Advertisment
ravichandran

parvai

Advertisment

நான் எடுத்த புகைப்படங்கள் உலா வந்துகொண்டிருந்த நக்கீரனில் இன்று என் எழுத்தும் "பார்வை'யாக அரங்கேறுகிறது.

நக்கீரன் முதல் இதழின் அட்டைப்படம் நான் எடுத்த படம் (ஜெ.படம்)தான். அது மட்டுமல்ல, நான் எடுத்த எத்தனையோ படங்கள் நக்கீரனின் அட்டைகளிலும் கவர் ஸ்டோரிகளிலும் ரத்தமும் சதையுமாக, அழகியல்சூடிய கவிதையாய் வந்துள்ளன. ஆசிரியர் எனக்கு போன் செய்வார். ஒரு நிகழ்வைச் சொல்லி, செய்தியாகிறது என்பார். அதற்குரிய படங்களைக் கொடுப்பேன். கலைஞர் தரையில் அமர

parvai

Advertisment

நான் எடுத்த புகைப்படங்கள் உலா வந்துகொண்டிருந்த நக்கீரனில் இன்று என் எழுத்தும் "பார்வை'யாக அரங்கேறுகிறது.

நக்கீரன் முதல் இதழின் அட்டைப்படம் நான் எடுத்த படம் (ஜெ.படம்)தான். அது மட்டுமல்ல, நான் எடுத்த எத்தனையோ படங்கள் நக்கீரனின் அட்டைகளிலும் கவர் ஸ்டோரிகளிலும் ரத்தமும் சதையுமாக, அழகியல்சூடிய கவிதையாய் வந்துள்ளன. ஆசிரியர் எனக்கு போன் செய்வார். ஒரு நிகழ்வைச் சொல்லி, செய்தியாகிறது என்பார். அதற்குரிய படங்களைக் கொடுப்பேன். கலைஞர் தரையில் அமர்ந்திருந்த, அவர் லுங்கி அணிந்திருந்த நக்கீரன் படங்கள்.... நான் எடுத்தவைகளே! நக்கீரனால் எனக்குப் பெயரும் புகழும் வணிக முன்னேற்றமும் வந்தன. நான் நக்கீரனில் மாதாமாதம் ஊதியம் பெறுகின்ற ஊழியன் அல்ல. ஆனால் நக்கீரன் குடும்பத்தின் உறுப்பினன் என்று கம்பீரமாய் கூறிக்கொள்ளும் உரிமை பெற்றவன்.

முப்பது ஆண்டுகால தமிழக அரசியல் மாற்றங்கள், ஆட்டோ சங்கர், சந்தன வீரப்பன், பிரேமானந்தா என நக்கீரன் பதித்த தடங்கள் இதழியல் புரட்சியின் மணிமுடிகள்.

Advertisment

ஏதோ, இன்றுதான் நக்கீரனைத் தொடங்கியிருப்பதுபோல ஒவ்வொரு இதழையும் பார்த்துப் பார்த்து அணு அணுவாய் ரசித்து ரசித்து உருவாக்கும் நக்கீரன்கோபால் அண்ணனின் அக்கறை, பின்பற்றுதலுக்கு உரிய ஒன்று.

2018, மார்ச் 12-14 இதழ்:

காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரின் மனம் திறந்த பேட்டி அனுபவமும் முதிர்ச்சியும் நிறைந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். பெயரையும் அவர் செய்த உதவியையும் ரஜினி சொல்லியிருப்பது சுயதேவைக்கான, எம்.ஜி.ஆரின் வாக்குவங்கியைக் குறிவைத்தே என்பதை எவரும் அறிவர்.

சிக்கலில் சிக்கிக்கொள்வோம் என்று மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ளும் செய்தியை, நக்கீரன் மட்டுமே துணிவோடு எதிர்கொள்கிறது. இதற்கு உதாரணம்... ""விசாரணைக் கமிஷனைத் திசை திருப்பும்...'' சான்றாதாரப் படங்களோடு வந்திருக்கும் நான்குபக்கச் செய்தி, ""மக்களே நீங்க நல்லா பாருங்க... இந்தப் போட்டோவுல காலு எங்க இருக்கு?'' சபாஷ் நக்கீரா!

முன்அட்டையிலிருந்து பின்அட்டைவரை படித்துவிட்டே வழக்கம்போல நக்கீரனை கீழே வைத்தேன்.

வாசகர் கடிதங்கள்!

கருகும் ரத்தம்!

சிரியாவில் சிறுபான்மைக்கு எதிரான தீவிரவாதம் ஒட்டுமொத்த பூகோளத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டது. பிஞ்சுக் குழந்தைகளின் உயிரும் தயவின்றி வேரறுக்கப்பட்டுள்ளது என்கிறபோது, நெஞ்சுக்குழியின் ரத்தம் சடுதியில் கருகித்தான் போனது.

-சு.விக்கிநேத்ரா, அறந்தாங்கி

பார்வையின் உரைகல்!

பெரியார் சிலை, பெண்களுக்கு சுதந்திரம், காதல் இலக்கணம் புரிந்துகொள்ளப்படாமை, போக்குவரத்துக் காவலரின் ஒழுங்கீனம் என சமூகச்சீர்கேடுகளை தனது பன்முகப் பார்வைக்கு உரைகல்லாக்குகிறார் நடிகை கஸ்தூரி!

-ஆ.பூபாலன், புதுக்கோட்டை

Parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe