விசுவாசத்தைவிட முக்கியமானதாக இருக்கிறது சந்தர்ப்பம். தினகரனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளாô கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு.
மாவட்ட ஆளுங்கட்சியினர் இதுபற்றித்தான் விவாதிக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள். இதில் வடக்கு மா.செ.வாக மந்திரி சண்முகம் உள்ளார். இவரது மாவட்டத்தில் ஆறு தொகுதிகளும், தெற்கு மா.செ.வாக உள்ள உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. பிரபு தெற்கு மாவட்டத்தில் உள்ளார். இங்கு குமரகுரு, பிரபு இருவர் மட்டுமே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். வடக்கில் சண்முகம், சக்கரபாணி என இருவர் மட்டுமே.
எடப்பாடி முதல்வரான பிறகு குமரகுரு, குட்டி அரசராக வலம்வருக

எடப்பாடி முதல்வரான பிறகு குமரகுரு, குட்டி அரசராக வலம்வருகிறார். காரணம், முதல்வர் எடப்பாடி இவரது நெருங்கிய நண்பர். குமரகுரு மகன் நமச்சிவாயத்திற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் அளவிற்கு நெருக்கம். இதையே காரணம் காட்டி, "முதல்வர் நான் சொல்வதை மீறமாட்டார்' என்று கட்சி ஒ.செ.க்களையும், அதிகாரிகளையும் பணிய வைத்துள்ளார். அதிலும் எம்.எல்.ஏ. பிரபு தலித் என்பதால் குமரகுரு ஓரங்கட்டி வந்துள்ளார். அரசு விழாக்களுக்கு மந்திரிகள் வரும் தகவலைக்கூட தொகுதி எம்.எல்.ஏ.வான பிரபுவிற்கு தெரிவிப்பதில்லை. அதேபோல் திட்டப்பணிகள் மூலம் பலன்கள், சமீபத்தில் போடப்பட்ட அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர் நியமனம், கிராம ஊழியர் நியமனம் என அனைத்தும் குமரகுருவே முடிவு செய்தார். பிரபு சிபாரிசுகளை ஏற்பதே இல்லையாம். இது விஷயமாக ஜெ. மறைந்தபோது, சசிகலா தரப்பிடம் பஞ்சாயத்து நடந்துள்ளது.
எடப்பாடி முதல்வரான பிறகும் கூட அவரிடம் பிரபு பலமுறை முறையிட்டபோதும் பஞ்சாயத்து தொடர்ந்தது. "தனது நண்பருக்கு ஆதரவா செயல்பட்டதால், ஒரு எம்.எல்.ஏ.வை இழந்துள்ளார் எடப்பாடி' என்கிறார்கள் கட்சியின் ர.ர.க்கள்.
அணி மாறிய எம்.எல்.ஏ. பிரபுவிடம் கேட்டோம். ""மா.செ. குமரகுருவினால் பட்ட அவமானங்கள் ஏராளம். முதல்வரிடம் சொல்லியும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. கண்ணீரோடுதான் அண்ணன் தினகரனை சந்தித்தேன். தொகுதிக்கான திட்டப்பணிகளில் கூட தலையிட்டு முட்டுக்கட்டை போடுவது, மக்களோடு நான் நெருக்கமாக இருப்பதைக் கூட ஜீரணிக்க முடியாமல் எனக்கு எதிராக சதி செய்தது... வெளியே வர அதுமட்டுமல்ல காரணம்... கட்சியை வலிமையாக நடத்த அண்ணன் தினகரன்தான் தகுதியானவர், திறமையானவர். என் சொந்த விருப்பத்தின்பேரில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன்'' என்கிறார்.
ஏற்கனவே தினகரன் அணிக்கு மாறியவர் விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன். கூவத்தூர் விழா எல்லாம் முடிந்து 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த பிறகு தினகரனுடன் இணைந்து அவரது கட்சியின் கடலூர் கிழக்கு மா.செ.வாக உள்ளவர் கலைச்செல்வன். தினகரன் சமீபத்தில் விருத்தாசலம் வந்தபோது வரவேற்பு கொடுத்தார். ஆனால், சமீபகாலமாக ஒருவித அமைதிகாத்து வருகிறார். இவர் சார்பிலான பேனர்களில் ஜெ. படம் தவிர யார் படமும் இடம்பெறுவதில்லை. அதேநேரத்தில் கடந்தவாரம் தினகரன் பாண்டி வந்தபோது இவர் ரகசியமாக சென்று சந்தித்துள்ளார். பகிரங்கமாக தினகரனோடு இணைந்தவர் இப்போது பதுங்குகிறார். எனினும் இவரது ந.செ. பொறுப்பை எடப்பாடி தரப்பு பிடுங்கிவிட்டது.
இதுபற்றி கலைச்செல்வனிடமே கேட்டோம்...
""நான் எப்போதும் அம்மாவின் விசுவாசி. அவர் கொடுத்த பதவிகளை கட்சியின் பொதுச்செயலாளர்தான் மாற்ற முடியும்.''
"தினகரன் கட்சியின் மா.செ. பதவியில் ஏன் பகிரங்கமாக செயல்படவில்லை?' என்று கேட்டவுடன்... ""அதைப்பற்றி பேச வேண்டாம்'' என்று முடித்துக்கொண்டார்.
"18 எம்.எல்.ஏ.க்கள் போல தனது பதவிக்கு சிக்கல் வரக்கூடாது என்பதற்காக தினகரன் ஆலோசனையின்படியே கலைச்செல்வன் செயல்படுகிறார். இவரைப்போல பல எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் உள்ளனர்' என்கிறார்கள் மாவட்ட ர.ர.க்கள்.
பதவிக்குப் பாதிப்பின்றி அணிகளைத் தேர்வு செய்யும் வேளையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக உள்ளனர்.
-எஸ்.பி.சேகர்
படங்கள்: ஸ்டாலின்