parvai

ண்மையை உரக்கச் சொன்னது, தனது புலனாய்வுச் செய்திகள் மூலம் கோடிக்கணக்கான இதயங்களை படபடக்கச் செய்தது... இரக்கமற்ற அரசியல், அதிகாரிகளின் லஞ்சவேட்டையை துணிவோடு தோலுரித்தது....

Advertisment

உழைப்பாளிகளின் கோரிக்கைகளை, கஷ்டங்களை அதிகார வர்க்கத்திற்கு கொண்டுபோய் சேர்த்து தீர்வுகண்ட... இப்படி நக்கீரனின் பணி கால்நூற்றாண்டைக் கடந்து வெற்றிநடை போடும் பயணத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஊடகத்துறையின் சிம்மக்குரலாக எழுத்துமூலம் கர்ஜித்துவரும் நக்கீரனின் பணி அளப்பரியது.

Advertisment

2018, மார்ச் 21-23 இதழ்:

"இலையை முடக்கும் டெல்லி' என்ற செய்தி மூலம்... டெல்லி அரசியலின் சதுரங்க விளையாட்டு மூலம்... தமிழக திராவிட அரசியலை சிதறடிக்க நடத்திவரும் திரைமறைவு வேலைகளை அம்பலப்படுத்தியுள்ளது கட்டுரை. இதை திராவிட கட்சிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா?

"மோடியின் காலில் விழும் அ.தி.மு.க.' என்ற நாஞ்சில் சம்பத்தின் பேட்டி, சம்பத் தி.மு.க. -ம.தி.மு.க. -அ.தி.மு.க. -தினகரன் அணி -இப்போது தி.மு.க.விற்குத் தாவ தயாராக உள்ளதுபோல் தெரிகிறது. பேட்டி மூலம், மேலும் ஜெ. காலில் விழுந்து இன்னோவா கார் வாங்கிய கதைகளால் காமெடிப்பீஸான நாஞ்சிலாரின் பேட்டியும் காமெடியாகத் தெரிகிறது.

Advertisment

"கரன்சி மாற்றம் கடத்தல் கும்பல்' திருச்சி போலீசும் உங்கள் நிருபரும் களப்பணி மூலம் அந்தக் கும்பலை மடக்கிய செய்தி... புலனாய்வுச் செய்தியில் நக்கீரனை மிஞ்ச ஆளில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

"சித்த மருந்தில் சித்து விளையாட்டு', சித்தமருத்துவம் சித்தர்கள் காட்டிய வழி. 100 வயது கடந்தும் உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம். இன்றையகால மனித வாழ்க்கைக்கு மிகமிக அவசியமான விழிப்புணர்வுக் கட்டுரை இது.

"வெளிச்சத்தில் இருட்டான பார்வை' ஏர்வாடி பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமையைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது.

சசிகலா கணவர் நடராஜன் "எம்.என்., உயிர் போராட்டம்' செய்தி மூலம் ஜெ. மரணம்போல, லைவ்வாகச் சொல்லியது எம்.என். மரணச் செய்தியை.

வாசகர் கடிதங்கள்!

நெட்டிசன் - பெட்டிசன்!

நீரின் குணமே ஆவியாதல் என்பதுதான். அதற்கு வடிகால் ஏற்படுத்தித் தராத "விஞ்ஞானி' தெர்மாக்கோல் ராஜு, "வாய்க்கால்' அட்வைஸ் பண்ணப்போக... வழக்கம்போல செல்லூராருக்கு எதிராக நெட்டிசன்ஸ் "கமெண்ட்' பெட்டிசன் போட்டு கலாய்ச்சிட்டாங்க.

-ஆர்.கே.குமரன், சிவகாசி.

வரலாறு முக்கியம்!

"ஆதி திராவிடர்கள் யார்?' விளக்கம் சொல்லி தெளிவுபடுத்துகிற திராவிடஇயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, "அரசியல்வாதிகளுக்கு வரலாற்றுத் தெளிவு முக்கியம்' என்பதை தமிழ் இனத்தின் மீதான அக்கறையோடு "அட்மின்' எச்.ராஜாவுக்கும் சேர்த்தே பதிலடி தந்திருக்கிறார்.

-வ.கார்முகிலன், தஞ்சாவூர்.