வந்த செய்தி! விசாரித்த உண்மை!

ops-dinakaran

வந்த செய்தி: சி.எம்.டி.ஏ. அனுமதிக்காக ஓ.பி.எஸ்.சை நெருங்கும் மருத்துவமனை நிர்வாகம்.

ops

விசாரித்த உண்மை: தமிழ் சினிமா உலகில் புகழ் வாய்ந்த தயாரிப்பு நிறுவனம் ஏவி.எம். ஸ்டுடியோ. சென்னை -வடபழனியில் உள்ள இந்த நிறுவனத்தின் சகோதரர்களுக்கிடையிலான பாகப்பிரிவினையின்படி, ஸ்டுடியோவின் பின்புறத்தில் பிரம்மாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு உருவாகி வருகிறது. முன்பகுதியில் உள்ள ஆறு தளங்கள் கொண்ட பெரிய கட்டடத்தில் ஃபோர்டிஸ் மருத்துவமனை நிர்வாகம், தனது உள்கட்டமைப்பு வேலைகளைத் துவங்கி அரசின் அனுமதிக்காக காத்திருந்தது. குறுகலான பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள மருத்துவமனை, அதன் அருகே பெட்ரோல்பங்க் இருப்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தார் அப்போதைய முதல்வர் ஜெ. ஆனால், இப்போது சிலரின் ஐடியாப்படி, முதலில் தீயணைப்புத்துறையின் என்.ஓ.சி. கிடைத்துவிட்டால், மற்றதெல்லாம் எளிதில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தீயணைப்புத்துறையின் தலைவர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்.சைப் பார்த்தது ஃபோர்டிஸ். ‘"துறையின் விதிமுறைகளின்படி ஓ.கே.தான், ஆனாலும் சி.எம்.டி.ஏ. இவற்றைச் சரிபார்த்துவிட்டு, அனுமதி வழங்கலாம்' என சிக்னல் போட்டார் ஜார்ஜ். அதன்படி, சி.எம்.டி.ஏ.வை கையில் வைத்துள

வந்த செய்தி: சி.எம்.டி.ஏ. அனுமதிக்காக ஓ.பி.எஸ்.சை நெருங்கும் மருத்துவமனை நிர்வாகம்.

ops

விசாரித்த உண்மை: தமிழ் சினிமா உலகில் புகழ் வாய்ந்த தயாரிப்பு நிறுவனம் ஏவி.எம். ஸ்டுடியோ. சென்னை -வடபழனியில் உள்ள இந்த நிறுவனத்தின் சகோதரர்களுக்கிடையிலான பாகப்பிரிவினையின்படி, ஸ்டுடியோவின் பின்புறத்தில் பிரம்மாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு உருவாகி வருகிறது. முன்பகுதியில் உள்ள ஆறு தளங்கள் கொண்ட பெரிய கட்டடத்தில் ஃபோர்டிஸ் மருத்துவமனை நிர்வாகம், தனது உள்கட்டமைப்பு வேலைகளைத் துவங்கி அரசின் அனுமதிக்காக காத்திருந்தது. குறுகலான பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள மருத்துவமனை, அதன் அருகே பெட்ரோல்பங்க் இருப்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தார் அப்போதைய முதல்வர் ஜெ. ஆனால், இப்போது சிலரின் ஐடியாப்படி, முதலில் தீயணைப்புத்துறையின் என்.ஓ.சி. கிடைத்துவிட்டால், மற்றதெல்லாம் எளிதில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தீயணைப்புத்துறையின் தலைவர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்.சைப் பார்த்தது ஃபோர்டிஸ். ‘"துறையின் விதிமுறைகளின்படி ஓ.கே.தான், ஆனாலும் சி.எம்.டி.ஏ. இவற்றைச் சரிபார்த்துவிட்டு, அனுமதி வழங்கலாம்' என சிக்னல் போட்டார் ஜார்ஜ். அதன்படி, சி.எம்.டி.ஏ.வை கையில் வைத்துள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் குடும்ப உறவுகள் சிலரை நெருங்கியுள்ளதாம் மருத்துவமனை நிர்வாகம்.

-இளையர்

dinakaran

வந்த செய்தி: கமல்ஹாசனை முந்திச்செல்ல டி.டி.வி.தினகரன் திட்டம்.

விசாரித்த உண்மை: மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்த பின், தமிழக மக்களின் போராட்டங்களில் கலந்துகொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் கமல். தனது கட்சியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தை ஏப்ரல் 04-ஆம் தேதி திருச்சியில் நடத்தவுள்ள கமல், புதுக்கோட்டை மாவட்டம் -நெடுவாசல் மக்களைச் சந்திக்கப் போவதாகவும் கூறியுள்ளார். கடந்தவாரம் தஞ்சை சுற்றுப்பயணத்தின்போது, கதிராமங்கலம் சென்ற டி.டி.வி.தினகரன், கமலுக்கு முன்பாக நெடுவாசலுக்குப் போகும் திட்டத்துடன், தனது சுற்றுப் பயணத்தை மாற்றி அமைக்கிறார்.

-பகத்சிங்

வந்த செய்தி: மு.க.ஸ்டாலினின் அதிரடி பிளான், மதுரை தி.மு.க.வில் தடாலடி மாற்றம். உ.பி.க்கள் உற்சாகம்.

விசாரித்த உண்மை: மாவட்ட வாரியாக கட்சியினரைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின், கடந்த 23-ஆம் தேதி, மதுரை மாநகர் வடக்கு-தெற்கு மாவட்டங்களின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்களுடன் கலந்துரையாடினார். வடக்கு மா.செ. வேலுச்சாமி மீது, வரிசையாக புகார் மழை பொழிந்தனர் நிர்வாகிகள். இவற்றுக்கு பதில் சொல்வதற்காக வேலுச்சாமி எழுந்தபோது, “"உட்காருங்க... நான் சொல்றதைக் கேளுங்க. தலைமையிலிருந்து ஒரு குழு, உங்க மாவட்டத்திற்கு வந்து ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுத்ததும், அதன்படி நடவடிக்கை இருக்கும். கூடிய விரைவில் மதுரையில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்ய பிளான் வைத்துள்ளேன்'’என குரலை உயர்த்தியுள்ளார் ஸ்டாலின். கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் வடக்கு மாவட்ட உ.பி.க்கள்.

-ஷாகுல்

sunnyவந்த செய்தி: சன்னி லியோனுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க, கடும் முயற்சியில் இறங்கியிருக்கும் டைரக்டர்.

விசாரித்த உண்மை: மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரித்த "வடகறி'’படத்தில் ஒத்தப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் இந்தி சினிமாவின் செக்ஸ்பாம் சன்னி லியோன். அதன்பின் தமிழில் கவனம் செலுத்தாத சன்னி, வரலாற்றுப் பின்னணி கொண்ட "வீரமாதேவி'’என்னும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டைரக்டர் வி.சி.வடிவுடையான், தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் மும்பைக்குச் சென்று கதைசொன்ன விதம் சன்னிக்குப் பிடித்துப் போக... உடனே சம்மதம் சொல்லி 150 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம். வீரமாதேவி என்ற ராணியைப் பற்றிய கதை என்பதால், அமெரிக்காவில் குதிரை ஏற்றப் பயிற்சியும் வாள் வீச்சுப் பயிற்சியும் எடுக்கும் சன்னி லியோனுக்கு தமிழ்மொழியைக் கற்றுக்கொடுக்க ஆசிரியை ஒருவரை நியமித்திருக்கிறாராம் வடிவுடையான். அந்தத் தமிழ்ஆசிரியை மும்பைக்கும் சென்னைக்கும் பயணித்து, சன்னி லியோனுக்கு தமிழ் வகுப்பு எடுக்கிறாராம்.

-பரமேஷ்

வந்த செய்தி: பெண்போலீஸ் உயர் அதிகாரிகளின் பட்டுச்சேலை பர்சேஸ். பணம் வராமல் தவிக்கிறார் ஜவுளி அதிபர்.

விசாரித்த உண்மை: மூன்று எழுத்து மண்டலத்தின் மூன்று எழுத்து டி.ஐ.ஜி.யான அவர், பட்டுச் சேலைக்குப் புகழ்பெற்ற ஆரணி போலீஸ் ஒருவருக்கு போன்பண்ணி, "காஸ்ட்லியான பட்டுச் சேலைகள் வேண்டும்' என கூறியுள்ளார். கேட்பது மேலதிகாரியாச்சே என களத்தில் இறங்கிய போலீஸ் புள்ளி, நகரில் உள்ள பிரபல ஜவுளி அதிபரிடம் சென்று, 15 பட்டுப் புடவைகளை வாங்கி அனுப்பியுள்ளார். அதில் 5 புடவைகளை செலக்ட் பண்ணிய டி.ஐ.ஜி. பணம் எதுவும் கொடுக்காமல், 10-ஐ ரிட்டர்ன் பண்ணிவிட்டார். இதை அறிந்த, மாவட்ட உயர் காக்கிப் பெண்மணியான அவரும், பட்டுப்புடவைகள் கேட்க, அதேபோல் 15 சென்று, 10 திரும்பியுள்ளது. அந்த அஞ்சும் இந்த அஞ்சும் சேர்த்து, மூன்று லட்ச ரூபாயாம். பணம் வருமா, வராதான்னு தெரியாமல் தவிக்கிறார் அந்த ஜவுளிக்கடை அதிபர்.

-கிங்

வந்த செய்தி: அமைச்சர் இல்லத் திருமண வரவேற்பு. தடபுடல் ஏற்பாடு, தடாலடி மிரட்டல்.

விசாரித்த உண்மை: செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மகள் திருமண வரவேற்பு கடந்த 25-ஆம் தேதி, கோவில்பட்டி ஆர்த்தி மகாலில் தடபுடலாக நடந்தது. அமைச்சரின் மாவட்டம் தூத்துக்குடி என்றாலும் விருதுநகர் மாவட்ட பி.ஆர்.ஓ., கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு, வரவேற்பிற்கு வந்தவர்கள், வராதவர்களை கர்மசிரத்தையாக கணக்கு எடுத்துக்கொண்டிருந்தார். தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ், நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐ.ஜி.சைலேஷ்குமார் யாதவ், தூத்துக்குடி எஸ்.பி.மகேந்திரன், கார்னெட் அதிபர் வைகுண்டராஜன், தலையாரி முதல் உயர் அதிகாரிகள் வரையிலான வருவாய்த்துறையினர் என சகலரும் ஆஜராகியிருந்தனர். வந்திருந்த முக்கால்வாசி பேர், தங்கச்செயின் பரிசளித்தனர். மொத்த மொய் வசூல் சில கோடிகளைத் தாண்டிவிட்டதாம். விருந்தினர்கள் தங்குவதற்காக, நகரில் உள்ள அனைத்து லாட்ஜ் ஓனர்களை மிரட்டியே, ரூம்களை புக் செய்திருந்தது அமைச்சர் தரப்பு. நகராட்சியின் மெயின் பைப் லைனிலிருந்து, மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி தாராளமாக சப்ளை செய்யப்பட்டது.

-பரமசிவன்

dinakaran ops sunny leone
இதையும் படியுங்கள்
Subscribe