Advertisment

வந்த செய்தி! விசாரித்த உண்மை!

simran

வந்த செய்தி: சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ். அதிகாரி துவக்கி வைத்த ஐ.ஏ.எஸ். அகாடமி.

Advertisment

nataraj-ips

விசாரித்த உண்மை: கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை, குரோம்பேட்டையில் ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாடமி தொடங்கப்பட்டது. இந்த அகாடமியைத் துவக்கி வழிகாட்டுபவர் டாக்டர். ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். என விளம்பரங்கள் பளிச்சிட்டன. தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். இருந்தபோதுதான், வினாத்தாள்கள் விற்பனையான விவகாரம் வெளியாகி பரபரப்பானது. ""இன்னமும் டி.என்.பி.எஸ்.சி.யுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கும் நட்ராஜ், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தும் ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கி வழிகாட்டுவது முறைதானா''’என்கிறார்கள் நேர்மையான கல்வியாளர்கள்.

Advertisment

-ஸ்பைமேன்

jagaveerapandian

வந்த செய்தி: துரோக அரசியலும் இல்லை, கோஷ்டி அரசி

வந்த செய்தி: சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ். அதிகாரி துவக்கி வைத்த ஐ.ஏ.எஸ். அகாடமி.

Advertisment

nataraj-ips

விசாரித்த உண்மை: கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை, குரோம்பேட்டையில் ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாடமி தொடங்கப்பட்டது. இந்த அகாடமியைத் துவக்கி வழிகாட்டுபவர் டாக்டர். ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். என விளம்பரங்கள் பளிச்சிட்டன. தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். இருந்தபோதுதான், வினாத்தாள்கள் விற்பனையான விவகாரம் வெளியாகி பரபரப்பானது. ""இன்னமும் டி.என்.பி.எஸ்.சி.யுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கும் நட்ராஜ், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தும் ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கி வழிகாட்டுவது முறைதானா''’என்கிறார்கள் நேர்மையான கல்வியாளர்கள்.

Advertisment

-ஸ்பைமேன்

jagaveerapandian

வந்த செய்தி: துரோக அரசியலும் இல்லை, கோஷ்டி அரசியலும் இல்லை: விளக்கம் தரும் தி.மு.க. நிர்வாகிகள்.

விசாரித்த உண்மை: ’"அமைச்சருடன் கூட்டணி! சொந்தக் கட்சியினருக்கு சோதனை!' என்ற தலைப்பிலும், "சொந்தக் கட்சிக்கு சூன்யம்!'’ என்ற தலைப்பிலும் நாகை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிலவரத்தை நக்கீரனில் எழுதியிருந்தோம். இந்நிலையில், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், "நான் எப்போதுமே கோஷ்டி அரசியலை நடத்தவோ, உருவாக்கவோ விரும்பாதவன்' என கடிதம் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல் தெற்கு மாவட்ட அவைத்தலைவரான மா.மீனாட்சிசுந்தரம், எவ்வித களங்கமும் இல்லாமல் கட்சிப் பணியாற்றும் பெரியார் சீடர் எனக் குறிப்பிட்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.வி.ராஜேந்திரனுக்கு எதிராக வேலை பார்த்ததாக எழுதியிருப்பதில் உண்மை இல்லை என்பதையும், இயக்கத்தின் கொள்கைக்கு எதிராக ஒருபோதும் செயல்படாத தொண்டன் என்பதையும் தனது கடிதத்தில் விவரித்துள்ளார்.

-கீரன்

வந்த செய்தி: தனக்கு கீழ் இருக்கும் டி.ஐ.ஜி. பதவியை நிரப்பவிடாமல் தடுக்கிறார் கோவை மண்டல ஐ.ஜி. பாரி.

விசாரித்த உண்மை: கோவை மண்டலத்தின் டி.ஐ.ஜி. பதவிக்குத் தகுதியுடைய 12 அதிகாரிகள் இருந்தும், டி.ஐ.ஜி. பதவியையும் சேர்த்தே கவனித்து வருகிறார் ஐ.ஜி. பாரி. காரணம், டி.ஐ.ஜி.பதவியை இப்போதைக்கு நிரப்பத் தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிதான் பிரேக் பிடித்து வருகிறார் என்கிறது உயர் காக்கிகள் வட்டாரம்.

-பிரகாஷ்

minister-velumani

வந்த செய்தி: இ.பி.எஸ். ஆதரவு மா.செ.வை நீக்க, ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. பகீரத முயற்சி.

விசாரித்த உண்மை: தூத்துக்குடி அ.தி.மு.க. மா.செ.வாக இருக்கும் சி.த.செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர்ராஜுவின் அந்தியந்த சிஷ்யர். முதல்வர் எடப்பாடியின் குட்புக்கிலும் இருப்பவர். செல்லப்பாண்டியனுக்கும் மாஜி மந்திரியும் ஓ.பி.எஸ்.ஆதரவு எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதனுக்கும் எப்போதுமே ஆகாது. தன்னை மட்டும் வளப்படுத்திக்கொள்ளும் செல்லப்பாண்டியனால் மாவட்ட நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதையறிந்த சண்முகநாதன் கடந்த வாரம், தூத்துக்குடி ஏர்போர்ட் அருகே ரிசார்ட்ஸ் ஒன்றிற்கு, மாவட்டப் புள்ளிகளான ஏசாதுரை, அமிர்தகணேசன், ஜோதிமணி உள்ளிட்டோரை வரவழைத்தார். இவர்கள் மூலம் கி.செ.க்கள் உட்பட செல்லப்பாண்டியனை வெறுக்கும் அனைத்து நிர்வாகிகளையும் வளைத்து, மா.செ.பதவியிலிருந்து செல்லப்பாண்டியனைத் தூக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம். இதைத் தெரிந்து கொண்ட அமைச்சர் கடம்பூர்ராஜு, சண்முகநாதனுக்கு எப்படி சறுக்கலை ஏற்படுத்தலாம் என்ற தீவிர ஆலோசனையில் உள்ளாராம்.

-பரமசிவன்

வந்த செய்தி: சம்பளம் தராமல் தொழிலாளர்களை நோகடிக்கிறார் சிம்ரன்.

simran

விசாரித்த உண்மை: ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த சிம்ரன், காதலர் தீபக்பாஹாவைத் திருமணம் செய்து, குழந்தையைப் பெற்றபின், மாஜி ஹீரோயினாகிவிட்டாலும், கேரக்டர் ரோலில் கலக்கி வருகிறார். அத்துடன் சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘"பத்ரகாளி'’ என்ற பெயரில் முதல் படத்தையும் ஆரம்பித்துவிட்டார். ஒருவார ஷூட்டிங் முடிந்ததும், கேமராமேன், லைட்மேன், டான்சர்கள், ஸ்டண்ட் நடிகர்கள், டிராலி தள்ளுபவர்கள் என அனைவருக்கும் சம்பளமாக சிம்ரனின் கணவர் தீபக்பாஹா கையெழுத்துப் போட்ட செக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பேங்க்கில் பணம் இல்லை. தீபக்கிடம் தொழிலாளர்கள் கேட்டபோது, இருபது நாட்களாக டேக்கா கொடுத்து வருகிறாராம். சிம்ரனைப் பார்க்கலாம் என்றால் வெளிப்படங்களில் பிஸியாக இருப்பதாக சொன்னாராம் தீபக். “""அடுத்த கம்பெனி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே சம்பளத்தை வாங்கிவிடுகிறார் சிம்ரன். ஆனால் அவரின் சொந்தக் கம்பெனியால் நாங்கள் ரொம்பவே நொந்துவிட்டோம்'' என்கிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.

-பரமேஷ்

NatrajIPS simran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe