Advertisment

பார்வை! முதல் வணக்கம்!  -தீபன் எம்.ஜி.ஆர்.

Deepan MGR

deepandMGR

க்கீரன் வாசகன் என்ற முறையில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் நான் நக்கீரனைப் பாராட்டி எழுதுவது என்பது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்று கருதுகிறேன். ஆரம்பக்கட்டத்தில் இருந்து இன்றுவரை டி.வி.க்கு நிகரான செய்திகளை வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு மேல் கொடுப்பதில் நக்கீரன் என்றும் சளைத்தது இல்லை. அந்த வகையில் மூன்று நாட்களுக்கு ஒரு இதழ் என்று வந்தபோதும் அதே அன்னப்பறவை போல் தீயவை நீக்கி நல்ல செய்திகளை சேகரித்துக் கொடுப்பதில் வ

deepandMGR

க்கீரன் வாசகன் என்ற முறையில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் நான் நக்கீரனைப் பாராட்டி எழுதுவது என்பது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்று கருதுகிறேன். ஆரம்பக்கட்டத்தில் இருந்து இன்றுவரை டி.வி.க்கு நிகரான செய்திகளை வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு மேல் கொடுப்பதில் நக்கீரன் என்றும் சளைத்தது இல்லை. அந்த வகையில் மூன்று நாட்களுக்கு ஒரு இதழ் என்று வந்தபோதும் அதே அன்னப்பறவை போல் தீயவை நீக்கி நல்ல செய்திகளை சேகரித்துக் கொடுப்பதில் வல்லமை படைத்தது நக்கீரன். ஏழை-எளிய மக்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து, அந்தப் பிரச்சினையை வேரோடு அழிப்பதில் நக்கீரன் தயக்கம் காட்டியதே இல்லை.

Advertisment

1988-ல் என்னுடைய கன்னிப் பேட்டியை நக்கீரன் தனது இரண்டாவது இதழிலே அட்டைப் படத்துடன் வெளியிட்டது. அது எனக்கு பெருமகிழ்ச்சியளித்தது. அதேபோல 30 வருடம் கழித்து 2017-ல் "ஜெ.வின் இறப்பில் சசிகலாதான் காரணம்' என்ற என் பேட்டியை நக்கீரன் வெளியிட்டது. இந்த இரண்டு கட்டுரையின் பார்வையானது அன்றும் இன்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது. இந்த பார்வைதான் நக்கீரன் இன்றுவரையிலும் போட்டி மிகுந்த ஊடகச்சூழலில் முன்னேறக் காரணமாக உள்ளது.

Advertisment

அப்பல்லோ விவகாரத்தில் நக்கீரன் வெளியிட்ட செய்திதான் இன்றுவரை உண்மையாக உள்ளது. அதை எவராலும் மறுக்க முடியாது.

2018, ஜனவரி 26-28 இதழ்:

"அன்று கோமா... இன்று மவுன விரதம்... விசாரணைக்கு டேக்கா! சசி டிராமா!'’என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. எப்போதும் தன்னுடைய பணியில் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பதில் தயக்கம் காட்டியதே இல்லை நக்கீரன்.!

நக்கீரன் மேலும்... மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசகர் கடிதங்கள்!

விஞ்ஞான பூதம்!

ஆதியிலே உயிர்கள் இருந்தன. அவை கால ஓட்டத்தில் தமது மெய்உருவத்தைப் படிப்படியாக இழந்து தற்போதைய இறுதிநிலையை அடைந்துள்ளன. மனிதனும் அதுபோன்ற இயற்கை விதியில் வளர்ச்சி கண்ட குரங்கு வகையறாதான். இதைப் பொய்யாக்க டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கு எதிராக அதிரடி சரவெடி வைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் சத்தியபால் சிங். "அத்துறையில் விஞ்ஞான பூதம் நான்' என்கிற அவரின் பேச்சுக்கு உயிரியல்பூர்வமா சங்கதி சேர்த்து கலக்கியிருக்கிறார் "அப்டேட்' கஸ்தூரி.

-ஆர்.பூபாலன், தர்மபுரி.

ஹார்ஸ் ரேஸ்!

டி.ஜி.பி. பதவியில் உட்கார்ந்து பார்த்துவிட ஐ.பி.எஸ்.களுக்குள் இத்தனை ரேஸா? இது ஹார்ஸ் பவரைவிட பலமடங்கு கூடுதலாக அல்லவா இருக்கு.

-ம.முத்துவேல், திண்டிவனம்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe