Advertisment

பார்வை!-எ.ஜெ.கௌதமபாண்டியன் எழுத்தாளர்

gowtham

gowthampandiyan

Advertisment

வாசிப்பு என்பது அறிவை விசாலமாக்கும் ஒரு திறன் செயல்பாடே! அந்த அறிவுத்திறனை வளர்க்கும் ஓர் அறிவுக்கருவியாக நக்கீரன் இதழ் எனக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியது. முதலில் நக்கீரன் இதழில் அட்டைப் படம்தான் என்னை ஈர்த்தது. "ஒட்டுமொத்த புத்தகத்தின் பொருளடக்கம் இதுதான்' என அட்டைப்படமே வாசகர்களுக்கு சேதி சொல்லும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு புலனாய்வுத் தேடல் இருக்கும்; அதற்குச் சரியாகப் பொருந்திய இதழ் நக்கீரன் தான்.

நக்கீரன

நக்கீரன் என் நெஞ்சில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கிறது. ஈழப்போர் நடந்த காலங்களில் யுத்த களத்தின் நிஜத்தையும், அரிய புகைப்படங்களையும் இந்த இதழ் மட்டுமே வெளியிட்டது. அப்போது ஒரு வாசகனாய் என் மனம் சொல்லியது தமிழ்மொழி ஆளுமையும், சொற்களஞ்சியமும், எழுத்து நடையும், மொழி சார்ந்து இயங்குவதால் நக்கீரனுக்கு வாசகனாய் இருப்பது பெருமை!

2018, பிப். 10-12 இதழ் :

"சர்வாதிகாரியாக மாறுவேன்' -தி.மு.க.வின் களஆய்வுக் கட்டுரை... இன்றைய நிலையில் அடிமட்டத் தொண்டர்கள்தான் கட்சிக்கு ஆக்ஸிஜன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. "ஆபத்தில் தமிழகம்' த்ரில் ரகம். ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்டும் கூட. "படங்கள் இங்கே கால்கள் எங்கே?' நச்னு நாலுபடம், நாட்டுமக்களை யோசிக்க வைக்கும்படி இருந்தது. விசாரணைக் கமிஷன் இதைப்பார்த்து யோசிக்க வேண்டும்.

Advertisment

"கலை நிகழ்ச்சி கசமுசா! நடிகைகள் படும்பாடு!' பணிபுரியும் பெண்கள் துணிவுடன் இருக்கவேண்டும் என்ற சிந்தனையை விதைத்துள்ளது. "வானமே எல்லை மாணவர்கள் கனவுப் பயணம்!' இக்கட்டுரை மாணவர்களுக்கு களப்பயணங்களால் ஏற்படும் அறிவாற்றல், சிந்தனை மேம்பாடு, சமூகம் சார்ந்த செயல்பாடு ஆகியவற்றில் தங்களை இணைத்துக்கொள்ளும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.

வாசகர் கடிதங்கள்!

குளிர்விட்ட அரிவாள்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு என்பது, அரிவாளால் ரவுடிகள் பர்த்டே கேக் வெட்டும் லட்சணத்தில் இருக்கிறது. இதுபற்றி கேட்கப்போனால், "ஆந்திரா நோக்கி ஓடிப்போன கொள்ளையர்களுக்கு ஜெ. இல்லாததால், மீண்டும் குளிர்விட்டுப் போச்சு'னு அ.தி.மு.க.வினரே சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-தே.வ.சிவலிங்கம், புதுச்சேரி.

சத்தம்போட்டு பாராட்டு!

இன்றைய இயந்திர யுகத்தில் குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்குக்கூட, "ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்' என தப்பிக்கப் பார்க்கிறோம். இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கண் விரிய... சென்னைக்கு விமானம் வழியே ஓர் அறிவுசார் பயணத்தை அறிமுகப்படுத்திய "அறநெறி' லயன்ஸ் சங்கத்தாரை சத்தம்போட்டுப் பாராட்டலாம்.

-மாலதி பாஸ்கரன், வாழப்பாடி.

இதையும் படியுங்கள்
Subscribe