எல்லாவிதமான படைப்பாற்றலாலும் இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் மனதில் நிலைபெறச் செய்து அதையே அரசியல் களத்தில் வெற்றியாக அறுவடை செய்தவர்கள் திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்கள். அண்ணா- கலைஞரின் எழுத்தாற்றலை பாமரர்களும் அறி வார்கள். அவர்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக் கான படைப்பாளிகளைத் திராவிட இயக்கம் தந்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலையில் திராவிட படைப்பாளிகளுக்காக வலிமையான களமோ அங்கீகாரமோ பெரிய அளவில் இல்லை.
இடதுசாரி அமைப்புகளின் கலை இலக்கிய;ஞ் பெருமன்றம், த.மு.எ.க.ச., வலதுசாரி பா.ஜ.க.வின் பொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் போல தி.மு.க.விலோ அ.தி.மு.க.விலோ படைப்பாளிகளுக் கான அமைப்பு எதுவு மில்லை. இந்நிலையில், ம.தி.மு.க.வின் சார்பில் பைந்தமிழ் மன்றம் சார்பில், "இயற்றமிழ் வித்தகர்' விருது வழங்கும் விழா மூலம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நிகழ்வை வைகோ தொடங்கி யிருக்கிறார்.
நவீன படைப்பிலக்கி யத்தில் நன்கு அறியப் பட்டவர் எழுத்

நவீன படைப்பிலக்கி யத்தில் நன்கு அறியப் பட்டவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழ் இலக்கிய உலகிற்கு சமகாலத்தில் பங்காற்றிக் கொண் டிருக்கும் இவருக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவால் தொடங்கப்பட்ட பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் முதன்முறையாக "இயற்றமிழ் வித்தகர் விருது' மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான பொற்கிழி வழங்கும் விழா மார்ச் 16-ஆம் தேதி நடந் தது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, "செம்மலர்' ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் தலைமைதாங்க, வரலாற்று எழுத்தாளர் செ.திவான் வரவேற்புரையும், கவிஞர் தங்கம் மூர்த்தி வாழ்த்துரையும் வழங்கினர்.
கவிஞர் வைரமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழருவி மணியன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் விருதுபெற்ற எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்திப் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எஸ்.ரா எழுதிய மகாபாரதத்தின் மறுவாசிப்பு நூலான ‘"உபபாண்டவம்'’குறித்து உணர்வுப்பூர்வமாக விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், ""துருக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்மேனியர்களின் துன்பவாழ்க்கை குறித்து "அராரட்' என்ற படம் வெளிவந்தது. அதில் சிரியா பாலைவனத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான ஆர்மேனிய பொதுமக்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் என அதன் கொடூரநிகழ்வுகள் குறித்து அப்படியே காட்சிப்படுத்தியிருப்பார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மானிய நாடாளுமன்றம் அதையொரு இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. துருக்கி அதிபர் எர்டோகன் கோபம் கொள்கிறார். ஆனால், தமிழீழத்தில் நம் உறவுகள் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு வெறும் பத்தாண்டுகளே ஆகின்றன.
அராரட்டில் வரும் ஒரு கற்பழிப்பு காட்சி இசைப் பிரியாவை என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. கர்ப்பி ணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுக்களை வெளியில் எடுத்துப் போட்ட சம்பவம், ஹிட்லரின் காலத்தில் கூட நடக்கவில்லையே. எட்டு தமிழர்களை அம்மணமாக இழுத்துச்சென்று சுட்டுக்கொன்ற காட்சிகள் இருக்கின்றனவே. அராரட்டின் நெஞ்சை உலுக்கும் காட்சிகளைக் கண்டு அழுததைப்போல, எத்தனை இரவுகள் நான் இந்தக் காட்சிகளை நினைத்து அழுதிருப்பேன். தமிழீழம் சார்ந்த எந்தப் படங்களுக்கும் இங்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்படியொன்று நடந்தால்தான் அது மக்கள் மன்றத்திலே பேசும். அதுபற்றியும் நீங்கள் ஒரு காவியம் தரவேண்டும்''’என எஸ்.ரா.வுக்கு வேண்டுகோளோடு பேசிமுடித்தார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது, ""இந்த விருது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றார் வைகோ. இல்லை, இது ஓர் அரசியல் என்றுதான் சொல்வேன். இலக்கி யத்தையும் அரசியலையும் ஒன்றுசேர்க்கிற ஓர் அரசியல். இலக்கியத்தில் இருந்துதான் அரசியல் நடத்தமுடியும் என்று இலக்கியத்தைத் துணைக்கு சேர்க்கும் ஒரு அரசியல். எல்லா வற்றையும் தாண்டி இன்று ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மதவாதத்துக்கு எதிராக இலக்கியத்தை நாங்கள் தூக்கிப்பிடிக் கிறோம் என்கிற அரசியல். இந்த அரசியலுக்கு எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எப்போதுமே உறுதுணையாக இருப்போம். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய உலக எழுத்தாளர்கள் இன்றும் புகழ்பெற்றவர்களாக இருக்கும் சூழலில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு இலக்கியத்தை ஊட்டிய தமிழுக்கு இன்னமும் பெருமை கிடைக்கவில்லை. அந்தப் பெருமையை உலகம் பேசும்வகையில் சிலப்பதிகாரம் குறித்த நூல் ஒன்றையும் கூடியவிரைவில் வெளியிடுவேன்''’என உறுதியளித்தார்.
திராவிட இயக்கமான ம.தி.மு.க. அளித்த விருதைப் பெறுவதற்கான தகுதியாக, "என் வீட்டின் பெயர் பெரியார் இல்லம்... நான் பெரியார் இல்லத்தில் இருந்து வந்தவன்'’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னபோது, கலைவாணர் அரங்கம் அதிர்ந் தது. வைகோ தொடங்கி வைத் திருப்பதை இனி தி.மு.க.வும் பெரி யளவில் தொடர வேண்டும் என் பதே திராவிட இயக்க படைப் பாளிகளின் எதிர்பார்ப்பு.
-ச.ப.மதிவாணன்