Advertisment
parvai

parvai

ல்லூரிப் பருவங்களிலேயே நக்கீரன் எனக்கு பரிச்சயம். அப்போது, சோஷியல் மீடியா கிடையாது. நக்கீரனில்தான் மாறுபட்ட உண்மைகளை தெரிந்துகொள்ள முடியும். அந்த காலகட்டத்தில் நக்கீரனில் எனக்கு பிடித்தது என்றால்...… அதிகாரத்திற்கு எதிராக ஒரு குரல் இந்த சமூகத்தில் ஒலிப்பது மிகவும் சிரமமான விஷயம். குறிப்பாக, ஒடுக்கப்பட்டோருக்கு அவர்களுடைய குரலாக ஒலிக்கும் தளத்தை உருவாக்கியது நக்கீரன். இதனுடைய தாக்கத்தின் காரணமாகவும் நண்பர்களாக சேர்ந்து "குரல்'’என்கிற அமைப்பை ஆரம்பித்தோம். யாரை அழைத்த

parvai

ல்லூரிப் பருவங்களிலேயே நக்கீரன் எனக்கு பரிச்சயம். அப்போது, சோஷியல் மீடியா கிடையாது. நக்கீரனில்தான் மாறுபட்ட உண்மைகளை தெரிந்துகொள்ள முடியும். அந்த காலகட்டத்தில் நக்கீரனில் எனக்கு பிடித்தது என்றால்...… அதிகாரத்திற்கு எதிராக ஒரு குரல் இந்த சமூகத்தில் ஒலிப்பது மிகவும் சிரமமான விஷயம். குறிப்பாக, ஒடுக்கப்பட்டோருக்கு அவர்களுடைய குரலாக ஒலிக்கும் தளத்தை உருவாக்கியது நக்கீரன். இதனுடைய தாக்கத்தின் காரணமாகவும் நண்பர்களாக சேர்ந்து "குரல்'’என்கிற அமைப்பை ஆரம்பித்தோம். யாரை அழைத்து ஆரம்பிக்கலாம் என்றபோது எங்களுக்கு தோன்றியது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களைத்தான். அழைத்ததுமே வந்து தொடங்கிவைத்தார். எவ்வளவு இடர் வந்தாலும் எக்காலத்திலும் நின்றதில்லை நக்கீரன். வாரம் ஒன்றாக வந்த நக்கீரன், வாரம் இரண்டாகி, தற்போது மூன்று நாட்களுக்கு ஒன்று என வருவது சாதாரணமானதல்ல. நானும் பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறேன்.

Advertisment

நான் வேறுபடுவது ஒரு விஷயத்தில்தான். சிலநேரங்களில் பரபரப்புக்காக நக்கீரனில் பெண்களை அணுகும் முறையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

Advertisment

2018, மார்ச் 24-26 இதழ்:

ரொம்ப தெள்ளத் தெளிவா நித்தியானந்தாவுக்கு எதிராகவும் சிறையில் உள்ள சசிகலா தினகரனைப் பார்த்து "நீ ரொம்ப திமிர் பிடிச்சவனா நடந்துக்கிற' என்றெல்லாம் எழுதியிருப்பதை படிக்கும்போது இதையெல்லாம் எந்தளவுக்கு நுட்பமாக செய்தி சேகரித்திருப்பார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆக்டோபஸ் கரங்கள்போல எல்லா அரசியல் தளங்களிலும் ட்ராவல் ஆனால்தான் இப்படித் தெளிவாகச் சொல்லமுடியும்.

தாமிரபரணி கலவரத்திற்குப் பிறகு திருநெல்வேலியில் பெரும்பான்மை சாதியினர் அதிகமாக பணியில் இருக்கக்கூடாது என்ற அறிவிப்பு வந்ததாக ஞாபகம். ஆனால், இன்றுவரை பெரும்பான்மை சாதியினர் அதிகமாக பணியில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதை நினைவுபடுத்தியது காவல்துறையில் சாதி செய்தி. வலைவீச்சு பகுதியில் தமிழிசையின் மீம்ஸ் உள்ளிட்ட மீம்ஸ்களை படித்து மனம் விட்டு சிரித்தேன். நக்கீரன் முழுக்க மதவாதத்திற்கு எதிரான கட்டுரைகளை பார்க்கமுடிகிறது.

வாசகர் கடிதங்கள்!

வெறும் பேச்சு!

சமூகத்தின் மூடத்தன தொல்லைகளை கழித்துக்கட்ட தடிபோட்டு நடந்தவர் தந்தை பெரியார். ஆட்சிக்கும் கட்சிக்கும் பேச்சு வீச்சுக்கும் அவரைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவருடைய சிலை பாதுகாப்புக்கு இந்த அரசாங்கத்திடம் உத்தரவாதம் இல்லை.

-கோ.சிவராமன், ஆத்தூர்.

துதி பாடலாமா?

சூலக்கல் மாரியம்மன் கோயிலில் பிராமணர்களை நியமித்து, சமஸ்கிருதத்தைப் போற்றிப் பாட நினைக்கிறார் துணை சபா. அனைவரும் அர்ச்சகராகலாம்னு ஒரு மாற்றுச் சமூகத்தினரை குருக்களாக்கியிருந்தால் அவர் பலே ஜெயராமன்தான். அதைவிடுத்து தன் உறவினரை தலைவராக்கி ஆரியத்துக்கு துதி பாடலாமா?

-சிவா.மணிவேல், திருப்பத்தூர்.

Parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe