Advertisment

பார்வை!-முகில் தினகரன்

mukildinakaran

parvai

"நக்கீரன்... விழுந்து கிடக்கும் சமுதாயத்தைத் தட்டியெழுப்பும் வேலையை மட்டும் செய்யவில்லை... எழும்பிய சமுதாயத்திற்கு ஏற்ற உள்மருந்தையும் செலுத்திக்கொண்டிருக்கின்றது.

Advertisment

என்னதான் தினசரி நாளிதழ்களை வாசித்தாலும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்திட்டாலும், நடந்து முடிந்த ஒரு நிகழ்வின் மறைக்கப்பட்ட நிஜங்களையும், அதன் பின்புலத்தில் ஒளிந்துள்ள சகுனிகளின் சதிகளையும், முகமூடிக் கூனிகளின் கைங்கர்யங்களையும் சாமான்யனுக

parvai

"நக்கீரன்... விழுந்து கிடக்கும் சமுதாயத்தைத் தட்டியெழுப்பும் வேலையை மட்டும் செய்யவில்லை... எழும்பிய சமுதாயத்திற்கு ஏற்ற உள்மருந்தையும் செலுத்திக்கொண்டிருக்கின்றது.

Advertisment

என்னதான் தினசரி நாளிதழ்களை வாசித்தாலும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்திட்டாலும், நடந்து முடிந்த ஒரு நிகழ்வின் மறைக்கப்பட்ட நிஜங்களையும், அதன் பின்புலத்தில் ஒளிந்துள்ள சகுனிகளின் சதிகளையும், முகமூடிக் கூனிகளின் கைங்கர்யங்களையும் சாமான்யனுக்கு அடையாளம் காட்டும் ஒரே சத்தியக் கண்ணாடி “நக்கீரன். இவன் நடுநிலைக்காரன், நல்லவற்றைக் கூறுபவன், நய வஞ்சகங்களைச் சாடுபவன், நாட்டு நேசன், உண்மையின் நேர்ப்பரிமாணம், துணிவுக்குத் தூண்டுகோல், உறுதியின் நெம்புகோல்.

Advertisment

2018 பிப்ரவரி 13-15 இதழ்:

அன்றாட வாழ்க்கையை அங்குலம் நகர்த்துவதற்கே அல்லல்படும் அப்பாவி மக்களை, ஏமாற்றும் வித்தையாய் நாற்ற பெட்ஷீட் போன்றதொரு நைந்த பட்ஜெட்டை மத்திய அரசு சமர்ப்பிக்க அதன் சிதம்பர ரகசியங்களை ப.சிதம்பரம் வாயால் உரைத்தது, எத்துனை பேருக்கு உறைத்ததோ?.

கேடிகள் மத்தியில் வாழும் ஒரு தாடி பாலாஜி, நித்திய(யா) சோகத்தை மென்றுகொண்டு முத்திய காமெடியை வீசுகின்றார். இனி அவர் கூறும் தமாஷ்களுக்கு சிரித்தாலும் கண்ணீர் வரும். காமெடியர் வாழ்வில் சோகம் என்பது விதிக்கப்பட்ட விதியா? “

காலாவும்.. “"கமல்' ஆவும் குட்டையைக் குழப்பப் போகிறார்களோ? அல்லது புழுதியைக் கிளப்பப் போகிறார்களோ? தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிகிறது, மக்கள் தெளியக்கூடாது என்பதில் அரசியல்வாதிகளும் சரி... அரிதார வாதிகளும் சரி... ஒரே சிந்தனையோடுதான் இருக்கிறார்கள்.

வாசகர் கடிதங்கள்!

"டூ பீஸ்' தமிழச்சி!

"மேல்நாட்டு மருமகள்' கூட சேலை உடுத்தி தமிழக இளைஞர்களுக்கு வாக்கப்பட ஆசைப்படுகிறார். ஆனால் நம்ம சென்னைப் பொண்ணு நடிகை சமந்தாவின் "டூரிங் டாக்கீஸ்' காட்சியோ கண்களையும் கூசச் செய்கிறது. முத்தாய்ப்பாக, "செந்தமிழ்நாட்டு தமிழச்சியே நீச்சல் உடையில் மிரட்டுறியே' என ஆந்திர சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா குடும்பத்தாரையும் புலம்ப வைத்துவிட்டாரே!

-து.அருணகிரி, சென்னை-15.

தித்தோம் -குதித்தோம்!

மத்திய அரசு சொல்கிற "சாகர்மாலா' மீனவர்களின் வாழ்வாதாரத்தை நெரிக்கும் திட்டம் என்ற அச்சம் இருக்கலாம். அதன் நிறைகுறைகளை அலசட்டும். அதற்குள் "தகிட தகிட தித்தோம் கருத்துகளைச் சொல்லி கடற்களத்தில் குதித்தோம்' என்று அரசியல் தலைவர்களும் படையெடுத்தால் எப்படி?

-செ.திவாகரன், அரியலூர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe