Advertisment

பார்வை!-ஜெயச்சந்திர ஹாஷ்மி குறும்பட இயக்குநர்

parvai

parvai

Advertisment

க்கீரன் இதழுடனான எனது பரிச்சயம் பள்ளிக் காலங்களிலிருந்து ஆரம்பித்தது. சில சென்சிடிவ்வான பிரச்சினைகளை நக்கீரன் கையாண்ட விதம், அதிகார வர்க்கத்தின் தொடர் எதிர்ப்புகளைத் தாண்டியும் உறுதியாக நின்றவிதம், ஒரு செய்தியின் உண்மைத்தன்மைக்காக ஆபத்துகளின் மேல் பயணிக்கும் விதம் என நக்கீரனைப் பிடிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

நக்கீரன்கோபால் அவர்களின் மகள் திருமதி. பிரபாவதி தீபன்சக்கரவர்த்தி, நக்கீரன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி எடுத்த ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் மிக நெருக்கமாக பங

parvai

Advertisment

க்கீரன் இதழுடனான எனது பரிச்சயம் பள்ளிக் காலங்களிலிருந்து ஆரம்பித்தது. சில சென்சிடிவ்வான பிரச்சினைகளை நக்கீரன் கையாண்ட விதம், அதிகார வர்க்கத்தின் தொடர் எதிர்ப்புகளைத் தாண்டியும் உறுதியாக நின்றவிதம், ஒரு செய்தியின் உண்மைத்தன்மைக்காக ஆபத்துகளின் மேல் பயணிக்கும் விதம் என நக்கீரனைப் பிடிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

நக்கீரன்கோபால் அவர்களின் மகள் திருமதி. பிரபாவதி தீபன்சக்கரவர்த்தி, நக்கீரன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி எடுத்த ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் மிக நெருக்கமாக பங்கெடுத்தேன். நக்கீரன் துவங்கப்பட்ட விதம், வீரப்பன் சம்பந்தப்பட்ட செய்திகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் நக்கீரனுக்கு ஏற்பட்ட உரசல், அதன் தொடர்ச்சியாக நக்கீரன்மேல் ஏவப்பட்ட வன்முறைகள், அதை தைரியமாக, சமயோசிதமாக நக்கீரன் அணுகியவிதம், மிகமுக்கியமாக, நக்கீரன் ஆசிரியர் சிறைக்கு அனுப்பப்பட்ட போதும், கட்டுக்கோப்பான அந்த பத்திரிகை அணி நக்கீரனை தொடர்ந்து வெளிவரச் செய்தது போன்ற பல விஷயங்களை பல்வேறு கோப்புகளின் மூலமும், பலரின் பேச்சுகளின் மூலமும் அறிந்துகொள்ள முடிந்தது. நக்கீரன் மேலிருந்த அபிமானம் இன்னும் அதிகமானது அந்த சமயங்களில்தான்.

2018, மார்ச் 30-ஏப்.01 இதழ்:

துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சினை, மக்கள் அதிகாரத்தின் போராட்டம், விவசாயிகள் பிரச்சினை என்று அத்தனை செய்திகளிலும் நக்கீரன் பாதிக்கப்பட்டோரின் குரலாகவே இருக்கிறது. அடுத்து, ‘பரோலுக்கு ஜெயிலே தேவலை’ என்று சொந்தங்களின் தொந்தரவால் சசிகலா நொந்து போயிருக்கிறார் என்ற செய்தியை படித்துக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தில், சசிகலா பரோல் முடிவதற்கு முன்பே சிறைக்கு புறப்பட்டார் என தொலைக்காட்சிகள் செய்தி வாசிக்கின்றன. நக்கீரனின் நுணுக்கமான செய்தி சேகரிப்பை நிரூபிக்க இதுவே ஒற்றைச் சோற்றின் பதம்.

வாசகர் கடிதங்கள்!

விசாரிக்கவில்லை!

Advertisment

நக்கீரன் 2018 மார்ச் 30-ஏப்.1 இதழ், ராங்-கால் பகுதியில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முறைகேடு பற்றிய புகார் அடிப்படையில், மாநிலக் கல்லூரி முதல்வர் த.பிரம்மானந்தப் பெருமாளின் மகளும், இ-கவர்னன்ஸில் துணை கலெக்டராக இருப்பவருமான ஃபெர்மி வித்யாவிடம் மத்திய குற்றப்பிரிவு டீம் விசாரணையை தொடங்கியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்பதையும், வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு மாறானது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

-முனைவர் த.பிரம்மானந்தப் பெருமாள், முதல்வர், மாநிலக் கல்லூரி (தன்னாட்சி),சென்னை-600 005.

காவிரி நாடகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோர்ட் கால அவகாசம் கொடுத்தும், மத்திய அரசுக்கு எதிராக எம்.பி.க்கள் ராஜினாமா, அழுத்தமான போராட்டம் என பருவத்தே பயிர் செய்யாமல் விட்டுவிட்டார்கள். இப்போது தற்கொலை, அவமதிப்பு வழக்கு, ராஜினாமா என்றெல்லாம் ஓரங்க நாடகம் போட்டு... விவசாயிகளை, சோளக்கொல்லை பொம்மைகளாக்கப் பார்க்கிறது நமது அரசாங்கம்.

-பா.சிவராமன், மேட்டூர்.

Parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe