Advertisment

டூரிங் டாக்கீஸ்!

rajini

தெறிக்க விட்ட டீசர்! காலா அரசியல்!

ரஜினியின் "காலா' டீஸர் "அரசியல் குறியீடு'களுடன் வெளியாகி... இரண்டே நாட்களில் மிகப்பிரமாண்ட வரவேற்பைப் பெற்றதுடன்... டீசரின் உள்ளடக்கம் சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. டீஸர் வெளியானதிலும்கூட ஒரு சர்ச்சை இருக்குது. இதனிடையே, காலாவுக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட ரஜினி + ஷங்கர் கூட்டணியில் உருவாகும் "2.0' படத்தின் டீசரை எந்தப் புண்ணியவானோ செல்போனில் "சுட்டு', "நெட்'டில் பரப்பிவிட... அது வைரலாகிவிட்டது.

Advertisment

kala-rajini

ஒரு ஃபிளாஷ்பேக்...

புதுமுக டைரக்டர் நட்ராஜ்கோபி தனது நண்பரான பாலசுப்பிரமணியத்திடம் வடசென்னை பின்புலத்தில் "கருப்பர் நகரம்' என்கிற கதை சொல்ல... "கல்லூரி' அகில் நடிக்க படத்தை தயாரித்து வந்த நிலையில் டைரக்டர் பா.ரஞ்சித்தின் "அட்டக்கத்தி'ய

தெறிக்க விட்ட டீசர்! காலா அரசியல்!

ரஜினியின் "காலா' டீஸர் "அரசியல் குறியீடு'களுடன் வெளியாகி... இரண்டே நாட்களில் மிகப்பிரமாண்ட வரவேற்பைப் பெற்றதுடன்... டீசரின் உள்ளடக்கம் சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. டீஸர் வெளியானதிலும்கூட ஒரு சர்ச்சை இருக்குது. இதனிடையே, காலாவுக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட ரஜினி + ஷங்கர் கூட்டணியில் உருவாகும் "2.0' படத்தின் டீசரை எந்தப் புண்ணியவானோ செல்போனில் "சுட்டு', "நெட்'டில் பரப்பிவிட... அது வைரலாகிவிட்டது.

Advertisment

kala-rajini

ஒரு ஃபிளாஷ்பேக்...

புதுமுக டைரக்டர் நட்ராஜ்கோபி தனது நண்பரான பாலசுப்பிரமணியத்திடம் வடசென்னை பின்புலத்தில் "கருப்பர் நகரம்' என்கிற கதை சொல்ல... "கல்லூரி' அகில் நடிக்க படத்தை தயாரித்து வந்த நிலையில் டைரக்டர் பா.ரஞ்சித்தின் "அட்டக்கத்தி'யில் "கருப்பர் நகர'க் கதையின் ஐந்தாறு காட்சிகள் அப்படியே இடம் பிடித்தன. அதனால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு புதிய காட்சிகளை எடுத்து ஷூட்டிங் நடந்தபோதும் ஃபைனான்ஸ் சிக்கலால் "கருப்பர் நகரம்' நிற்க... ரஞ்சித்தின் "மெட்ராஸ்' பட டிரெய்லர் வெளியானது. அது... முழுக்க "கருப்பர் நகரம்' கதையாகவே இருப்பதாக நட்ராஜ்கோபி சொல்ல... தயாரிப்பாளர் சங்கத்தில் "மெட்ராஸ்' படக்குழு மீது புகார் கடிதம் கொடுத்தார் பாலசுப்பிரமணியன்.

Advertisment

நோ ஆக்ஷன்!

இதனால் நீதிமன்றம் போனார் பாலசுப்பிரமணியன்.

இதையடுத்து கிண்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் ரஞ்சித்தையும், பாலசுப்பிரமணியனையும் வரவைத்து சமாதானம் பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு. அதில் ரஞ்சித் பக்கம் காற்று அடித்தது.

"ரஞ்சித் தலித்துங்கிறதால ஆதரிக்கிறீங்க. இதனால பாதிக்கப்படுற நானும், நட்ராஜ்கோபியும் தலித் தானே' என பாலசுப்பிரமணியன் சொன்னபோதும்... ரஞ்சித்துக்கே ஜெயம்.

"கருப்பர் நகரம்' கைவிடப்பட்டது.

ranjith-danush(இந்த நட்ராஜ்கோபிதான் ஏ.ஆர்.முருகதாஸிடம் "கத்தி' கதையை பறிகொடுத்து வழக்குப் போட்டவர். கோபியைப் பற்றி அறிந்த நயன்தாரா... கால்ஷீட் கொடுத்து, தயாரிப்பாளரையும் ஏற்பாடு செய்ததால் கோபி நைனார் என்ற பெயரில் "அறம்' படத்தை இயக்கினார்).

"மெட்ராஸ்' விஷயத்தில் வி.சி.க. பிரமுகர் ரஞ்சித்தை, வன்னியரசு ஆதரித்தார்.

"காலா' விஷயத்தில் வி.சி.க. பிரமுகர் ரவிக்குமார் கடும் விமர்சனம் வைத்திருக்கிறார் ரஞ்சித் மீது.

"கற்பி... ஒன்றுசேர்... போராடு' என்கிற அம்பேத்கரின் கொள்கை முழக்கத்தின் தன்மை "காலா'வில் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"ஒன்றாக மாறுவாய்... சீறுவாய்... கற்றவை பற்றவை...' என்பது அந்த பாட்டு வரிகள்.

"அம்பேத்கரின் அரசியல் முழக்கம் வணிக சினிமா ஒன்றின் பிரச்சார வாசகமாக்கப்பட்டிருக்கிறது. கொடுமை!'

-இப்படி தனது சமூக வலைப்பக்கத்தில் ரவிக்குமார் பதிவிட்ட கருத்து... சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

"அம்பேத்கர் உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா?' "கொள்கைகளை நீங்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். பாட்டாக வந்தால் எல்லோரும் பாடுவார்கள்', "வணிக சினிமாவில் நல்ல கொள்கைகளைச் சொன்னால் என்ன தப்பு?' என ரஞ்சித் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

து... தலித்திய அரசியல் என்றால்... இன்னொருபுறம் ஆன்மிக அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தி விட்டது "காலா'.

"காலா' தயாரிப்பாளர் தனுஷுக்கும், டைரக்டர் ரஞ்சித்துக்கும் இடையே சில கசப்புகள்.

"காலா' டீஸர் மார்ச் 1-ந்தேதி வெளியிடப்படும் என தனுஷ் அறிவித்தார். ஆனால் பிப்.28-ல் காஞ்சிமட தலைவர் ஜெயேந்திரர் மறைவும், மறுநாள் 1-ந் தேதி அவரின் உடல் அடக்கமும் நடந்ததால்... "டீஸர் 2-ந் தேதி காலை பத்து மணிக்கு வெளியாகும்' என தனுஷ் அறிவித்தார்.

படத்தின் இயக்குநரான ரஞ்சித்திடம் இதுபற்றி கலந்தாலோசிக்கவில்லையாம் தனுஷ். "அம்பேத்கர்-பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவன் நான். ஆனால் மதம் சார்ந்த ஒரு மடத்தின் தலைவர் இறந்ததற்காக... டீஸர் வெளியீட்டை தள்ளி வைப்பதா?' என வருத்தப்பட்டிருக்கிறார் ரஞ்சித்.

இந்த "ஆன்மிக அரசியல்' உள்ளுக்குள் சர்ச்சையானதால்... மார்ச் 1-ந் தேதி இரவு 12 மணிக்கு டீஸரை வெளியிட்டார் தனுஷ்.

ஜெயேந்திரருக்கு மரியாதை செலுத்தும் விதமாக... டீஸர் ரிலீஸை தள்ளிவச்ச மாதிரியும் ஆச்சு. 2-ந் தேதி பிறக்குறதுக்குள்ள நள்ளிரவில் ரிலீஸ் பண்ணியதால்... சொன்ன தேதியில் ரிலீஸானது மாதிரியும் ஆச்சு.

அடேங்கப்பா... இதுதாண்டா அரசியல்.

-இரா.த.சக்திவேல்

Danush Pa Ranjith Kala rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe