பிரஸ் ரிலீஸ்தான் செய்தியாக வரும் என்ற வழக்கத்தை மாற்றிக் காண்பித்த ஆளுமை நக்கீரன். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மக்களின் பணத்தை எப்படியெல்லாம் சுரண்டி ஊழல் செய் கிறார்கள் என்பதை நக்கீரன் படித்தாலே தெரிந்துவிடும். ஜெயலலிதா என்கிற மிகப்பெரிய அரசியல்வாதியின் அடக்கு முறையாளரின் அத் தனை ஊழல்களையும் உலகுக்கு அறியவைத்த பெருமை நக்கீரனையே சாரும்.
போயஸ்கார்டன் மர்மங்களிலிருந்து கொடநாடு மர்மம்வரை ஒன்று விடாமல் நக்கீரன் உள்ளே நுழைந்து வெளிக் கொண்டுவரவில்லை என்றால், ஜெயலலிதா ஓர் அன்னை தெரசாவாக எதிர்கால இளையதலை முறைக்கு காண்பிக்கப்பட்டிருப்பார். அதேபோல், ஜெ. மரணத்திலும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததும் நக்கீரன்தான்.
தனியார் மருத்துவமனைகளின் துணையோடு பல மருத்துவ முகாம்களை நடத்தி கண்சிகிச்சை உதவிகளை நான் செய்துவருகிறேன். அரசியல் பார்வை மங்கியவர்களின் கண்களுக்கு சிகிச்சை அளித்து வாழ்க்கையை பிரகாசிக்க வைத்து அறிவுக்கண்களை திறந்து விழிப்புணர்வூட்டி வருகிறது நக்கீரன்.
2018, மார்ச் 15-17 இதழ்:
தமிழர்கள் விடுதலைக்காக ராகுல்காந்தி சிக்னல் ஆறுதல் அளிக்கக்கூடிய தகவல் என்றாலும் அதற்குள் பா.ஜ.க.-காங்கிரஸ் கட்சிகளின் அரசியலை தெளிவுபடுத்தியிருக்கிறது அட்டைப்படக் கட்டுரை. டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் எழுதிய "அதானியின் சுரங்க ரகசியம்' கட்டுரையில் தோண்ட தோண்ட பூதம். "லேபர் வயாக்ரா!' இப்படியொரு வார்த்தையே புதுமையாக இருக்கிறது. உழைக்கும் மக்களின் வறுமையைப் போக்காமல் ஊக்கமருந்து கொடுத்து உழைப்பைச் சுரண்டலாம் என நினைக்கும் பெருமுதலாளிகளின் சதியை நீதிமன்றம்வரை சென்று முறியடித்த நக்கீரனுக்கு பாராட்டுகள்.
வாசகர் கடிதங்கள்!
ஊழலுக்கு அடித்தளம்?
சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில், தனது மரணத்தினால் தண்டனையிலிருந்து தப்பியவர் ஜெ. அவரது நினைவுமண்டபம் கட்டுவதில் எடப்பாடியும் பன்னீரும் இப்பவே ஊழலுக்கு அடித்தளம் போடுறாங்களா? பலி ஆடு இன்ஜினியரா?
-து.ஆறுமுகம், பாபநாசம்.
அரசியலா? ஆன்மிகமா?
அரசியலில் ஒரு கால், ஆன்மிகத்தில் ஒரு கால் என அல்லாடுகிறார் ரஜினி. ஆன்மிகம் மனதை ஒருமுகப்படுத்தும் என்பது, சீண்டும் கமல் விஷயத்தில் மட்டும்தான் போலும். காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்றபடி மலை இறங்கும் நாள் விரைவில் வரவேண்டும்.
-பொ.சேகர், அரியலூர்.