நடிகை வெளியிடும் டார்ச்சர் லிஸ்ட்!

parvathimenon

Advertisment

"பூ' படத்தில் அறிமுகமாகி தனுஷுடன் "மரியான்' படத்தில் நடித்த பார்வதிமேனன் ஒரு பட்டியலை வெளியிடப் போவதாக சொல்லி வருகிறார்.

என்ன பட்டியல்?

""சினிமாவில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தர நினைத்தவர்களின் பட்டியல் வெளியிடப் போறேன்'' என்கிறார்.

சமந்தா ரூல்ஸ்!

டூர் போன இடத்தில் எடுத்துக்கொண்ட தனது கிளுகிளு படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பண்ணினார் சமந்தா.

Advertisment

samantha

படம் ஹிட்!

அதே சமயம்... "கல்யாணமான பொண்ணு இப்படித்தான் போட்டா போடுறதா?' என கண்டனப் பதிவுகளும் வர...

"என்னோட ரூல்ஸ் எதுன்னு நான்தான் தீர்மானிப்பேன்' என பதில் தந்திருக்கிறார் சமந்தா.

இவ்வளவு கேவலமா?

Advertisment

gangna

"பத்மாவதி'யைத் தொடர்ந்து ஜான்ஸியை ஆண்ட ராணி லக்குமிபாய் வாழ்க்கை... அவரின் சொந்தப் பெயரான "மணிகர்ணிகா' படத்திற்கும் எதிர்ப்பு.

"வெள்ளையர் ஆண்டபோது இங்க இருந்த ஒரு வெள்ளைக்கார ஏஜெண்ட்டுக்கும், ராணிக்கும் தொடர்பு இருந்ததா படம் எடுத்திருக்காங்க...' என ராஜஸ்தான் சர்வ பிராமண மகா சபை எதிர்ப்பு தெரிவிச்சிருக்கு.

"இப்படியெல்லாம் கேவலமா எப்படித்தான் யோசிக்கிறாங்களோ?' என எரிச்சல்பட்டிருக்கிறார் ராணியாக நடித்திருக்கும் கங்கனா.

காலா முந்தும் ரகசியம்!

rajini1

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் "2.0' படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

"தமிழ் சினிமாவுல இவ்வளவு வித்தியாசமா யோசிக்கிறாங்களே...' என இந்த ஹாலிவுட் கலைஞர்கள்... பெருமையாக சிலாகித்துக்கொண்ட விஷயம்... கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஒரு படத்தில் சேர்க்கப்பட்டுவிட்டதாம்.

அதையெல்லாம் மாற்றியமைப்பதால்தான் "2.0' வெளியீடு மேலும் தள்ளிப்போக... ரஜினியின் "காலா' முந்துகிறது.

-ஆர்.டி.எ(க்)ஸ்