பார்வை!-கே.பி. ராஜகோபால்

rajagopal

rajagopal

ஞ்சாயத்து போர்டு முதல் பாராளுமன்றம் வரை ஆயிரம் ஆயிரம் அரசியல் செய்திகளை உள்ளடக்கி 3 நாளைக்கு ஒரு நக்கீரன் இதழ் வெளி வருவது சாதாரண பணியல்ல. நக்கீரனில் பல தகவல்கள் வெளிவந்த பிறகுதான் உளவுத்துறையினரே அதுபற்றி என்ன, ஏது என்று விசாரிக்கத் தொடங்குகிறார்கள். உளவுத்துறை ஆட்களை அதன் அதிகாரிகள் வேலைவாங்குகிறார்களே இல்லையோ, ஆனால் நக்கீரன் இதழ் வேலைசெய்ய வைத்துவிடுகிறது என்பதுதான் கள உண்மை.

ஜெயலலிதா தனது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நக்கீ

rajagopal

ஞ்சாயத்து போர்டு முதல் பாராளுமன்றம் வரை ஆயிரம் ஆயிரம் அரசியல் செய்திகளை உள்ளடக்கி 3 நாளைக்கு ஒரு நக்கீரன் இதழ் வெளி வருவது சாதாரண பணியல்ல. நக்கீரனில் பல தகவல்கள் வெளிவந்த பிறகுதான் உளவுத்துறையினரே அதுபற்றி என்ன, ஏது என்று விசாரிக்கத் தொடங்குகிறார்கள். உளவுத்துறை ஆட்களை அதன் அதிகாரிகள் வேலைவாங்குகிறார்களே இல்லையோ, ஆனால் நக்கீரன் இதழ் வேலைசெய்ய வைத்துவிடுகிறது என்பதுதான் கள உண்மை.

ஜெயலலிதா தனது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நக்கீரன் இதழை கவனமுடன் படித்திருந்தால் அவர் சிறைக்குள் அகப்பட்டிருக்கமாட்டார். காரணம் என்னவென்றால் அவரது வழக்குகள் அனைத்திலும் வக்கீல்கள் அவருக்கு தெரிவிக்கிற தகவல்களைவிட நக்கீரனில் அதிக தகவல்களும் அவருக்கான எச்சரிக்கைகளும் நிரம்ப இருந்தன என்பதுதான் உண்மை. ராங்-கால் பகுதி கண்ணுக்குப் புலப்படாத அரசியல் கணக்குகளையும் அரசியல்வாதிகளின் மறுபக்கங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது அருமை.

2018, பிப்ரவரி 25-27 இதழ்:

"ஏ.எஸ்.பி.யின் வெறியாட்டம் தெறிக்கவிட்ட தோழர்கள்' என்ற தலைப்பிலான செய்தி போலீசின் அகோர செயல்பாடுகளை மீண்டும் வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. காவல்துறை உங்கள் நண்பன் என்பதெல்லாம் மாமூல் வாங்கி கொடுப்பவர்களுக்குத்தான் என்பதை புரியவைத்திருக்கிறது.

"கூத்து' பக்கம் அரசியல் உள்குத்துகளையும், "மாவலி பதில்கள்' அனைத்தும் சமூகத்தின் நோய்களை கணிக்கிற, கவனிக்கிற, நடக்கப்போகிற நிகழ்வுகளை தீர்மானிக்கிற துல்லியமான கணிப்பாக உள்ளது. மாவலி பதிலில் ஆன்மிக அரசியல் ஏற்படுத்தும் நன்மைகள் தீமைகள் குறித்த கேள்விக்கு அளித்துள்ள பதில் தெளிந்த நீரோடைபோல் உள்ளது.

இதழின் உள்பக்கங்களில் ஆங்காங்கே ஒரு வரியில் சான்றோர்களின் தத்துவங்களை பதிவு செய்திருப்பது கூடுதல் பொலிவு. கூடுதல் சிறப்பு.!

வாசகர் கடிதங்கள்!

மக்கள் சீற்றம்!

கடலூர் கெடிலம் ஆற்றங்கரையில் இதுவரை தடுப்புச்சுவராக இருந்த 500 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அடுத்த பருவமழைக்கு முன்பே போர்க்கால நடவடிக்கையில் வெள்ளத் தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும். இல்லையெனில், ஊர்மக்களின் ஒட்டுமொத்த சீற்றத்துக்கும் அரசு ஆளாக வேண்டிவரும்.

-வா.அன்புச்செல்வன், வாழப்பாடி.

ஒய்யாரத் திருப்பணி!

குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு, "நானும் இத்தனை நாளா ஸ்லீப்பர் செல்லாத்தான் இருந்தேன்' என்பதை தினகரனிடம் இணைந்ததன் மூலம் பகிரங்கமாக நிரூபித்திருக்கிறார் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு. ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. பிரயத்தனப்பட வேண்டாம். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். பாலிடிக்ஸே அந்த திருப்பணியை ஒய்யாரமாக செய்து முடித்துவிடும்.

-ஆர்.சிவா, திருப்பூர்.

இதையும் படியுங்கள்
Subscribe