parvai

parvai

சமூக அக்கறையோடு நடுநிலையாகச் செயல்படும் இதழ் நக்கீரன் என்றால் அது மிகையல்ல. துவக்க காலத்தில் ஒரு சாராருக்கு சார்பான இதழ் என என் பார்வைக்குத் தோன்றிய நக்கீரன், தொடர்வாசிப்பால் நாளடைவில் எனது தவறான கணிப்பை தவிடுபொடியாக்கியது.

தமிழகத்தில் நடந்தேறிய விரும்பத்தகாத நிகழ்வுகளின் பின்னணிகளையும் ஆராய்ந்து ஆதி முதல் அந்தம்வரை உலகுக்கு வெளிக்கொணர்ந்த செயல், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் தாரக மந்திரத்திற்கேற்ப செய

parvai

சமூக அக்கறையோடு நடுநிலையாகச் செயல்படும் இதழ் நக்கீரன் என்றால் அது மிகையல்ல. துவக்க காலத்தில் ஒரு சாராருக்கு சார்பான இதழ் என என் பார்வைக்குத் தோன்றிய நக்கீரன், தொடர்வாசிப்பால் நாளடைவில் எனது தவறான கணிப்பை தவிடுபொடியாக்கியது.

தமிழகத்தில் நடந்தேறிய விரும்பத்தகாத நிகழ்வுகளின் பின்னணிகளையும் ஆராய்ந்து ஆதி முதல் அந்தம்வரை உலகுக்கு வெளிக்கொணர்ந்த செயல், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் தாரக மந்திரத்திற்கேற்ப செயல்படும் துணிவு என்னுள் பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள்வரை அனைவரின் தவறுகளையும் துல்லியமாகவும், திடமாகவும் எடுத்துக்கூறும் கட்டுரைகள். அக்கட்டுரைகள் வாயிலாக உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும் ஆசிரியர் மற்றும் சக நிர்வாகிகள், குறிப்பாக நிருபர்கள் பணி போற்றத்தக்கது.

2018, மார்ச் 06-08 இதழ் :

காவி மடமாக இருந்தாலும் காஞ்சி பெரியவரின் மறைவுக்குப் பிறகு சங்கரமடம் பி.ஜே.பி.யின் கூடாரமாக மாறும் செய்தி, திராவிட கட்சிகளுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தமிழக முதல்வர், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் அதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தையும் தொலைநோக்கு பார்வையோடு செயல்படுத்துகிறார். காரணம், ஆட்சி போனாலும் அட்சயபாத்திரம் தன்னிடமே இருக்கவேண்டும் என்ற அவரது எண்ணமே சொந்தங்கள் கொள்ளையடிக்க எடப்பாடி போட்ட புது ரோடு.

சிங்கமாக திரிந்து சிம்மசொப்பனமாக சீறும் சிதம்பரத்தை சீண்டி, கூண்டுக்குள் அடைக்க துணியும் பி.ஜே.பி. -முடியுமா? கைக்கொடுக்குமா டீலிங் டாக்குமெண்ட். பொறுத்திருந்து பார்ப்போம்.

வாசகர் கடிதங்கள்!

ஓ.பி.எஸ்.ஸின் சிரஞ்சீவிகள்!

நம்ம முதல்வரை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் துஷ்பிரயோக நட்புக்குள் வைத்திருப்பதைப்போல, எஸ்.பி.யை டி.எஸ்.பி.க்களே மிரட்டுகிறார்கள். இதெல்லாம் காசு, பணம் பார்க்க ஓ.பி.எஸ்.ஸின் கீழ் தானா சேர்ந்த கூட்டம். காது குடைந்துகொண்டிருக்கும் எடப்பாடி இதை தட்டிக்கேட்க வேண்டாமா? இந்தச் சட்டம்-ஒழுங்கு சிரஞ்சீவிகளுக்கு எதிராக மக்கள் மனு போட்டு என்னதான் செய்துவிட முடியும்?

-பெ.ஆறுமுகம், விழுப்புரம்.

மீண்டும் திலகர்!

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் ஓய்வுக்குப் பிறகும் அதிகாரத்தைப் புதுப்பிக்கப் பார்க்கிறார். அதன் தொடக்க நிலைதான் மீண்டும் துணைவேந்தராகும் முயற்சி. அவரிடம் ஆதாயம் அடைந்திருப்பார்கள்... இல்லையென்றால் முக்கிய கோப்புகளை அவர் எடுத்துச் செல்லும்போது சும்மா இருந்திருப்பார்களா?

-வ.சு.நந்தகுமார், வாழப்பாடி.

இதையும் படியுங்கள்
Subscribe