Advertisment

டூரிங் டாக்கீஸ்! - "கிழட்டு' ஹீரோஸ்! "க்ளாமர்' ஹீரோயின்!

kamalold

kamal

"இந்தியன்'’படத்தில் கிளவரான கிழவராக நடித்து அசத்தினார் கமல். அதன் இரண்டாம் பாகமான "இந்தியன்-2'வுக்காக கமலும், டைரக்டர் ஷங்கரும் மீண்டும் இணைகிறார்கள்.

Advertisment

இந்தப் படத்தில் நயன்தாராவை நாயகியாக்க ஆலோசிக்கிறார்கள்.

"கமலின் அரசியலுக்கு உதவும் படமாக இது இருக்கும்' என்கிறார்கள்.

அரசியல்வாதியாகிவிட்ட கமல்... விரைவில் "விஸ்வரூபம்-2'வை வெளியிடுகிறார். அடுத்தது ‘"இந்தியன்-2.'

Advertisment

கமலின் "சபாஷ் நாயுடு'’தொடங்கப்பட்டதிலிருந்தே கமலுக்கு காலில் விபத்து முதல் கௌதமி பிரிந்தது வரை ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. இதனால் கமல் "சபாஷ் நாயுடு'வை கைவிடவிருப்பதாக வந்த தகவல்களை ந

kamal

"இந்தியன்'’படத்தில் கிளவரான கிழவராக நடித்து அசத்தினார் கமல். அதன் இரண்டாம் பாகமான "இந்தியன்-2'வுக்காக கமலும், டைரக்டர் ஷங்கரும் மீண்டும் இணைகிறார்கள்.

Advertisment

இந்தப் படத்தில் நயன்தாராவை நாயகியாக்க ஆலோசிக்கிறார்கள்.

"கமலின் அரசியலுக்கு உதவும் படமாக இது இருக்கும்' என்கிறார்கள்.

அரசியல்வாதியாகிவிட்ட கமல்... விரைவில் "விஸ்வரூபம்-2'வை வெளியிடுகிறார். அடுத்தது ‘"இந்தியன்-2.'

Advertisment

கமலின் "சபாஷ் நாயுடு'’தொடங்கப்பட்டதிலிருந்தே கமலுக்கு காலில் விபத்து முதல் கௌதமி பிரிந்தது வரை ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. இதனால் கமல் "சபாஷ் நாயுடு'வை கைவிடவிருப்பதாக வந்த தகவல்களை நாம் ஏற்கெனவே விரிவாகச் சொல்லியிருந்தோம்.

இப்போது கமலின் பேச்சு அதை உறுதி செய்வது போலவே இருக்கிறது.

"இனி சினிமாவில் நடிக்கமாட்டேன். முழுக்க அரசியல்தான். ‘"விஸ்வரூபம்-2'ம், ’"இந்தியன்-2'ம் எனது கடைசிப் படங்களாக இருக்கும்'’என தெரிவித்தவர்... சிறிதுநேரத்தில் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டார் என்றாலும்... சினிமாவுக்கு முழுக்குதான் கமலின் விருப்பம்.

இந்தியன் கிழவர் இரண்டாம் முறையாக... ஃபாரினிலிருந்து தனது வேட்டையைத் தொடங்குகிறார்.

லையாள ஹீரோவான திலீப்... சர்ச்சைகளைத் தாண்டிப் பார்த்தால்... படங்களில் விதவிதமாக கெட்-அப் போடுவதில் மன்னன்.

இப்போது... "கம்மார சம்பவம்'’என்கிற படத்தில் அசத்தலான கிழவர் வேடம் போட்டிருக்கிறார்.

ஃபிளாஷ்பேக் காட்சிகளில்... இளைஞராகவும், சமகால காட்சிகளில்... தொண்ணூறு வயதை தாண்டியவராகவும் நடித்திருக்கிறார்.

‘நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில்’ திலீப் சிறை சென்றதால்... தாமதப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு.. இப்போது விறுவிறுவென முடிக்கப்பட்டுவிட்டது.

விஜய்சேதுபதி நடித்துவரும் படம்‘"சீதக்காதி'

16-ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் கீழக்கரையில் பிறந்து வளர்ந்த செய்கு அப்துல் காதிறு... தனது வள்ளல் தன்மையால் "வள்ளல் சீதக்காதி'’என அழைக்கப்பட்டார்.

"இது அந்த வள்ளலின் கதையாக இருந்தால்... கவனமாக எடுக்கவேண்டும்'’என கீழக்கரை மக்கள் சார்பில் விஜய்சேதுபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்... இது ஒரு மேடைக் கலைஞனின் கதை. இதற்காக ‘இளைஞன், நடுத்தர வயது தாண்டியவர் மற்றும் கிழவர்’வேடங்களில் வருகிறார் வி.சே.

இந்த கிழவர் கேரக்டருக்கு மேக்-அப் போட... ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்கள் பணியாற்றிmalvikamenonவருகிறார்கள்.

ஃப்ளவர்.... கிளாமர்!

"சிலந்தி'’புகழ் டைரக்டர் ஆதிராஜன் இயக்கிவரும் "அருவா சண்ட'’படத்தில் ஆக்ஷன், சென்ட்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் என்பதால்... ஒரே ஒரு பாடல் காட்சியில், அதிலும் ஹீரோயினுக்கான சோலோ ஸாங்கில் கிளாமரை சேர்க்க முடிவு செய்தனர். கேரளாவிலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நாயகியை நனையவிட்டு கிளாமர் சேர்க்க ஏற்பாடு. ஆனால்... படத்தின் காஸ்ட்யூமர் கொடுத்த ஆடைகள் ரொம்ப உயரம் கம்மியாக இருப்பதாக நாயகி மாளவிகா மேனன் அதை போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார்.

இந்த தகராறால் ஒரு மணி நேரம் படப்பிடிப்பு நடக்கவில்லை.

பிறகு ஒரு சமாதான உடன்படிக்கை உண்டானது.

"ஹீரோயின் கேட்கிற அளவுக்கு நீளமும் வேணாம்... டைரக்டர் சொல்ற அளவுக்கு குட்டையும் வேணாம். இருதரப்புலயும் ரெண்டு இஞ்ச் விட்டுக் கொடுக்கலாம்'’ என்பது அந்த சமாதானப் பேச்சின் சாரம்.

அப்புறமென்ன... ஓ.கே.தான்.

’"ஆற்றில் ஒரு மீனாக... காட்டில் ஒரு மானாக...'னு ஜீன்ஸ் டவுஸரா வெட்டி போட்டுக்கிட்டு ஆடிக் கொடுத்திருக்கார் மாளவிகா.

-ஆர்.டி.எ(க்)ஸ்

malvikamenon Kamal old getup
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe