நக்கீரரின் வாசகத்திற்கு சற்றும் குறையில்லாமல் அநீதியை எதிர்த்து மிகக்கடுமை காட்டிய, நக்கீரன் இதழின் கொள்கை என்னை வெகுவாக கவர்ந்தது.
ஆட்சியாளர்களின் வரம்புமீறல், அதிகாரிகளின் அத்துமீறல், கட்சி நிர்வாகிகளின் மற்றும் சமூக விரோதிகளின் கோர முகத்தை சமூகத்திற்கு தோலுரித்துக் காட்டிய நக்கீரனின் துணிவு மெச்சத்தக்கது. என்போன்ற நடுநிலையாளர்களை கவர்ந்திழுத்தது.
நக்கீரன் ஆசிரியரும், ந

நக்கீரன் ஆசிரியரும், நக்கீரன் குழுவும் ஆட்சியாளர்களால் கடும்சோதனைகளை சந்தித்ததை இதுவரை எந்தப் பத்திரிகையும் சந்தித்ததாக நான் கேள்விப்பட்டதும் இல்லை; பார்த்ததும் இல்லை. நக்கீரன் சந்தித்த சோதனைகளின் உச்சம் மிகசோகமானது. இன்றும் எனக்கு ஆற்றொணா துயரத்தை கொடுப்பது நக்கீரன் அர்ச்சகர் அய்யா கணேசன் உயிர்பறிக்கப்பட்ட சம்பவம், அவர்களுக்கு இந்த தருணத்தில் எனது நெஞ்சம் நிமிர்ந்த வீரவணக்கம்.
2018, பிப்ரவரி 16-18 இதழ்:
எப்பொழுதுமே நக்கீரனுக்கான கெத்தே அட்டைப் படம்தான். அந்தவகையில், இந்த இதழின் முக்கோண யுத்தம் அட்டைப்படம் மிக அருமை. அதேபோல ராங்-கால் பகுதியும் அடுத்து என்ன, அடுத்து என்ன என்பதுபோல இருக்கும். இந்த இதழில் எடப்பாடி-ஸ்டாலின் சந்திப்பு, சிறையில் சசிகலா சங்கல்ப யாகம் செய்தியும் அருமை.
"போதையில் மாணவிகள் -சிக்கிய வில்லன்கள்' செய்தி மிக, மிக அருமை. அந்தச் செய்தி புலனாய்வுப் பத்திரிகைக்கான அடையாளம். அந்தச் செய்தியில் பள்ளியின் பெயரையும் சேர்த்திருக்கலாம்... அப்போதுதான் பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்களைக் கண்டுகொள்ளாத அது போன்ற பள்ளிகளின் முகத்திரை கிழியும்.
வாசகர் கடிதங்கள்! புருவ நடனம்! நடிகை ப்ரியா வாரியரின் புருவ நடனம் வாவ். விடலைப் பருவத்தையெல்லாம் அதேபோல்... மேலும் கீழுமாக "எக்சர்ஸைஸ்' செய்ய வைத்த கண்குளிர் காட்சி. கேள்வி-பதில் வழியே முதியவர்களுக்குள்ளும் இளமை ஊஞ்சலாட வாய்ப்பளித்த "மாவலி'க்கு ஒரு ஹாட்ஸ்-ஆப். -சி.எஸ்.தேவநாதன், ஜெயங்கொண்டம். நிறம் மாறும் தமிழகம்! வர... வர தமிழ்நாடும் வடநாடுபோல நிறம் மாறி வருகிறது. புதுக்கோட்டை தலித்துகள் மீதான தாக்குதலைப் பார்க்கும்போது காவல்துறை மீதும் அரசாங்கத்தின் மீதும் இயல்பாகவே கோபம், அணை உடைத்து வெளியேறுகிறது. -வி.பி.அனலேந்தி, தூத்துக்குடி. |