Advertisment

பார்வை!-ந.அசாருதீன்

asur

parvai

Advertisment

புலனாய்வு இதழ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென கட்டமைப்பை வரைமுறைப் படுத்தியது நக்கீரன் இதழே..! இதழின் ஒவ்வொரு பதிப்பும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சாமானியனின் குரலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்களையும், முறைகேடுகளையும் நெஞ்சுரத்துடன் வெளிப்படுத்திவரும் நக்கீரனின் போர்க்குணம் போற்றுதலுக்குரியது.

அதிகாரிகள், ஆட்சியாளர்கள் செய்யும் முறைகேட

parvai

Advertisment

புலனாய்வு இதழ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென கட்டமைப்பை வரைமுறைப் படுத்தியது நக்கீரன் இதழே..! இதழின் ஒவ்வொரு பதிப்பும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சாமானியனின் குரலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்களையும், முறைகேடுகளையும் நெஞ்சுரத்துடன் வெளிப்படுத்திவரும் நக்கீரனின் போர்க்குணம் போற்றுதலுக்குரியது.

அதிகாரிகள், ஆட்சியாளர்கள் செய்யும் முறைகேடுகளை, ஊழல்களை உளவுத்துறையைவிட துல்லியமாக மக்களுக்கு வெளிப்படுத்தியது நக்கீரனே.! உளவுத்துறையே நக்கீரனிடம்தான் ஒற்று அறிதலைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தளவிற்கு நக்கீரனின் புலனாய்வுக் கட்டுரைகள் ஆச்சரியப்படுத்துபவை. எத்தனை வழக்குகள் வந்தாலும், எவ்வித இன்னல்களுக்கும் அடிபணியாமல் அதிகாரத் திமிரை அடக்கும் நேர்மை, ஆசிரியர் திரு.நக்கீரன்கோபால் அவர்களையே சேரும்.

மோடியின் தயாரிப்பில், கவர்னரின் இயக்கத்தில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஓரங்க நாடக நடிப்பில், இன்று மக்களின் மனம் நோகும்படியாக அரங்கேறிக்கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியை மக்களுக்கு இந்தளவிற்கு துல்லியமாகக் கூறியது நக்கீரனை விட்டால் வேறு யாருமில்லை. அதுவும் மற்ற பத்திரிகையில் வெளி வருவதற்கு முன்கூட்டியே வெளிக்கொணரும் பாங்கு சிறப்பே!

2018, ஏப்ரல் 5-7 இதழ்:

Advertisment

"இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். நாடகம்! கோபத்தில் மோடி!' கவர்னர் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை நடத்தும் மோடியின் கோபமும் வேகமும் அதிகரித்துள்ளது என்ற இச்செய்தி மூலம் தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் சூழ இருக்கும் மிகப்பெரிய மதவாத பயங்கரத்தை நக்கீரன் முன்கூட்டியே நமக்கு எச்சரிப்பதாகவே பார்க்கிறேன்.

வாசகர் கடிதங்கள்!

கோடாலிகளுக்கு லைசென்ஸ்!

"மரங்கள் மண்ணின் உயிரானால்

-அதன் வேர்கள் மழையின் முகிலாகும்'

என்கிற இயற்கையின் இலக்கணத்தை கார்ப்பரேட் பூதங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாது. ஏனெனில், வனத்தை தூர்வாருவதைத்தான், "பசுமை வழிச்சாலை திட்டம்' என அர்த்தம் கற்பித்துக் கொண்டு மத்திய-மாநில அரசுகள் ஜிண்டால் கோடாலிகளுக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளனவே!

-சு.மா.வடிவுக்கரசி, ஒரத்தநாடு.

ராஜ்ஜியம்-பூஜ்ஜியம்!

தலைமைக் காவலர் வாட்ஸ்-ஆப் வீடியோவில் மதுக்கிண்ணத்தோடு மெய்மறந்து நடத்துகிறார் காக்கி ராஜ்ஜியம். என்னத்த சொல்ல? போட்டாச்சு போட்டாச்சு தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்குக்கு பெரிய பூஜ்யம்.

-ஆர்.சிவா, அறந்தாங்கி.

Parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe