Advertisment

டூரிங் டாக்கீஸ்!

kamal,sridevi

ஆஹா மயிலு... நெகிழ்ந்த கமலு!

தினசரி... அந்த நடிகை ஷூட்டிங் கிளம்புகிறபோதெல்லாம்... தவறாமல் அந்தக் கேள்வியைக் கேட்பார்... அந்த நடிகையின் தாயார்...

Advertisment

""நீ அவரை காதலிக்கிறியா? நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறியாமே?''

kamal-sridevi

தாயாரின் இந்தக் கேள்விகளுக்குத் தவறாமல் அந்தப் பதிலைச் சொல்லுவார் அந்த நடிகை...

Advertisment

""அதெல்லாம் இல்லை; அப்படியெல்லாம் இல்லை''

மகளின் பதிலில் திருப்தியடையாத தாய்... சந்தேகத்தின் பேரில் மகளுடன் சண்டை போடுவார்.

இந்தச் சந்தேகம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான விடை வெள்ளித்திரையில் இருந்தது.

அந்த நடிகையும், அவரும் உருகி, மருகி, கெமிஸ்ட்ரி பொங்க நட

ஆஹா மயிலு... நெகிழ்ந்த கமலு!

தினசரி... அந்த நடிகை ஷூட்டிங் கிளம்புகிறபோதெல்லாம்... தவறாமல் அந்தக் கேள்வியைக் கேட்பார்... அந்த நடிகையின் தாயார்...

Advertisment

""நீ அவரை காதலிக்கிறியா? நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறியாமே?''

kamal-sridevi

தாயாரின் இந்தக் கேள்விகளுக்குத் தவறாமல் அந்தப் பதிலைச் சொல்லுவார் அந்த நடிகை...

Advertisment

""அதெல்லாம் இல்லை; அப்படியெல்லாம் இல்லை''

மகளின் பதிலில் திருப்தியடையாத தாய்... சந்தேகத்தின் பேரில் மகளுடன் சண்டை போடுவார்.

இந்தச் சந்தேகம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான விடை வெள்ளித்திரையில் இருந்தது.

அந்த நடிகையும், அவரும் உருகி, மருகி, கெமிஸ்ட்ரி பொங்க நடிக்கிற காட்சிகளைப் பார்த்துவிட்டு... இப்படி "காதலோ... கல்யாணமோ?' என சந்தேகப்பட்டார் நடிகையின் தாய்.

இது... 1960-70களில் நடந்தது.

தினசரி... அந்த நடிகை ஷூட்டிங் கிளம்புகிற போதெல்லாம்... தவறாமல் அந்தக் கேள்வியைக் கேட்பார்... அந்த நடிகையின் தாயார்...

""நீ அவரை காதலிக்கிறியா? நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறியாமே?''

தாயாரின் இந்தக் கேள்விகளுக்குத் தவறாமல் அந்தப் பதிலைச் சொல்லுவார் அந்த நடிகை...

""அதெல்லாம் இல்லை; அப்படியெல்லாம் இல்லை''

மகள் பொய் சொல்வதாக நினைப்பார் தாய்.

kamal-sridevi1

இந்தச் சந்தேகம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான விடை வெள்ளித்திரையில் இருந்தது.

அந்த நடிகையும், அவரும் உருகி, மருகி, கெமிஸ்ட்ரி பொங்க நடிக்கிற காட்சிகளைப் பார்த்துவிட்டு... இப்படி "காதலோ... கல்யாணமோ?' என நினைத்தார் நடிகையின் தாய்.

போதாக்குறைக்கு... சினிமா இண்டஸ்ட்ரியிலும் பத்திரிகைகளிலும் இந்த ரீல் ஜோடி ரியலிலும் ஜோடிபோடப் போவதாக எழுதப்பட்டே வந்தன. இந்த ஜோடியும் தங்களைப் பற்றிய காதல் ரச தகவல்களை "உண்டு' என்றோ... "இல்லை' என்றோ... அழுத்தமாகச் சொல்லவில்லை.

இது... 1970-80களில் நடந்தது.

இது 2018-ல்.

கடந்த வாரம் மும்பையில் "இந்துஸ்தான் டைம்ஸ்' விருது விழாவில் சினிமா நட்சத்திரங்களுக்கு "ஸ்டைலிஷ்' விருது தரப்பட்டது.

இதில்... கமலுக்கு சிறப்பு விருது தரப்பட்டது. இந்த விருதை "மயிலு' ஸ்ரீதேவியின் கையால் கமல் பெற்றுக்கொண்டார். அப்போது... தன் இரு கைகளையும் நீட்டி ஸ்ரீதேவி அழைக்க... கமலும், ஸ்ரீதேவியும் நட்புமிளிர அன்பால் அரவணைத்துக்கொண்டனர்.

அந்த நட்பின் நெகிழ்வில் சில வார்த்தைகள் பேசிய கமல்...

""ஸ்ரீதேவியின் கைகளால் விருதைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்ரீதேவியைப் பார்த்ததும் நான் நீண்ட நெடும்பயண மலரும் நினைவுகளுக்குள் சென்றுவிட்டேன்'' எனக் குறிப்பிட்டார்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்...

""அதிக படங்களில் என்னுடன் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. அவரை மறக்கவே முடியாது. காரணம்... அப்போது எங்களுக்குள் நிஜத்திலும் காதல் இருப்பதாக ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் "திருமணம் செய்துகொள்வோம்' என்றுகூட சிலர் சொன்னார்கள். ஸ்ரீதேவியின் அம்மாவும்கூட அப்படி நினைத்தார். ஆனால் உண்மை அது இல்லை. ஸ்ரீதேவி நல்ல குணம் கொண்டவர். அதனால் எனக்கு அவரைப் பிடிக்கும். என்னைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியாது. ஆனால், அன்று முதல் இன்றுவரை அவர் என்னை "சார்' என்றுதான் அழைப்பார். அவர் கொஞ்சமும் மாறவில்லை'' எனச் சொல்லியிருந்தார் கமல்.

மயிலுவைப் பார்த்ததும் கமலுக்கு உண்டான மலரும் நினைவுகள் இதுவாகத்தானே இருக்க முடியும்!

""அது சரி... 1970-80 ஜோடி "கமல்-ஸ்ரீதேவி'னு தெரிஞ்சிடுச்சு. 1960-70 ஜோடி யாரு?''

சிவாஜிகணேசன்-தேவிகா.

-இரா.த.சக்திவேல்

kamal sridevi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe