ஒட்டாதே! ஒட்டாதே!
இராமநாதபுரத்தில் வறண்டு கிடந்த ஏழு பெரிய ஊருணிகளிலும் இப்போது தண்ணீர் தெப்பமாய் நிறைந்து நிற்கிறது. வைகை ஆற்றிலிருந்து ஊருணிகளுக்கு நீர் வரும் வாய்க்கால்களை, வரத்துமடைகளை சுத்தம் செய்து, தண்ணீரை நிரப்பிய பெருமை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பேபியையே சேரும்.
இதனால், இந்தம்மாவைப் பாராட்டி ம.தி.மு.க.வினர், நாம் தமிழர் இயக்கத்தினர் என பலரும் பாராட்டு போஸ்டர்களை அச்சடித்து நகர் முழுக்க ஒட்டினார்கள்.
இந்த சுவரொட்டிகள் மாவட்ட அமைச்சர் தொழில் நுட்பம் மணிகண்டனை கொந்தளிக்க வைத்துவிட்டன. வருவாய்த்துறை அதிகாரி பேபியம்மாவை பாராட்டி ஒட்டப்பட்ட அத்தனை சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்துவிட்டு, ஊருணிகள் நிரம்பியதற்கு தான்தான் காரணமென புதிய சுவரொட்டிகளை அடித்து ஒட்டியிருக்கிறார் அமைச்சர்.
அதுமட்டுமல்ல... கலெக்டரிடம் சொல்லி பேபியம்மாளை மாறுதல் செய்து இப்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
""இந்த பேபியம்மா முயற்சியாலதான் ஊருணிகள் நிரப்பப்பட்டன. மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து பல கட்சியினரும் தனித்தனியே போஸ்டர்களை ஒட்ட
ஒட்டாதே! ஒட்டாதே!
இராமநாதபுரத்தில் வறண்டு கிடந்த ஏழு பெரிய ஊருணிகளிலும் இப்போது தண்ணீர் தெப்பமாய் நிறைந்து நிற்கிறது. வைகை ஆற்றிலிருந்து ஊருணிகளுக்கு நீர் வரும் வாய்க்கால்களை, வரத்துமடைகளை சுத்தம் செய்து, தண்ணீரை நிரப்பிய பெருமை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பேபியையே சேரும்.
இதனால், இந்தம்மாவைப் பாராட்டி ம.தி.மு.க.வினர், நாம் தமிழர் இயக்கத்தினர் என பலரும் பாராட்டு போஸ்டர்களை அச்சடித்து நகர் முழுக்க ஒட்டினார்கள்.
இந்த சுவரொட்டிகள் மாவட்ட அமைச்சர் தொழில் நுட்பம் மணிகண்டனை கொந்தளிக்க வைத்துவிட்டன. வருவாய்த்துறை அதிகாரி பேபியம்மாவை பாராட்டி ஒட்டப்பட்ட அத்தனை சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்துவிட்டு, ஊருணிகள் நிரம்பியதற்கு தான்தான் காரணமென புதிய சுவரொட்டிகளை அடித்து ஒட்டியிருக்கிறார் அமைச்சர்.
அதுமட்டுமல்ல... கலெக்டரிடம் சொல்லி பேபியம்மாளை மாறுதல் செய்து இப்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
""இந்த பேபியம்மா முயற்சியாலதான் ஊருணிகள் நிரப்பப்பட்டன. மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து பல கட்சியினரும் தனித்தனியே போஸ்டர்களை ஒட்டினோம். கடுப்பான அமைச்சர் போஸ்டர்களை கிழித்தது மட்டுமின்றி போஸ்டர் ஒட்டிய எங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வைத்திருக்கிறார்'' என்கிறார் ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன்.
நாம் தமிழர் கட்சி ராஜுவோ, ""மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் இரண்டு, பிரப்பன்வலசையில் ஒன்று, திருவாடனையில் ஒன்று, கடலாடி மலட்டாறில் ஒன்று என்று ஐந்து குவாரிகளுக்கு அமைச்சர் மணிகண்டன் வாய்மொழி உத்தரவு கொடுத்திருக்கிறார். இதை அந்த பேபியம்மா தடுத்திருக்கிறார். அதனால் இப்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பேபியம்மாவுக்காக சர்வ கட்சிகளும் போராடத் தயாராகிவிட்டன'' என்றார்.
இதுபற்றி கருத்துக் கேட்பதற்கு அமைச்சர் மணிகண்டனை பலமுறை தொடர்பு கொண்டோம்... பதிலில்லை.
-நாகேந்திரன்
மாற்றாதே! மாற்றாதே!
மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கான ஒரு பெரிய லிஸ்ட்டை கொண்டுவந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் கொடுத்தார் கடலூர் எம்.பி. அருண்மொழித்தேவன்.
பிரித்துக்கூடப் பார்க்கவில்லை ஆட்சியர். ""இதில் தகுதியுள்ளவர்கள் இருந்தால் கட்டாயம் கிடைக்கும்'' என்று எம்.பி.யை அனுப்பிவிட்டாராம். வெளியே வந்த எம்.பி., தனது ஆதரவாளர்களிடம் ""அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்திலும் இந்த ஆள் இப்படித்தான், நம் நிர்வாகிகளின் வயிற்றிலடித்தார். இன்னும் ஒருவாரம் பத்துநாளில் இவரைத் தூக்கியடிக்கப்போகிறோம்'' என்றாராம்.
எம்.பி. சொன்னபடியே நடந்துவிட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியராக கடந்த 6 மாதங்களாக மக்கள் பாராட்ட பணிசெய்த பிரசாந்த் வடநேரே, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுவிட்டார்.
இந்த மாறுதலை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆனால் கடலூர் மாவட்ட மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வலைத்தளங்களில் கண்டனக் குரல்களைக் கொடுத்துப் பார்த்த மக்கள், சாலையில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டார்கள்.
""மாற்றாதே! மாற்றாதே! நேர்மையான ஆட்சியரை மாற்றாதே!'' கோஷத்தோடு கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன் தலைவர் மருதவாணன் நம்மிடம்... ""ஏழை-எளிய மக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தவர். ஆயிரக்கணக்கான அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒரு பைசா லஞ்சமில்லாமல் போஸ்டிங் போட்டவர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தயவின்றி அகற்றியவர். மனுநீதி நாள் முகாம்களுக்கு அதிகாரிகளுடன் பேருந்துகளில் செல்பவர். ஆளும்கட்சியினரின் முறைகேடுகளுக்கு அடிபணியாதவர். இந்த மாவட்டத்துக்கு கிடைத்த அருமையான கலெக்டர். 6 மாதம்கூட ஆகவில்லை... மாற்றலாமா? ஆட்சியர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இல்லையென்றால்... பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
நல்ல அதிகாரிகளுக்கு மக்கள் எப்போதும் ஆதரவளிக்கிறார்கள்.
-அ.காளிதாஸ்
கொல்லாதே! கொல்லாதே!
கூலித்தொழிலாளி, நெல்லை மாவட்டம் கும்பிகுளம் முருகனின் மகள் நர்ஸ் மாலினிக்கு திசையன்விளை அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்த டாக்டர், ட்யூட்டி முடிந்து தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். அடுத்த டாக்டர் வரவில்லை. மாலினிக்கு ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. பணியிலிருந்த செவிலியரே, "எங்களால் ஒண்ணும் செய்ய முடியாது, டாக்டரய்யா வரட்டும்' என்று கூறிவிட்டனர்.
ஐந்துமணி நேர ரத்தப்போக்கால் மாலினிக்கு மூச்சுத்திணறலும், பிட்சும் ஏற்பட்டுவிட்டது. மாலினியின் தந்தை முருகனோ, ""என் மகளை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...'' என்று கதறினார். இரவு ஏழரை மணி... புதிதாக வந்த செவிலியர், மாலினிக்கு ஆக்ஸிஜன் பொருத்தியதோடு, பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு 108-ல் அனுப்பிவைத்தார்.
ஆம்புலன்ஸ் நாங்குநேரி போகுமுன்பே ஆக்ஸிஜன் காலியாகிவிட்டது. பாளை. மருத்துவமனைக்கு மாலியினின் சடலம்தான் சென்றது.
""பாவிகள்... ஆறுமணி நேரம் டாக்டருக்காக காத்திருந்தோம். வரவேயில்லை. எம்புள்ளைய அநியாயமாகக் கொன்றுவிட்டார்கள்'' நெஞ்சிலடித்துக் கொண்டு கதறினார் முருகன். திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
டாக்டரின் பொறுப்பின்மையைக் கண்டித்து சி.பி.ஐ. கட்சியினரும், வட்டச் செயலாளர் சேதுராமலிங்கமும், விவசாய சங்க துணைத்தலைவர் பெரும்படையாரும் தோழர்களும் ஆர்ப்பாட்டம் செய்ததோடு மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்தனர்.
விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. ""திசையன்விளை மருத்துவமனையில் இந்த மாதத்தில் நடக்கும் மூன்றாவது சம்பவம் இது'' என்கிறார் மன வேதனையோடு.
அரசு மருத்துவமனைகள் மீது ஏழை கர்ப்பவதிகள் நம்பிக்கை வைப்பது தவறா?
-பரமசிவன்