/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/paravai.jpg)
நெஞ்சுரமும், மகாசக்தியும் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் திராணியும், நேர்மையுடன் கூடிய துணிவும் கொண்டது நக்கீரன்.
ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும் என்றிராமல், விடியவேண்டும் என்ற வேகத்தோடு ஊதப்படும் சங்கு நக்கீரன்.
மக்கள் மன்றம் மட்டுமின்றி நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்ளும் ஆதாரங்கள், ஆவணங்கள் நக்கீரனின் பக்கங்கள். கிராமத்து வழியில் சொல்லவேண்டுமெனில் "உடும்புப் பிடி' உறுதிச் செய்திகள்.
அணிலும் மண் சுமக்கும் என்பதுபோல, நக்கீரன் படையில் நானும் ஒருவன்.
2018, மார்ச் 9-11 இதழ்:
இதழ் முழுக்க நேர்முக வர்ணனை போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
விருப்பு வெறுப்பின்றி ரஜினியையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்து, தக்கது தகவலிது காட்டியிருப்பது நக்கீரனின் நடுநிலைக்குச் சான்று.
நாட்டுநடப்பை அலசும் தோழர் முத்தரசனின் பேட்டி அருமை.
"இதுதான் போலீஸ் நிலைமை! வீடியோவில் சிக்கிய சபலிஸ்ட் காக்கி!', ஃபாதர் செய்யும் காரியமா? செய்திகள் நக்கீரனின் துணிவுக்கு சாட்சி.
"மலைகள் படும் பாடு' அரசு மற்றும் மக்களின் கடமையை வலியுறுத்தும் செய்தி.
புதுவரவு அரசியல்வாதிகளின் இரண்டு பக்கங்களையும் காட்டியிருப்பது சிறப்பாக உள்ளது.
வாசகர் கடிதங்கள்!
பழிபோட "அட்மின்'!
சர்ச்சைகளை முன்னிலைப்படுத்தி அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் எச்.ராஜா... இப்ப தந்தை பெரியாரை கோளாறு பேசி செருப்பு மாலை போட்டுக்கொண்டிருக்கிறார். அமித்ஷாவால் கண்டிக்கப்பட்ட ராஜா, தன் அட்மினை பலியாக்குகிறார். ஹலோ மிஸ்டர் எச்., எங்களுக்கும் இப்படி பழிபோடத் தெரியும்.
-சி.ராமசாமி, தஞ்சாவூர்.
விஷுவலான ரகசியம்!
சிதம்பர ரகசியம் இந்திராணி-பீட்டர் முகர்ஜி மூலமா விஷுவலாகியிருக்கிறது. மத்திய அரசு தன் இலக்கை அடைந்ததும் கார்த்திசிதம்பரம் கூலா வெளியே வருவாரா அல்லது அமலாக்கத்துறை மாதிரி வேறு துறைகளால் சிக்க வைக்க முயற்சிக்கப்படுவாரா? எல்லாம் தந்தை-மகன் ஒத்துழைப்பில் அடங்கியிருக்கிறது.
-து.விவேகானந்தன், காங்கேயம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-14/parvai-n.jpg)