ருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கூட மக்களை முடநீக்கியல் மருத்துவத்திற்கு ஆயத்தப்படுத்தாமல் முடக்கியே வைத்திருக்கிறது மதம். அதனை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உணரவைத்தார்கள் பெரியாரும் அம்பேத்கரும்.

Advertisment

book

"விவாதம் -வாக்குவாதம்' ஆகிய இரு மேதைகளின் சிந்தனைப் பொறிகளை "பெரியார் -அம்பேத்கர் இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள்' எனும் பெயரில் தந்திருக்கிறார் ஆசிரியர் கா.கருமலையப்பன்.

நூலிலிருந்து...

"திருவிழா ஏன்?'

பண்டிகை, நல்லநாள், கெட்டநாள் கொண்டாடப்படுவது எதற்காக? "மதத்தால், புராணத்தால் புகுத்தப்பட்டது சாதி. அத்தகைய சாதியை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு கொண்டுவருவதற்காக -தனித்தனியே பிரசங்கம் வைப்பதற்குப் பதிலாக பிரச்சாரம் மூலம் செய்வதற்காகவே திருவிழாக்கள் கொண்டாப்படுகின்றன.'

Advertisment

சுருங்கச் சொன்னால், சாதியை மனனம் செய்யச் சொல்லும் ஒரு நினைவூட்டல் கடிதம்தான் திருவிழா. இதன் நோக்கம் புரியாமல் முதலில் ஓடும் குரும்ப ஆட்டைத் தொடர்ந்து அதன் மந்தைகளாய் ஓடுகிற நமது சவலைப்புத்திக்கு பகுத்தறிவால் "பொளேர்' வைக்கிறார் தந்தை பெரியார்.

இந்துமதத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவுவதற்கு வாய்ப்பில்லை. அன்றாட வாழ்வில் இந்துக்கள் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. பிராமணர்கள், மராத்தியர்கள், பாடியாக்கள் ஆகிய அனைவருமே இந்துக்கள்தான். ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி உணவு விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளன. பிறப்பு -இறப்புகளிலும் கை நனைப்பதில்லை. அறக்கட்டளைகளும் சாதி வட்டத்துக்குள்தான் வருகின்றன. எல்லா சாதிக்கும் உரிய பொது அமைப்பு கிடையாது என ஒற்றுமை இல்லாத இந்து மதத்தின் மீது "வருத்தம்' கொப்பளிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

பக்கந்தோறும் சமுதாய மீட்சிக்கான கட்டுரைகளே அரசாட்சி செய்கின்றன.

மூன்று தொகுதிகள்: விலை: ரூ.1,250

சுயமரியாதை பதிப்பகம்,

அம்மன் காம்ப்ளக்ஸ் முதல் தளம்,

யாழ் தையலகம் எதிரில், வ.உ.சி. வீதி,

உடுமலைப்பேட்டை, திருப்பூர்.

செல் : 97883 24474

-சேரன்குலத்தான்