பார்வை!-எஸ்.டி.பசீர்அலி

baseerali

parvai

ண்மை -துணிவு -உறுதி என்ற கொள்கையை முன்னிறுத்தி 30 ஆண்டுகளாக பல சோதனைகளை கடந்தும் இன்றளவும் தன் கொள்கையில் உறுதியுடனும் போராட்டங்களுடனும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது நக்கீரன். நக்கீரனின் நீண்டகால வாசகன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பத்திரிகைத் துறையில் காலடி எடுத்து வைக்கும்பொழுது எழுந்த பல சவால்களையும் சங்கடங்களையும் சமாளித்து பீடுநடை போடுவது நக்கீரன் மட்டுமே. அக்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல பத்திர

parvai

ண்மை -துணிவு -உறுதி என்ற கொள்கையை முன்னிறுத்தி 30 ஆண்டுகளாக பல சோதனைகளை கடந்தும் இன்றளவும் தன் கொள்கையில் உறுதியுடனும் போராட்டங்களுடனும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது நக்கீரன். நக்கீரனின் நீண்டகால வாசகன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பத்திரிகைத் துறையில் காலடி எடுத்து வைக்கும்பொழுது எழுந்த பல சவால்களையும் சங்கடங்களையும் சமாளித்து பீடுநடை போடுவது நக்கீரன் மட்டுமே. அக்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல பத்திரிகைகள் காணாமல் போய்விட்டன. இன்றுவரை நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகளையும் ஆளும் கட்சியால் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் சந்தித்த பத்திரிகை நக்கீரன் மட்டுமே. அதனால்தான் நக்கீரன் வாசகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

நக்கீரனால் வெளிக்கொண்டுவரப்பட்ட "570 கோடி யார் பணம்?', "ஜெ.வின் கால்கள் எங்கே...' இப்படி எத்தனையோ அட்டைப்பட செய்திகளுக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை.

2018, பிப். 22-24 இதழ்:

"கவர்னர் மாளிகையில் பஞ்சாயத்து பேசுவதுதான் பிரதமரின் வேலையா?' என்ற நடுநிலையாளர்களின் கேள்வியை முன்னிறுத்தி அட்டைப்படத்தில் போட்டது தமிழக மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. பாரதத்தின் முதல்பிரதமர் தொடங்கி இப்போது உள்ள மோடி வரை தமிழின் பெருமையை பேசுவதோடு சரி. தமிழ் ஆதி மொழி என்பதால், ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டு வருவதில்லை. "நடிகர் பிரகாஷ்ராஜின் பேட்டி' உண்மையில் வெளிக்கொண்டுவர வேண்டிய செய்தி.

கஸ்தூரியின் கட்டுரையில் "ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை. ஆனால் காற்றும் மழையும் கொடுக்கும்' என்ற நோக்கில் தொகுத்திருக்கிறார். கமலின் அரசியல் பிரவேசம் ஆளுந்தரப்பின் நெருக்கடி. கட்டுரை நிருபருக்கு வாழ்த்துகள். வாட்ஸ்அப் செய்திகளில் நாட்டில் முதல் பணமற்ற பரிவர்த்தனையால் பஞ்சாப் நேசனல் பேங்க் மாறியுள்ளது ஆழமிக்கது.

வாசகர் கடிதங்கள்!

சஸ்பெண்ட்!

அரியலூர் மாவட்டத்தில் காண்ட்ராக்டர் விஸ்வநாதனுக்குரிய காசோலையை ஆண்டிமடம் ஒ.செ. செந்தில்ராஜா தன் கைப்பணமாக்கிக்கொண்டது முறையான செயல் அல்ல. இதற்காக திட்ட அலுவலக கிளார்க் பழனியாண்டியை குறைந்தபட்சம் ஒருவாரத்திற்காவது சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டாமா?

-அ.மேகநாதன், உத்திரமேரூர்.

சிந்திக்க!

பெண் குழந்தை ஹாசினியை எரித்துக்கொன்ற "தூக்குத்தண்டனை'க் குற்றவாளி தஷ்வந்த்துக்கு ஆதரவாக ஒரு பெண் வழக்கறிஞரே வாதாடப்போகிறாரா? இது அவருக்கான தொழிலே என்றாலும் கூட கொஞ்சம் தாயுள்ளத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

-ஆ.கி.நீலவேணி, துவாக்குடி.

இதையும் படியுங்கள்
Subscribe