parvai

நான் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கு எதிரான கருத்துகள் வெளிவந்தபோதெல்லாம் நான் நக்கீரன் மீது கோபம் கொண்டதுண்டு. பின்னாட்களில் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கிய பிறகு உண்மையைத்தானே எழுதியிருக்கிறார்கள் என்று நினைத்து என்னை நானே சமாதானம் செய்து கொண்ட நாட்கள் எண்ணிலடங்காது. ஆமாம்... புலனாய்வு இதழ்களில் நக்கீரன் உண்மையின் உரைகல்.

தமிழகத்தில் புலனாய்வு இதழ்களில் முன்னோடி இதழாக இன்றளவும் வலம் வந்துகொண்டிருக்கும் நக்கீரன் இதழின் வளர்ச்சிக்கும், செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் காரணகர்த்தாவாகத் திகழும் ஆசிரியருக்கும் அவரது தளபதிகளுக்கும் சபாஷ் போடத்தான் வேண்டும்.

2018, பிப்.28-மார்ச் 02 இதழ்:

Advertisment

ஜெ.வை அசிங்கப்படுத்திய அ.தி.மு.க. மந்திரிகள் செய்தியைப் படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் கசிந்தது. எளியவர்களைக்கூட அமைச்சர்களாக்கி அவர்களை பதவிகளில் உட்கார வைத்தும், உலா வரச்செய்த அந்த அன்னைக்கு சிலைவைத்து அழகு பார்க்க வேண்டியவர்கள் சிலை வடிவமைப்பில் கோட்டைவிடலாமா என்ற ஆதங்கம் என்னுள் கோபத்தை ஏற்படுத்தியது.

"கமல் தந்த உத்தரவாதம்' அவரது தொண்டர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்.. பொது மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது.

"ஆளுங்கட்சி மல்லுக்கட்டு, மந்திரிக்கு எதிராக போர்க்கொடி'…தொண்டர்களையும், கடைக்கோடி நிர்வாகிகளையும், அனுசரித்துச் செல்லாவிட்டால் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அடுத்து தலை தூக்கவே முடியாது என்பது வரலாறு.

Advertisment

"தேவைப்பட்டால் மீண்டும் மக்கள் நலக்கூட்டணி வரும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியைப் படித்தபோது, மறுபடியும் முதலில் இருந்தா...

"இதுதான் நாகரிகமா'…மற்றும் "பாண்டி வரை துரத்திய பஞ்சாயத்து' கட்டுரைகளில் பிரதமரை இந்த அளவுக்கு தன் நிலையை தாழ்த்திக்கொண்டு செயல்படுவாரா என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியும், அதிருப்தியும்தான் ஏற்பட்டது.

வாசகர் கடிதங்கள்!

அக்கறையின்மை!

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் மீது மாணவர்களின் தேர்ச்சியின்மைக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனாலும் கூட மாணவர்களுக்குப் பாடங்களில் "அக்கறையின்மை'யே விருப்பப்பாடமாக இருக்கும் எனில், இன்ஜினியர் கனவு என்பது சுழியத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-கரு.விநாயகம், மணப்பாறை.

முதல்வரின் புலம்பல்!

புதுவை முதல்வருக்கு வாரியத் தலைவர்கள் பிரச்சினை என்பது, தோரியத்தை தனி ஆளா வெட்டி எடுக்கும் சிரமம் போல ஆகிப்போச்சு. போதாக்குறைக்கு, "நான் மீண்டும் டெல்லிக்கே ஷிப்ட்' என்கிற நிலைக்கு அவரைப் புலம்பவும் வைத்துவிட்டது.

-கே.நமச்சிவாயம், மதுரை.