Advertisment

டூரிங் டாக்கீஸ்!

vishal

இது சினிமா அரசியல்!

* "தமிழக திரையரங்குகளில் படங்களை ஒளிபரப்புச் செய்யும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்... ஒரு படத்தை வெளியிட வாங்கும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி... அதுவரை புதிய படங்கள் வெளியாகாது... படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்' என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

Advertisment

* புதுப்படங்கள் வெளியாகாததால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி... "கேளிக்கை வரியை குறைக்கவேண்டும்'’என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து... தியேட்டர்களை மூடியது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

Advertisment

* "இந்தக் கதவடைப்பில் பங்கெடுக்க மாட்டோம்...' என சென்னை நகர திரையரங்க உரிமையாளர் சம்மேள னம் அறிவித்துவிட்டு... ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் படங்களையும், பழைய திரைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.

vijay-vishal-ajith

* "தியேட்டர்ல டிக்கெட் கட்ட ணத்தைக் குறைங்க. பார்க்கிங்

இது சினிமா அரசியல்!

* "தமிழக திரையரங்குகளில் படங்களை ஒளிபரப்புச் செய்யும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்... ஒரு படத்தை வெளியிட வாங்கும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி... அதுவரை புதிய படங்கள் வெளியாகாது... படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்' என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

Advertisment

* புதுப்படங்கள் வெளியாகாததால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி... "கேளிக்கை வரியை குறைக்கவேண்டும்'’என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து... தியேட்டர்களை மூடியது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

Advertisment

* "இந்தக் கதவடைப்பில் பங்கெடுக்க மாட்டோம்...' என சென்னை நகர திரையரங்க உரிமையாளர் சம்மேள னம் அறிவித்துவிட்டு... ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் படங்களையும், பழைய திரைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.

vijay-vishal-ajith

* "தியேட்டர்ல டிக்கெட் கட்ட ணத்தைக் குறைங்க. பார்க்கிங் கட்ட ணத்தைக் குறைங்க... தின்பண் டங்களின் விலையைக் குறைங்க... அப்பத்தான் கூட்டம் வரும்...' என தியேட்டர் காரர் களுக்கு நெருக்கடி கொடுத்த தயாரிப்பாளர் சங்கம், இன்னொரு முடிவையும் எடுத்துள்ளது. அது... ‘"இனி படங்களை ஒளி பரப்பும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணத்தை தியேட்டர்காரர்களே செலுத்திக்கொள்ள வேண்டும்' என்பதுதான்.

* "சினிமா உலகில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலை ரஜினியும், கமலும் சரி செய்யட்டும். அரசியலை நாங்க பார்த்துக்கிறோம்...' என பி.ஜே.பி. தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சொல்லிக்கொண்டிருக்க... ரஜினி மலையேறிவிட்டார். கமல் கட்சி வேலையில் கவனமாக இருக்கிறார்.

* கேளிக்கை வரி குறைப்பு பிரச்சினையை ஏற் கெனவே ஸ்டிரைக் அடித்த போது கண்டுகொள்ளவில் லை தமிழக அரசு. மீண்டும்... அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இந்தப் பிரச்சினையை சினிமாக்காரர்கள் கொண்டுபோக விரும்பியபோது... ‘"அதான் கமலும், ரஜினியும் கட்சி ஆரம்பிச்சிட்டாங் கள்ல... அவங்க தீர்த்து வைப்பாங்க'’என நக்கலாகச் சொல்லிவிட்டாராம்.

* "நான் ஏற்கெனவே சொன்னபடி டி.டி.ஹெச். நுட்பத்தில் வீடுதோறும் படத்தை வெளியிட்டால்... சினிமா நசிவதை தடுக்க லாம். இப்படி தேவையில்லாமல் ஸ்டிரைக் பண்ணி முடக்குவதா?'’என கமல் நினைக் கிறார். கூடவே... கமலின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் சொல்லப் போகும் "இந்தியன் 2'’ படத்திற்காக ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் செட்டுகள் போடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகிறது. இந்த தாமதத்தை கமல் விரும்பவில்லை.

* கமலின் எண்ணம் அறிந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்... உடனடியாக கமலை சந்தித்து... ‘"ஏன் இந்த ஸ்டிரைக்... இது ஸ்டிரைக் இல்லை... சினிமாவைக் காப்பாற்றும் முயற்சி'’ என எடுத்துச் சொல்லியிருக்கிறார். ‘"சீக்கீரம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரப் பாருங்க'’என விஷாலிடம் கமல் சொல்லியிருக்கிறார்.

* தயாரிப்பாளர் சங்க நடவடிக்கையால்... அஜீத்தின் ‘"விஸ்வாசம்'’படப்பிடிப்பு தொடங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்... ‘"இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க விலக்கு அளிக்க வேண்டும்'’ என ‘விஸ்வாசம்’ தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கேட்க... விஷயம் அறிந்த அஜீத்...’"விலக்கு கேட்க வேண்டாம். பிரச்சினை முடிந்த பிறகே படப்பிடிப்பை நாம் தொடங்கலாம்'’எனச் சொல்லியிருக்காராம்.

* ரஜினியும், கமலும் நண்பர்கள் என்றபோதும்... அவர்களின் ரசிகர்களால் கமல் படமும், ரஜினி படமும் போட்டிப் படங்களாகவே பார்க்கப்படும். இப்போது... அரசியலிலும் இந்த போட்டி. "ரஜினி என் நண்பர் என்றாலும்... அரசியலில் கொள்கை ரீதியாக நான் அவருடன் வேறுபட்டவன்'’என கமல் சொல்லியுள்ள நிலையில்... சினிமாவிலும் ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு அதிரடி நடக்கப்போகிறது.

* "ரஜினியின் "காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகும்' என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார். இருந்தாலும்... இந்த ஸ்டிரைக் காரணமாக... மார்ச் முதல் ஏப்ரல் 26 வரை வெளியாவதற்காக தேதி வாரியாக முன்னுரிமை பெற்றிருந்த படங்கள்... இந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்தபிறகு... வரிசைப்படி வெளியாகும். அப்படியானா... ‘"காலா'’படம் மே மாதம்தான் வெளியாகும் என்கிற நிலைமை.

"விஸ்வரூபம்-2'’ படத்தை முடித்து, சென்ஸாரும் வாங்கிவிட்ட கமல்... "காலா'வுக்குப் பிறகு மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார். எதிர்பாராதவிதமாக "காலா'வும் மே மாதம் வரும் நிலை ஏற்பட்டால்... ரஜினி-கமலின் அரசியலுடன்... சினிமாவும் சூடாகத்தான் இருக்கும்.

* விஜய் -டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் படமும், அஜீத் -டைரக்டர் சிவா கூட்டணியின் "விஸ்வாசம்'’படமும், சூர்யா -டைரக்டர் செல்வராகவன் கூட்டணிப் படமும்... ஆக இந்த மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நடவடிக்கையால்... இந்த தீபாவளி விருந்திலும் சிக்கல் வரக்கூடும்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

ajith vishal vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe