தான்.

Advertisment

ஜெ. மருத்துவ சிகிச்சையையும், மரணத்தையும் விசாரித்து வரும் விசாரணைஆணையம், எல்லாம் முடித்து தமது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்ஸ் ஏறி இறங்கிய வகையிலேதான் இருக்கும். இதில் வியப்பு ஏதும் இல்லையே.

தகரும் மோடி கனவு! வடக்கு விழித்து கொண்டது. தெற்கோ முழித்துக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் இனி சோதனையான காலம்தான்.

"உயிரைப் பறித்த மலைத்தீ!' …தீ அடங்கினாலும் சில விஷயங்கள் புகைந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்திய விதம் பலரையும் வருத்தும் என்பது உண்மை.

"திவாலாகும் தமிழ்நாடு' கட்டுரையை வாசித்தபோது இந்திய வரைபடத்தில் தமிழகம் இருக்கும் இடத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியது.

"தினகரன் பூச்சாண்டி, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மிரட்சி' கட்டுரை, வினையை விதைத்தால் வினையைத்தான் அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்கு இவர்களே சாட்சி!

வாசகர் கடிதங்கள்!

இயந்திரக் குரலோன்!

மரணித்துவிட்ட "கருந்துளை நாயகன்' ஸ்டீபன் ஹாக்கிங்கின் அர்த்தமுள்ள வாழ்க்கையைச் சுருங்கச் சொல்லி மேற்கொண்டு படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளார் மாவலி. இப்புகைப்படத்தில் விஞ்ஞானி ஸ்டீபனின் முன்புறம் உள்ள "இயந்திரக் குரல்' கணினிக் கருவியை உருவாக்கியவர், டேவிட்மேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

-டி.சந்திரன், தேனி.

கார்ப்பரேட் திருவிளையாடல்!

அதானியின் குயின்ஸ்லாந்து நிலக்கரிச் சுரங்கப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. ஆனாலும் அதற்கு முன்பே வரி ஏய்ப்புக்கான நரித்தன திருவிளையாடல்கள் சுமுகமாகவே நடந்து முடிந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய அரசுக்கு அதானியின் "பிரதான லீலைகள்' போகப்போக புரிந்துவிடும்.

-வெள்ளை.தீனா, அறந்தாங்கி.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe